புற்று நோய் தொடர்பாக பல்வேறு சேவைகளை பாராட்டி கீழக்கரை நகர் நல இயக்கத்துக்கு விருது

haja anees
தென் தமிழகத்தில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மட்டுமே குழந்தைகளுக்கான சிறப்பு புற்றுேநாய் சிகிச்சை மையம் உள்ளது. இதில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு, குழந்தைகளுக்கான எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு அறுவை சிகிச்சை பிரிவும் உள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக இதுவரை 1500க்கும் மேற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மற்றும் ரத்தம் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 80 சதவீதம் பேருக்கும் இலவச சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை டிரஸ்ட் சார்பாக, புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்கான மறு வாழ்விற்கும், மேல் சிகிச்சைக்கும் ஏற்பாடுகள் செய்து வருகிறது இதற்காக நிதி உதவியும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தியமைக்காக கீழக்கரை நகர் நல இயக்கத்துக்கு விருது வழங்கப்ப்பட்டது.
மீனாட்சி மிஷன் புற்று நோய் சிறப்பு மருத்துவர் காசிராஜன், கீழக்கரை நகர் நல இயக்கத்தின் பொருளாளர் .ஹாஜா அனீஸ் அவர்களுக்கு விருதும், பாராட்டுப் பத்திரமும் வழங்கி கவுரவித்தனர் இச்சேவையில் ஈடுபடும் மருத்துவர்களுக்கும் சமூக நல அமைப்புகளுக்கும் விருது வழங்கப்பட்டது.
மருத்துவர்கள் தவிர்த்து இந்த வருடம் இந்தியாவிலேயே இரண்டு சமூக நல அமைப்புகளுக்கு விருது வழங்கப்பட்டது இதில் ஒன்று கீழக்கரை நகர் நல இயக்கமும் ஒன்றாகும் தொடர்ந்து பல வருடங்களாக இந்த விருதை நகர் நல இயக்க பெற்றுள்ளது குறிப்பிடதக்கது

கீழக்கரை நகரில் சமூக சேவைகளில் சிறப்பான தொண்டாற்றி வருகிறது ‘கீழக்கரை நகர் நல இயக்கம்’

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *