சுகாதார நடவடிக்கை குறித்து கீழக்கரை நகராட்சி உறுதி ! ஆகஸ்ட் 7ந்தேதி புகார் குறித்த சந்திப்பு ஒத்திவைப்பு

muni5555 muni9555 muni955566
சுகாதார நடவடிக்கை குறித்து கீழக்கரை நகராட்சி உறுதி ! ஆகஸ்ட் 7ந்தேதி புகார் குறித்த சந்திப்பு ஒத்திவைப்பு

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கீழக்கரை நகராட்சி பகுதிகளில் நிலவும் மர்மகாய்சசல் சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர்,சுகாதார துறை அதிகாரிகளின் கவனத்திற்கு மனு மூலம் கொண்டு செல்ல இருப்பதாக மக்கள் நல பாதுகாப்புக் கழகம் மற்றும் மக்கள் டீம் சார்பாக கீழக்கரை சமூக அமைப்புகளுக்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது.

இந்த தகவல் கீழக்கரை டைம்ஸ் இணைய தள பக்கத்தில் வெளிடப்பட்டு இருந்தது.

இதை அறிந்த கீழக்கரை நகராட்சி துறையும்,மாவட்ட சுகாதார துறையும் தனது பணிகளை முடுக்கி விட்டுள்ளது.இன்று காலை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை துணை இயக்குனர் திரு குமரகுரு,மாவட்ட மருத்துவம் மற்றும் மலேரியா சுகாதார ஆய்வாளர் திரு உதயகுமார்,கீழக்கரை நகராட்சி ஆணையர் திருமதி வசந்தி,சுகாதார ஆய்வாளர் திரு திண்ணாயிர மூர்த்தி, சுகாதார மேற்பார்வையாளர் திரு மனோகரன்,திரு சக்தி வேல்,திரு ஹாஜா முகைதீன்,பிட்டர் லட்சுமணன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சுகாதாரம்,நோய் தடுப்பு சம்பந்தமாக துரித நடவடிக்கை மேற்கொண்டனர்.கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் டேங்க்களில் மேல் பகுதிக்கு சென்று டேங்க் சுகாதாரம் குறித்து ஆய்வு செய்தனர்.மற்றும் கீழக்கரை பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு வரும் வாகனங்களில் குளோரினோஷன் செய்யப்பட்டு நோய் கிருமிகள் அழிக்கப்பட்டு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என குடிநீர் வாகனம் வைத்து இருப்பவர்களுக்கு சுற்றரிக்கை அனுப்பப்பட்டு இருப்பதுடன் மீறினால் அபராதத்துடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவலை நகராட்சி வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் சம்பந்தமாக மக்கள் நல பாதுகாப்புக் கழகம் மற்றும் மக்கள் டீம் பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து பேசிய கீழக்கரை நகராட்சி ஆணையர் அவர்கள் தற்போது நகராட்சி நிர்வாகமும்,மாவட்ட சுகாதார துறையும் துரித நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதை சுற்றிக்காட்டினார்.

இது சம்பந்தமாக மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் நிர்வாகிகளும்,மக்கள் டீம் நிர்வாகிகளும் கூறுகையில் தற்போது நகராட்சி நிர்வாகம் நோய் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பதாலும்,கீழக்கரை நகராட்சி ஆணையர் அவர்கள் அளித்துள்ள வாக்குறுதியை ஏற்று 7ம்தேதி தேதி சந்திப்பதாக இருந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட சுகாதார துறை சந்திப்பை ஒத்தி வைப்பதாக தெரிவித்தனர்.⁠⁠⁠⁠

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *