கீழக்கரையில் இருளில் முக்கிய பகுதி ! நடவடிக்கை எடுக்குமா நகராட்சி

currenn94 curr
கீழக்கரை இருளில் முக்கிய பகுதி ! நடவடிக்கை எடுக்குமா நகராட்சி

நமதூரில் தொடர்ந்து பல்வேறு காரணங்களால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதும்,போதிய அளவில் தெரு விளக்குகள் எரியாமல் இருப்பதும்,அதன் மூலம் இரவு நேரங்களில் குறிப்பாக சிறுவர்கள்,பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவதும் தொடர் கதையாகி விட்டது.

கீழக்கரையில் முஸ்லீம் பஜார் லெப்பை டீக்கடை அருகிலிருக்கும் வழியாக இந்து பஜாருக்கு செல்லும் பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருளில் முழ்கி கிடக்கிறது .இப்பகுதியில் இரவு நேரங்களில் பெண்கள் அதிகப்படியாக பயன்படுத்துகிறார்கள்.

இப்பகுதியில் தெரு விளக்கு போதிய அளவு இல்லாமல் இருளில் இருப்பதால் அப்பகுதி வழியே செல்வதில் சிரமம் ஏற்படுகிறது உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சீர் செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்கள்

இது குறித்து முன்னாள் கவுன்சிலர் ஜஹாங்கிர் ஹுசைன் கூறுகையில்..

ஊரின் பல பகுதிகளில் இந்த அவலநிலை தொடர்ந்தாலும்..குறிப்பாக லெப்பை டீ கடையில் இருந்து செக்கடிக்குள் போகும் நுழைவு பகுதி ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் இருளில் மூழ்குவது அதிர்ச்சியை தருகிறது.
சிறு,சிறு கடைகள் வைத்து நடத்தும் நமதூர் பெண்கள் தங்களின் கடைகளுக்குரிய பொருட்கள் வாங்க இந்த வழியைத்தான் பயன் படுத்துகிறார்கள்.இரவு 9.30 மணிக்கெல்லாம் அந்த பகுதி இருளில் மூழ்குவதால்…ஒரு வித அச்சத்துடன் செல்லும் நிலையே நீடிக்கிறது.
நகைக்கடை உரிமையாளர்கள் தங்களின் வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை அடைத்து விடுவதாலும்,அந்த பகுதியில் போதிய தெரு விளக்குகள் இல்லாததாலும் இரவு 9.30 மணிக்கு அந்த பாதையை பயன்படுத்தும் பெண்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கிறார்கள்.
நமதூர் சிறு,பெரு வணிகர்களின் முக்கிய வீதியான இந்த பகுதிக்கு தேவை ஒளிரும் விளக்குகள்.தயவு செய்து இதை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேணுமாய் அன்புடன் வேண்டுகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *