கீழக்கரையில் தொடர் மின் தடையால் பொதுமக்கள் அவதி .. தமுமுக கண்டனம்

tmmk995

கீழக்கரை நகர் தமுமுக செயலாளர் சிராஜீதீன் கூறுகையில்…

தொடர்ந்து கீழக்கரை நகர் மற்றும் சுற்றுபுற ஊர்களில் கடந்த இரண்டு மாதங்களாக தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகின்றன சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டால் ஏதாவது சாக்குபோக்கு சொல்வது வாடிக்கையாக உள்ளது உண்மையிலேயே கீழக்கரை மின்வாரிய அலுவலகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை எத்தனை கண்டன அறிக்கை விட்டாலும் தமிழக அரசு போலவே கீழக்கரை மின்வாரிய அதிகாரிகள் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டால் கூட கவலைப்படாமல் உள்ளனர்.

மாதாந்திர பராமரிப்பு பணிகள் மாதத்தின் கடைசி நாளில் வைத்துக்கொள்ளலாம் ஒரு நாள் முழுவதும் என்ன பராமரிப்பு பணிகள் செய்கிறார்கள் என்பதை பொதுமக்களுக்குவிளக்கவேண்டும் அல்லது உண்மையிலேயே மின்தட்டுப்பாடு இருக்கிறது என்றால் அதை பகிரங்கமாக பொதுமக்கள் க்கு விளக்குவதற்கு மின்வாரிய அதிகாரிகள் க்கு என்ன தயக்கம்?

இப்படியே அடிக்கடி மின்தடை ஏற்பட்டால் கோபம்கொண்ட பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடுவதைதவிர வேறு வழியில்லை ஒரு வேலை அரசுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என்று இந்த அதிகாரிகள் நினைக்கிறார்களோ என்னவோஉடனடியாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் கீழக்கரை மின்வாரிய அலுவலகத்தை முழு ஆய்வு செய்து மக்களுக்கு உண்மை நிலவரத்தை தெரிவிக்க வேண்டும் என்று தமுமுக சார்பில் கேட்டுக் கொள்கிறோம்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *