கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் மெகா உணவு திருவிழா

ff84 ff95 fff4455 fffff ffffff944 f383

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற மெகா திருவிழாவில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு தங்களது சமையல் திறனை வெளிப்படுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள இஸ்லாமியா மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆண்டுதோறும் மாணவிகளின் சமையல் திறனை வெளிப்படுத்தும் விதமாக சமையல் திருவிழா நடத்தப்படுகிறது. இவ்வருடம் பெற்றோர்களும் பங்கேற்ற பிரம்மாண்ட உணவு திருவிழா நடைபெற்றது.

நடப்பு ஆண்டுக்கான திருவிழா குறித்து அறிவிப்பு செய்யப்பட்டதும் வழக்கத்தை விட 150க்கும் அதிகமான மாணவிகள் ஆர்வத்துடன் போட்டி போட்டுக் கொண்டு பெயர்களை பதிவு செய்தனர். பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சமையல் சாதனங்கள்,பல்வேறு வகையான பழங்கள், மசாலா பொடிகள் சகிதமாக மாணவிகள் களத்தில் குதித்தனர்.

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் உற்சாகத்துடன் பல்வேறு வகையான உணவுகளை ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு இணையாக மின் அடுப்பில் உணவுகளை தயாரித்தனர். மாணவிகள் தயாரித்த உணவு சிறப்பு பார்வையாளர்களின் நாக்கை சப்புக் கொட்ட வைத்தது. மாணவிகளின் தனித் திறமையில் கம்பு போன்ற சிறு தானியங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள் பிரமிக்க வைத்தன. பழங்களில் பல்வேறு வகையான பானங்கள் தயாரித்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்தனர்.

இஸ்லாமியா பள்ளி தாளாலர் எம் எம் கே முஹைதீன் இப்ராஹிம் , பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியை ஆசிரியைகல் பங்கேற்றனர்

பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இபுராகிம் கூறியதாவது: வழக்கமாக இப்படிப்பட்ட நிகழ்வுகள் கல்லூரிகள் நடப்பது வழக்கம். கடந்த நான்கு ஆண்டுகளாக பள்ளியில் இந்த திருவிழாவை சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்தி வருகிறோம். இந்த நிகழ்ச்சி பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எனவே இந்த ஆண்டு பெற்றோர்கள் முன்னிலையில் மெகா உணவு திருவிழாவாக நடத்தப்பட்டது. என்றார்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *