கீழக்கரை மறவர்தெருவில் பள்ளி அருகே திறந்து கிடக்கும் கால்வாயால் ஆபத்து.

gyகீழக்கரை பள்ளி அருகே திறந்து கிடக்கும் கால்வாயால் ஆபத்து.

கீழக்கரையில் மறவர்தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் நடுரோட்டில் உள்ள கால்வாய் மூடியில்லாமல் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

கீழக்கரை 1வது வார்டு மறவர்தெரு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளின் அருகில் நடுரோட்டில் கழிவு நீர் கால்வாய் மூடி உடைந்து கடந்த ஆறு மாதங்களாக திறந்தே உள்ளது இதில் பள்ளியில் பயிலும் சின்னஞ்சிறு குழந்தைகள் அவ்வபோது விழுந்து சிறு காயங்களுடன் செல்கின்றனர், ஆகவே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து செல்வம் கூறுகையில், 1வது வார்டு மறவர்தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் உள்ள கால்வாய் மூடி உடைந்து 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இந்த கால்வாயில் சின்னஞ்சிறு குழந்தைகள் விழுந்து சிறு சிறு காயங்களுடனும், டூவீலரில் செல்பவர்கள் இரவில் வரும் போது அதில் விழுந்து காயங்களுடனும் செல்கின்றனர், இதுகுறித்து இப்பகுதி மக்கள் நகராட்சியில் புகார் அளித்தால் வந்து பார்த்து செல்கின்றனர், அதை மூடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இந்த கால்வாய் திறந்து இருப்பதால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி இரவில் வீட்டில் து£ங்கமுடியாமல் பொது மக்கள் தவித்து வருகின்றனர், ஆகவே பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் இப்பகுதி பொது மக்களின் நலகைன கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த கால்வாய்க்கு தரமான மூடிகளை போட்டு மூடவேண்டும் என்றார்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *