உடைக்கப்படும் இளைஞர்களின் முயற்சி .. கனவாகும் கீழக்கரை பூங்கா..

uddd
naaa000mamoo667

கீழக்கரை கடற்கரை பகுதியில் வராலாற்று ஆய்வாளர் அபு சாலிஹ் தலைமையிலான இளைஞர்கள் பல ஆண்டுகளாக கிடந்த குப்பைகளை அகற்றி வள்ளல் சீதக்காதி மண்டபம் அமைந்துள்ள பகுதியை சுத்தப்படுத்தினர் அதோடு கிளீன் கீழக்கரை என்ற டிரஸ்டை உருவாக்கி மக்கள் பயன்பாட்டிற்காக‌ சுமார் ரூ 7 லட்சம் செலவில் அப்பகுதியில் 400 சதுர மீட்டரில் சுற்றுப்புற சூழல் பூங்கா அமைக்க தொடங்கினர் இப்பணியில் கீழக்கரை சதக் கட்டிட கலை கல்லூரி மாணவர்கள் கீழக்கரை பிரமுகர்கள் கீளீன் கீழக்கரை அறக்கட்டளை இணைந்து சொந்த செலவில் கீழக்கரை நகராட்சி ஒத்துழைப்போடு இப்பணி நடைபெற்று வந்தது இவர்கள் இப்பணிகளில் ஈடுபட்டனர். இதற்காக பேரீச்சம் மரங்கள் கொண்டு வரப்பட்டு நடப்பட்டத்து

பூங்காவிற்கான வேலைகள் முக்கிய கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கையில் சுங்கத்துறையினர் சுங்கத்துறையினருக்கு அனுமதி உள்ள‌ இடம் இங்கு பூங்கா அமைக்ககூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர் அதோடு தன்னார்வ தொண்டர்கள் பணியாற்றும் கல்லூரி மாணவர்களை பணியாற்ற விட வேண்டாம் என கல்லூரி நிர்வாகத்திற்கும் கடிதம் அனுப்பி மாணவர்களை பணி செய்ய வர விடாமல் தடுத்து விட்டனர்.

நகராட்சி நிர்வாகத்திற்கும் நெருக்கடி தரப்பட்டு விட்டதால் முதலில் அனுமதி தந்து தற்போது நகராட்சி நிர்வாகம் உரியவர்களுக்கு பூங்காவை அகற்ற கோரியும், அகற்ற மறுக்கும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி விட்டது

இதனால் இளைஞர்களால் குருவி கூடு கட்டுவது போன்று உருவாக்கிய சிறிய பூங்கா தற்போது கலைக்கப்பட்டு வருகிறது. அங்கு அமைக்கப்பட்ட சிமெண்ட் மேடைகள் அகற்றப்பட்டு வருகிறது.

முன் எப்போது இல்லாத அளவில் தற்போது அனைத்து அரசு நிர்வாகமும் நடவடிக்கை எடுப்பதற்கு என்ன காரணம் என்றும் இதற்கு பிண்ணனியில் இருப்பவர்கள் யார் என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ள்னர்

இது குறித்து பொதுமக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். கீழக்கரை மக்கள் எத்தனையோ ஆண்டுகளாக கடற்கரைபகுதியில் பூங்கா அமைக்க கேட்டு வரும் நிலையில் இளைஞர்கள் சொந்த காசை செலவழித்து அந்த‌ இடத்தை சுத்தப்படுத்தி பூங்கா அமைத்து வருகின்றனர். இப்பகுதி அசுத்தமடைந்து குப்பை கிடங்காக கிடந்த‌ இத்தனை ஆண்டு காலம் சுங்கத்துறை என் அந்த இடத்தை பராமரிக்கவில்லை ?

இந்த இட விசயத்தில் வெகு வேகமாக சுங்கத்துறையினர் நடவடிக்கை எடுக்க பிண்ணனியில் இருப்பது யார் … மேலும் இந்த‌ பூங்காவை அகற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வருகிறது. இது உண்மையென்றால் மிகவும் கண்டிக்கதக்கது.இளைஞர்கள் முயற்சி விரையாமாவது மிகவும் வேதனைக்குறியது இந்த இடம் யாருக்கு சொந்தமானது நகராட்சிக்கா, சுங்கத்துறைக்கா என்பதை உரியவர்கள் கண்டறிய வேண்டும் அதோடு தன்னார்வாமாக பணியாற்றும் இளைஞர்கள் பூங்கா எங்களுக்குதான் என சொந்தம் கொண்டாடவில்லை அப்படியிருக்கும் போது பூங்கா பணிகள் நிறைவு பெற்ற பின்னர் உரியதுறையினர் அந்த பூங்காவை பரமாரித்து கொள்ளளலாம் அதனை விடுத்து பூங்கா அமைய விடாமல் தடுப்பது அநீதியாகும். உடனடியாக கீழக்கரை நகராட்சி உள்ளூர் பிரமுகர்கள் அமர்ந்து பேசி இதற்கு சுமூக முடிவு காண வேண்டும் அதோடு மாவட்ட கலெக்டர் தலையிட வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *