கீழக்கரை டிஎஸ்பி மஹேஸ்வரிக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் நேர்மையாளர் விருது

dsp kl dsp kl988 dsp kl98800 dsp kl9877 dsp kl6557
dsp publicabu salih

விருதுநகருக்கு பணியிட மாற்றலில் செல்லும் கீழக்கரை டி எஸ்பி மஹேஸ்வரிக்கு கீழக்கரை பொதுமக்கள் சார்பில் பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட ஜமாத்தார்கள், சர்ச் பாதிரியார், கல்லூரி முதல்வர், தாசில்தார், மற்றும் ஊர் முக்கியஸ்தர்களுடன் ஊர் பொது மக்கள் மற்றும் டி எஸ்பி மஹேஸ்வரியின் பெற்றோரும் பங்கேற்றனர்.

இதில் உரையாற்றிய டிஎஸ்பி மஹேஸ்வரி …

கீழக்கரை மக்களின் அன்பை என்றென்றும் மறக்க முடியாது இங்குள்ள‌ ஒவ்வொருவருவரும் எனது சிறப்பான பணிக்கு காரணமாக அமைந்தார்கள் அதிலும் ரத்த தானம் என்றெதும் முன்னிலையில் இருப்பது இப்பகுதி மக்களாகும் இதனை நான் உணந்துள்ளேன் எனக்கு தெரிந்த சிலருக்கு இங்குள்ள நண்பர்கள் ரத்த தானம் செய்துள்ளார்கள் .

எங்கிருந்தாலும் கீழக்கரை பகுதி மக்களை மறக்க மாட்டேன் ஒத்துழைப்பு அழைத்த அனைவருக்கும் நன்றி என்றார்

கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பில் பிரிவு டிஎஸ்பி மஹேஸ்வரிக்கு நேர்மையாளர் விருது வழங்கப்பட்டது.அதே போன்று கீழக்கரை மக்கள் சார்பிலும் அவருக்கு பாராட்டி விருது வழங்கப்பட்டது.
கீழக்கரையை சேர்ந்த ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *