கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளியில் சுதந்திர தின விழா

கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளி சுதந்திர தின விழா
pppp0000

ppp777

ppp

கீழக்கரை கண்ணாடி வாப்பா இண்டர்நேஷனல் பள்ளியில் 71-வது சுதந்திர தின விழா மற்றும் மாணவர் மன்றப் பிரதிநிதிகளின் பதவியேற்பு விழாவும் (71st Independence Day & Investiture Ceremony of Students Council) விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மாணவி ஷாஃபியா இறைமறை ஓத விழா இனிது துவங்கியது. மாணவ மணிகளுக்கு அறிவொளி ஏற்றும் ஆசிரியப் பெருந்தகைகள் முன்னிற்க, மூத்த ஆசிரியர்களான நிர்மல் சிங் மற்றும் முஹம்மது ஷரிஃப் ஆகியோர் கொடியேற்றி மாணவ மணிகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றனர்.

பின்னர் முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி டீன் முனைவர் ஜே. முஹம்மது ஜஹாபர் முன்னிலையில், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் மன்ற தலைவர், உப தலைவர், பிரதம மந்திரி, சபாநாயகர் உட்பட கல்வி, கலாச்சாரம், சமூகநலம், விளையாட்டு, போக்குவரத்து, பாடம்சாரா செயல்துறை (CCA) போன்ற ஏனைய துறை மந்திரிகட்கும் மாணவ அணித்தலைவர்கட்கும் அடையாளப் பட்டய வில்லை (Badge) அவரவர் அன்னையர்களால் அணிவிக்கப்பட்டு சிறப்பு உறுதிமொழியுடன் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாணவர்கள் பொறுப்புகளை ஏற்பதோடு கடமையுணர்வுடன் நடக்க வேண்டும் எனவும், மாணவர்கள் வீட்டிற்கு நல்ல பிள்ளைகளாகவும், பள்ளிக்கு நல்ல மாணவர்களாகவும், நாட்டிற்கு நல்ல குடிமக்களாகவும் விளங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இளஞ் சிறார்களின் குறுநாடகங்கள், நாட்டுப்பற்றுப் பாடல்கள், நடனங்கள் கருத்தினைக் கவர்வதாக இருந்தன. மாணவர்களின் இன்றைய சூழலுக்கேற்ற விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகம் நடந்தேறியது. மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் சுதந்திர தின உரைநிகழ்தினர். பள்ளி முதல்வர் இராஜேஷ் கிருஷ்ணன் இளஞ்சிறார்களிடம் தற்போது பெருகிவரும் ‘மொபைல் கேம்’ மோகத்தின் பின் விளைவுகளை எடுத்துக்கூறி பெற்றோர்கள் தமது குழந்தைகளை அவற்றிலிருந்து தற்காத்து, தவிர்த்துக் கொள்வதின் அவசியத்தையும், சுற்றுச்சூழல் தூய்மை குறித்தும் வலியுறுத்தினார். விழா ஏற்பாடுகளை பள்ளி மேலாளர் அபுல் ஹசன் ஒருங்கிணைத்தார். மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *