காஞ்சிரங்குடி அரசு பள்ளி மைதானத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பியால் மாணவர்கள் அச்சம்.

kilakarai kangirankudi school

காஞ்சிரங்குடி அரசு பள்ளி மைதானத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பியால் மாணவர்கள் அச்சம்.

கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மிக தாழ்வாக மின்கம்பி செல்வதால் மாணவர்கள் விளையாடுவதற்கு முடியாமல் வெளியில் சென்று விளையாடுகின்றனர், ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பள்ளின் உள்ளே செல்லும் மின்கம்பியை பள்ளிக்கு வெளியில் சாலையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி கிராமத்திலிருந்து பக்கீர் அப்பா தர்ஹாவரை உள்ள கிராமங்களுக்கு காஞ்சிரங்குடியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் உள்ளேயே மின்கம்பங்கள் ஊண்டப்பட்டு மின்கம்பிகள் கட்டப்பட்டுள்ளது, இந்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாகவும், மரத்திற்கிடையிலும் செல்வதால் அதிகமான காற்று வீசினால் கூட ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி பறக்கின்றது, இதனால் மாணவர்கள் கைபந்து மற்றும் கால்பந்து விளையாடுவதற்கு மிகவும் அச்சப்பட்டு வருகின்றனர், ஆகவே மாவட்ட நிர்வாகம் பள்ளிக்கு வெளியில் மின்கம்பங்களை ஊண்டி மின்கம்பிகளை கட்டி மாணவர்களின் அச்சத்தை போக்க வேண்டும்.

இதுகுறித்து காஞ்சிரங்குடி ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், பள்ளியின் உள்ளே செல்லும் மின்கம்பியை பள்ளிக்கு வெளியில் கொண்டு செல்ல வேண்டும் என்று ஜமாஅத் சார்பில் மின்வாரியத்திற்கு பலமுறை மனுசெய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இடைத்தரகரை வைத்து ரூபாய் பல ஆயிரங்கள் கேட்கின்றனர், இந்த கிராமத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் கூலி தொழிலாளர்கள் எங்களால் அவ்வளவு பணம் செலவு செய்ய முடியாது, ஆகவே மாவட்ட நிர்வாக அதிகாரிகள் இப்பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பள்ளிக்கு உள்ளே தாழ்வாக செல்லும் மின்கம்பியை வெளியில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *