ins sus

குற்றவாளிக்கு உடந்தையாக இருந்ததாக இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் ராமநாதபுரம் எஸ்பி அதிரடி நடவடிக்கை

ins susக‌டத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த குற்றவாளிக்கு உடந்தையாக இருந்ததாக மண்டபம் இன்ஸ்பெக்டர் தனபாலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ராமேஸ்வரத்தை சேர்ந்த செல்வக்குமார். . சில ஆண்டுகளுக்கு முன் கீழக்கரையில் ரூ.9 லட்சம் ரொக்கம் மற்றும் கைத்துப்பாக்கி, அதற்குரிய தோட்டாக்கள் ஆகியவற்றுடன் செல்வகுமார் பிடிபட்டார்.இவர் மீது ஏற்கெனவே கடத்தல் வழக்குகள் உள்ளன‌

இந்த வழக்குகளில் ஜாமீனில் வெளி வந்த செல்வகுமார் மீண்டும் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். பாம்பன், மண்டபம், மதுரை ஆகிய பகுதிகளில் கஞ்சா கடத்திய போது போலீசாரிடம் சிக்காமல் தப்பி விட்டார். இந்த வழக்குகள் தொடர்பாக செல்வகுமாரை க்யூ பிரிவு போலீஸார், சுங்கத்துறையினர், தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவினர் என பலரும் தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் செல்வகுமார் ராமேஸ்வரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்திருப்பதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து செல்வகுமாரை பிடிக்க சென்ற போது அவர் காரில் தப்பி சென்றார். பாம்பன் பாலத்தில் போலீஸார் செல்வகுமாரை மடக்க முயன்ற போது தனது காரை நிறுத்திவிட்டு செல்வகுமார் தப்பி ஓடிவிட்டார். செல்வகுமாரின் காரை கைப்பற்றிய மண்டபம் போலீஸார் தப்பி ஓடிய செல்வகுமாரை தேடி வந்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம் ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸார் வாகன சோதனையின் போது செல்வகுமார் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், செல்வகுமார் கடத்தலில் ஈடுபடவும், போலீஸாரிடம் சிக்காமல் இருக்கவும் காவல்துறையினரே துணை போனது தெரியவந்தது. இதையடுத்து செல்வகுமாரின் கைபேசியினை ஆய்வு செய்தபோது அதில் மண்டபம் காவல் நிலைய ஆய்வாளர் தனபாலனுடன் அடிக்கடி பேசியிருப்பது தெரியவந்தது. மேலும், வழக்குகளில் இருந்து விடுவிக்க ஆய்வாளர் தனபாலன் பணம் பெற்றிருப்பதும் தெரியவந்தது.

manivannan sp
எஸ் பி மணிவண்ணன்

போலீஸாரால் தேடப்படும் குற்றவாளியுடன் தொடர்பு வைத்திருந்த ஆய்வாளர் தனபாலன் குறித்த தகவல்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு தெரியவந்தது. இதையடுத்து கண்காணிப்பாளர் மணிவண்ணன், ஆய்வாளர் தனபாலனை பணியிடை நீக்கம் செய்ய டி.ஐ.ஜி.க்கு பரிந்துரை செய்தார். இதனடிப்படையில் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) அனந்தகுமார் சோமானி, தனபாலனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும், செல்வகுமாருடன் தொடர்பு வைத்திருந்த இன்னும் சில போலீஸார் மற்றும் க்யூ பிரிவு போலீஸார் பற்றிய தகவல்களும் தெரியவந்திருப்பதாக தெரிகிறது. அவர்கள் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

மாவட்ட கண்காணிப்பாளரின் இந்த நடவடிக்கையால் ராமநாதபுரம் போலீஸார் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.

Comments

comments

One comment

  1. சுரேஷ்கு மார்

    http://keelakaraitimes.com/inspector-suspended/

    ஐயா வணக்கம்
    நான் ஒரு சோசியல் சேவகர்.
    மேற்கண்ட இன்ஸ்பெக்டர் உண்மைல்யிலே குற்றவாளியா?
    அன்றைய தினம் (21st Dec. 2015) அணைத்து ஊடகம், தொலைகாட்சியில் ஒளிபரப்பானது
    இந்த சம்பவம் நடந்த மூன்று மாதம் சஸ்பெண்டில் இருந்து மறுபடியும் வேளையில் ஏறிவிட்டார். கடந்த ஒன்டரை வருடமாக துத்துக்குடி மாவட்டத்தில் வேலை செய்து மறுபடியும் நம்ம ராமநாதபுரம் மாவட்டத்திற்கே பணி மாறி வந்துள்ளார். மறுபடியும் அவர் தனது லஞ்சம் ஊழல் லீலைகளை நடத்திவருகிறார். அவரைப்பற்றி மேலும் அறிந்தால் தயவு செய்து தகவல் அனுப்பவும். பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டியவர்கள் இப்படிபட்ட தேச துரக காரியங்களில் ஈடுபட்டால் விட்டு வைக்க கூடாது.
    Jaihind!!!!
    Happy Independence day.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *