accident1

இந்தியாவில் 75,000 இளைஞர்கள் விபத்தில் பலி!

இந்தியாவில் 2014 ல் நடைபெற்ற சாலை விபத்துகளில் 15க்கும் 34க்கும் இடையிலான 75,000 இளைஞர்கள் பலியானதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 82 சதவீதம் பேர் ஆண்கள். நாடு  முழுவதும் ஏற்பட்ட  விபத்துகளில் மொத்தம் பலியான 1,39,671 பேரில் 53.8 சதவீதம் பேர் 15திற்கும் 34க்கும் இடையிலான வயதுடையோர், 35திற்கும் 64க்கும் இடையிலான வயதுடையோர் 35.7 சதவீதம்.

மொத்தம் நடை பெற்ற 4.89 லட்சம் விபத்துகளில் உத்திரபிரதேசம்  முதலாவதாகவும் , தமிழ்நாடு இரண்டாவதாகவும் , மஹாராஷ்டிரா மூன்றாவதாகவும் உள்ளது. இதில் டூவீலர் விபத்துகள் 23.3 சதவீதமும், கார் விபத்துகள் 18.6 சதவீதமாகவும் இருக்கிறது.

மேல் விபரங்கள் கீழ் காணும் அட்டவணையில் காணலாம்.accident

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *