துபாய் ஈமான் அமைப்பின் புதிய அலுவலக திறப்பு நிகழ்ச்சி

துபாய் ஈமான் கல்ச்சார மையத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா அஸ்கான் ஹவுஸ் கட்டிடத்தில் நடைபெற்றது
ஈமான் அமைப்பின் தலைவர் பி எஸ் எம் ஹபீபுல்லா தலைமை வகித்தார். அதிராமபட்டினம் சேக் தாவூத் கிராத் ஓதினார் ஈமான் அமைப்பின் பொது செயலாளர் ஹமீது யாசின் வரவேற்புரை நிகழ்த்தினார்

துணை தலைவர் மஹ்ரூப் முன்னிலை வகித்தார். அய்மான் சங்கத்தின் தலைவர் களமருதூர் சம்சுதீன் ஹாஜியார் ,பொதுசெயலாளர் எஸ் ஏ சி ஹமீது, அபுதாபி தமிழ் சங்கதலைவர் ரெஜினால்டு, ஈமான் கல்வி குழு செயலாளர் பைசுர் ரஹ்மான், அலோசகர் அஷ்ரப் அலி , யஹ்ய முஹைதீன், உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்

வர்த்தக பிரமுகர்கள் இளையான்குடி அபுதாஹிர்,கல்லிடைகுறிச்சி முஹைதீன் , ஜெய்னுலாப்தீன்,நசீருதீன், கீழை ஜமீல், கீழை ராசா உள்ளிட்டோருக்கு ஈமான் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது

மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் ஹிதாயத் நன்றியுரை வழங்கினார், விழாக்குழு செயலாளர் ஜமால் முஹைதீன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

விழாவிற்கான ஒருங்கிணைப்பினை ஈமான் துணை பொது செயலாளர் பூதமங்கலம் முஹைதீன் அப்துல் காதர் தலைமையில் அட்மின் செயலாளர் காதர், யாகூப், நலத்துறை இணை செயலாளர் பாஷா, அசார், நிஜாம் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

ஈமான் அமைப்பு துபாய் அரசின் கம்யூனிட்டி டெவலப்மெண்ட் அத்தாரிட்டி துறையின் அங்கீகாரம் பெற்ற அமைப்பு என்பது குறிப்பிடதக்கது

 

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *