துபாயில் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இப்தார் நிகழ்ச்சி

துபாயில் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இப்தார் நிகழ்ச்சிiman du444 iman dubai4445 iman dubai44 iman dubai

துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்ட்ர் சார்பில் ரமலான் மாதம் முழுவதும் இப்தார் நிகழ்ச்சியில் த‌மிழ‌க‌ பார‌ம்பரிய‌த்துட‌ன் கூடிய‌ நோன்புக் க‌ஞ்சியினை வ‌ழ‌ங்கப்பட்டு வ‌ருகிற‌து. இந்த ஏற்பாடுக‌ள் ஈமான் அமைப்பின‌ரால் துபாய் தேரா ப‌குதியில் உள்ள‌ குவைத் ப‌ள்ளி என்ற‌ழைக்க‌ப‌டும் லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜித் பள்ளி வளாகத்திலும் அதன் அருகில் உள்ள இடங்களிலும் ந‌டைபெற்று வ‌ருகின்ற‌ன‌.

தின‌மும் 5000 க்கும் மேற்ப‌ட்டோர் இந்த‌ இஃப்தார் என்ற‌ழைக்க‌ப்ப‌டும் நோன்பு துற‌ப்பு நிக‌ழ்வில் ப‌ங்கேற்கின்ற‌ன‌ர். இதில் நோன்புக் க‌ஞ்சியுட‌ன், ச‌மோசா, வ‌டை, ப‌ழ‌ம், மின‌ர‌ல் வாட்ட‌ர், பேரித்த‌ம் ப‌ழ‌ம் உள்ளிட்ட‌வை வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன என்கிறார் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் கூறுகையில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் 150 பேருடன் துவங்கிய இச்சிறு நிகழ்வு இன்று பிரம்மாண்டமாக ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில் நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் அவர்களின் வழிகாட்டுதலில் ஈமான் அமைப்பின் பொது செயலாளர் ஹமீது யாசின் தலைமையில் துணை தலைவர் மஹ்ரூப், பொருளாளர் ஒபூர், ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத்துல்லாஹ் துணை பொது செயலாளர் முஹைதீன் அப்துல் காதர், விழாக்குழு செயலாளர் ஜமால் முஹைதீன் நிர்வாகிகள், யாகூப்,காதர், ,உஸ்மான் அலி, பாஷா , படேஷா பசீர், இல்யாஸ்,யஹ்யா முஹைதீன் ,தமீம் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். முதல் நாளான நேற்று 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *