பசுமை மீது பாசம்… மாடி தோட்டம் பராமரிக்கும் கீழக்கரை மாணவ சிறுவன்

stu00 stu744கீழக்கரையை பொருத்தவரை வீட்டிற்கு ஒரு மரம் என்பது சாத்தியம் இல்லை.

பெரும்பாலான தெரு குறுகிய தெருவாக இருப்பதால் மனிதர்கள் நடக்கவே வழி இல்லாத போது மரம் எங்கே நடுவது.

ஆனாலும் மரம் செடி வளர்ப்பு மீது ஆர்வம் உள்ளவர்கள் கிடைக்கும் இடத்தில் மரம் செடிகளை வளர்த்து அதை பராமரித்து வருவதே கானும் போது இயற்கை மீது அவர்களின் காதலை எழுத்தால் சொல்ல முடியாது.

கீழக்கரை தெற்கு தெரு பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் சிறிய அளவில் ஒரு மாடி தோட்டத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.
வீட்டை சேர்ந்த‌ யுகேஜி படிக்கும் 4 வயது மாணவ சிறுவன் இன்ஷாப் அஹமது காலையில் எழுந்ததும் தினமும் மாடி தோட்டத்தில் செடியை பார்வையிட்டு பராமரிப்பதோடு செடியில் பூ பூக்கும் சமயம் மகிழ்ச்சியுடன் வீட்டில் உள்ளவர்களுடன் பறிமாறி கொள்கிறார்

சிறுவனது ஆர்வம் வீட்டில் உள்ளோர்க்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது இயற்கை மீது ஆர்வமாக இருக்கும் அடுத்த இளம் தலைமுறை உருவாகி வருவதை இவரின் செயல் உணர்த்துகிறது

வாய்ப்புள்ள‌ வீடுகளிள் சிறிய அளவிலான மாடி தோட்டத்தை உருவாக்கலாம் என்று அனைவருக்கும் உற்சாகம் ஏற்படுத்தும் வகையில் இச்செயல் அமைந்துள்ளது என்றால் மிகையில்லை.

இயற்கையை இச்சிறுவனது நேசத்துடன் பாசத்துடன் கையாண்டால் பசுமை நிறைந்த கீழக்கரை வெகு தூரமில்லை..

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *