தலைவர்கள் முதல் சாமனியன் வரை அனைவரையும் அரவணைத்த மனிதாபிமானி மறைந்த பி.எஸ். ஏ (படங்கள்)

bsa 9949
பி எஸ் எ மகன்களுடன்

bsa with wife

BSA with CM JayalalithaBSA+with+Karunanithi BSA+with+Rajeev+(1) MGR+with+BSaகீழக்கரை பிஎஸ் ஏ அப்துர் ரஹ்மான் இன்று மாலை காலமானார் bsa fathima bsa 5

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த இந்திய தொழிற்துறையின் முன்னோடியும், தமிழகத்தில்பெரும்செல்வாக்குகொண்டவரும், தயாளகுண சீலருமான சேனா ஆனா என்று அழைக்கப்பட்ட  வள்ளல் என்ற பட்டத்துக்கு சொந்தக்காரரான மறைந்த பி. எஸ். அப்துர்ரஹ்மான்

இவர் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் துபாயை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும், ரியல் எஸ்டேட், கட்டுமாணம் மற்றும் வர்த்தக துறைகளில் மிகவும் சக்தி வாய்ந்த ஈ.டி.ஏ அஸ்கான் மற்றும் ஸ்டார் குழும நிறுவனங்களின் நிறுவன பங்குதாரரும், துணை தலைவரும் ஆவார்.

பி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தராகவும், தமிழகம் முழுவதும் உள்ள எண்ணற்ற பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் நிறுவனராகவும், காப்பாளராகவும் இருந்தார்.

கல்வி, தொழில், சுகாதாரம், சமூக சேவைகள் மற்றும் சமூக நல்லிணக்கம் சார்ந்த துறைகளில் இவர் ஆற்றிய சேவைகளை அங்கீகரித்து கடந்த 2005 ஆம் ஆண்டு சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகம்,இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி,ராஜீவ் காந்தி, முன்னாள் தமிழக முதல்வர்கள் எம்ஜிஆர் ,கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களுடன் நல்ல நட்புடன் திகழ்ந்தவர்.

இவர் வறட்சியான மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளார். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பொதுநலன்களுக்காக இலவசமாக வழங்கியுள்ளார்.இவரின் சேவைகள் சொல்லில் அடங்காது. ஜாதி மதம் பேதங்களை ஒதுக்கி தள்ளி மனிதாபிமான கரத்தை நீட்டியவர் இவரே…

தொடர்ச்சியாக இரண்டு வருடமாக உலகின் சக்தி வாய்ந்த 500  இஸ்லாமியர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். மத்திய அரசின் உயரிய விருது இவருக்கு வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது

 

Comments

comments

8 comments

 1. எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்’ எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது. ஆமீன்!

  உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

  குவைத்தில் வரும் வெள்ளிக்கிழமை (09.01.2015) அன்று K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு அன்னார் அவர்களின் சேவைகள் நினைவு கூறப்பட்டு, மறுமை வாழ்வின் வெற்றிக்காக சிறப்பு துஆ செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்.

  நன்றி! வஸ்ஸலாம்.

  அன்புடன்….
  மவ்லவீ அல்ஹாஜ் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ – தலைவர்
  மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., – பொதுச் செயலாளர்
  மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்.
  குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
  குவைத்.

  துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் அலைபேசி: (+965) 97 87 24 82
  மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
  இணையதளம்: http://www.k-tic.com
  யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
  முகநூல் (Facebook) பக்கம் : https://www.facebook.com/q8tic
  முகநூல் (Facebook) குழுமம் : https://www.facebook.com/groups/q8tic
  நேரலை (Ustream): http://www.ustream.tv/channel/ktic-live

 2. தமிழக முஸ்லீம்களுக்கு ஒரு
  மாபெரும் இழப்பு
  பாருக்(திருப்பாலைக்குடி)

 3. A.K. MOHMED SAFUIULLAH

  inna lillahi wainna ilaihi rajoon.

 4. A.K. MOHMED SAFIULLAH

  Allahummaghfirlahu warhamhu wadihilhu warabbalaalameen. aameen..,aameen..,yarabbal aalameen.

 5. Great Man with Great Vision with Great Heart with Great.Man of Simplicity with Great.. Great… Great… No Words to Explain
  May Almighty Allah Grant Him Highest Place in Jannah.

 6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

  இமயம் சரிந்தது என்று சொல்லுவார்களே, அது உண்மை ஆகும் என்று உணர முடிகின்றது.

  இவர்களை யார் என்று கூறுவது..? கல்வியாளரா…? பெரும் தொழில் அதிபரா..? பெரும் கொடை வள்ளலா..?, பல ஆயிரம் குடும்பங்களின் நெஞ்சில் பாசத்தை வளர்த்து, துஆக்களை பெற்றுக்கொண்டு இருக்கும் நல்லவரா, ஊஹூம். அனைத்தையும் ஒன்றாக கலந்த கலவை இவர்கள்.

  வலை தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் இவர்களைப் பற்றி மக்கள் கூறும் கருத்துக்களை படித்ததும் நபிகள் நாயகத்தின் ஹதீஷும், இந்த குறளும் தான் நினைவுக்கு வருகின்றது..

  “ தோன்றின் புகழோடு தோன்றுக; அஃதிலார்
  தோன்றலின் தோன்றாமை நன்று”.

  ஸஹீஹ் புகாரி 1367. அனஸ்(ரலி) அறிவித்தார்கள் .

  ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உறுதியாகிவிட்டது” என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி(ஸல்) அவர்கள், ‘உறுதியாகிவிட்டது?’ எனக் கூறினார்கள்.

  உமர்(ரலி) ‘எது உறுதியாகிவிட்டது?’ எனக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள், ‘இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள். எனவே இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாகவீர்கள்” எனக் கூறினார்கள்

  திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி மாணவனாக இருந்த சமயம், அங்கு United Economic Form மீட்டிங் நடைபெற்றது. அப்போது நமது மறைந்த பாதுல் அஷ்ஹாப் ஹாஜியார் அவர்கள் என்னை அழைத்து, அருகில் இருந்த பி.எஸ்.அப்துர்ரஹ்மான் ஹாஜியாரிடம், என்னுடைய சொந்தக்கார பையன்தான், என் பேத்தியை தான் மணமுடிக்க போகிறார் என்று அறிமுகப்படுத்தியதும்,…,

  அவர்கள்.. நான் வந்ததில் இருந்தே இந்த பையனை கவனித்து வருகின்றேன், அங்கும் இங்கும் ஆடி ஓடி எல்லோரையும் கவனிக்கும்போதே, தம்பி நம்ம கீழக்கரை அல்லது காயல்பட்டினமாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன் என்று விசாரித்து, வாப்பாவின் பெயரை கேட்டார்கள்..

  பெயரை சொன்னதும்… அடடே சென்னை, தேனாம்பேட்டை எங்க பெட்ரோல் பாங்க்கில் மேனேஜர் ஆக இருந்த ஐதுரூஸ் மகனா என்று அனைத்துக் கொண்டார்கள். அவர்களின் மனம் இன்னும் என் சுவாசத்தில் நிற்கின்றது.

  எந்த உதவி வேண்டுமானாலும் என்னை வந்து பாரு, படிப்பு முடிந்ததும் என்னை சந்தி என்றார்கள். அந்த சந்தர்ப்பம் கிட்டவே இல்லை.

  கிருபையுள்ள வல்ல அல்லாஹ் இவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை மன்னித்து, அவர்களின் கபுரில் சுவன தென்றலை வீசச்செய்து, மறுமையில் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை அளிப்பானாக.

  சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்( காயல்பட்டினம் )

 7. எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் அவரின் பாவங்களை மன்னித்து மறுமையில் சொர்கவாழ்வை தர என்றும் துஆ செய்கிறேன் இவர் கம்பெனியில் வேலை செய்த ஊழியன்
  இவன்
  உங்கள் சின்னா

 8. கல்விக்கண் ெகெொடுத்த இந்த கடவுள் இன்று மண்ைணை விட்டு மைறைந்தாலும் மாணவர் உள்ளங்களில் என்றும் வாழ்ந்துெகெொண்டிருப்பார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *