மீனவர்களை பாதிக்கும் சாகர் மாலா திட்டத்தை கைவிட வேண்டும். ம.ம.க மாநில தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை.

klll44 jawa999 pathusaமீனவர்களை பாதிக்கும் சாகர் மாலா திட்டத்தை கைவிட வேண்டும்.
கீழக்கரையில் ம .ம.க மாநில தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை.
மனித நேய மக்கள் கட்சியின் 10ம் ஆண்டு துவக்கவிழா மற்றும்  மீனவர்களை பாதிக்கும் மத்திய அரசின் சாகர் மாலா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முஸ்லீம் ஆண்களை கடுமையாக பாதிக்கும் முத்தலாக் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குமரி முதல் கோட்டைவரையிலான பிரச்சார பயணத்தை ம.ம.க மாநில தலைவர் ஜவாஹிருல்லா மேற்கொண்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக கீழக்கரைக்கு வருகை தந்த ஜவாஹிருல்லா நேற்று இரவு அரசு மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கி, வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள ம.ம.க கட்சி அலுவலகத்தின் அருகே கட்சி கொடியை ஏற்றிவைத்து பேசிதாவது, மத்திய அரசின் திட்டமான சாகர் மாலா திட்டம் என்பது தமிழ்நாட்டில் உள்ள ஆயிரத்து 208 தீவுகள் மற்றும் பொது மக்களின் விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்களையும் அவர்களிடமிருந்து இருந்து பறித்து அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டு மத்திய அரசின் ரூபாய் 8லட்சம் கோடி மட்டும் முதலீடு செய்து மற்ற முதலீடுகளை அவர்களை செய்யவிட்டு மீனவர்களை விரட்டுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த திட்டத்தினால் 3ஆயிரத்து 600 மீனவ கிராமங்களில் உள்ள  மீனவர்களும் பாதிக்கப்படுவார்கள், இந்த திட்டத்தை சுலபமாக நிறைவேற்றதான் இலங்கை கடற்படை மீனவர்களை தாக்குவதை மோடி அரசு தடுக்க மறுக்கின்றது, மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி கொண்டிருந்தால் தானாக தொழிலை விட்டு விட்டு ஓடி விடுவார்கள் என்று எண்ணுகிறது. மேலும் இந்த திட்டத்தை நிறைவேற்ற எந்த விதமான சுற்று சூழல் ஆய்வையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை, ஆகவே மினவர்களை கடுமையாக பாதிக்கும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முஸ்லீம் ஆண்களை கடுமையாக பாதிக்கும் முத்தலாக் சட்டத்தை நிறைவேற்றத்துடிப்பதை எதிர்த்தும் இந்த பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளேன் என்றார்.

இதில் ம.ம.க.வின் அமைப்பு செயலாளர் யாகூப், மாவட்ட தலைவர் அன்வர்அலி, மாவட்ட செயலாளர்கள் ஜகாங்கிர் அலி, அபுதாகிர், மாவட்ட துணை தலைவர் ரைஸ்தீன், துணை செயலாளர் சிராஜூதீன், நகர் தலைவர் பாதுஷா , நகர் செயலாளர் அபு, உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *