ஏர்வாடியில் பாதுகாப்பு குறித்து கமாண்டோ படையினர் ஆய்வு .

camaஏர்வாடியில் பாதுகாப்பு குறித்து கமாண்டோ படையினர் ஆய்வு .

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் ராணுவதளம் மற்றும் ராணுவ கிடங்கு அமைக்க உள்ளதாக செய்தி வெளியானதை தொடர்ந்து கடந்த ஜன,31ம் தேதி ஏர்வாடி மற்றும் அதனை சுற்றியுள்ள 20கும் மேற்பட்ட கிராமத்தினர் ஏர்வாடியில் ராணுவ கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில் நேற்று காலை தமிழ்நாடு கமாண்டோ படையினர் ஏர்வாடி வந்து ஏர்வாடி மற்றும் ஏர்வாடி தர்ஹா, காட்டுப்பள்ளி தர்ஹா உள்ளிட்ட பல இடங்களை ஆய்வு செய்தனர், இந்த ஆய்வு ராணுவ கிடங்கு அமைப்பதற்குதான் ஆய்வு நடக்கிறது என்று செய்தி பரவியதால் ஏர்வாடி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு கமாண்டோ படை அதிகாரி கூறுகையில், தமிழகத்தில் ஆண்டு தோறும் கமாண்டோ படையில் 3 குழுக்களாக பிரிந்து ராமேஸ்வரம், திருச்செந்து£ர், வேளாங்கன்னி சர்ச், சென்னையில் உள்ள மசூதி உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுதளங்கள், அணுமின் நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு உறுதி குறித்தும் தீவிரவாத தடுப்பின் அடிப்படையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வோம். அதன் தொடர்ச்சியான நடவடிக்கைதானே தவிர வேறு ஒன்றும் இல்லை என்றார்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *