கீழக்கரை அருகே எக்ககுடி பள்ளியில் அறிவியல் கண்காட்சி.

kke9404கீழக்கரை அருகே எக்ககுடி பள்ளியில் அறிவியல் கண்காட்சி.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் எக்ககுடி குறுவளமையத்தில் 2017&18ஆணடுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

இக்கண்காட்சியில் 7 தொடக்கப்பள்ளிகள், 2 நடுநிலைப்பள்ளிகள் மற்றும் 1 உயர்நிலைப்பள்ளி ஆக 10 பள்ளிகள் கலந்து கொண்டன, இதில் ஆசிரியர் பயிற்றுநர் சந்தானக்குமார், உத்திரகோசமங்கை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ரவிசந்திரன், செல்வகுமார் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர்.

இதில் தொடக்கப்பள்ளி அளவில் எக்ககுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முதல் இடத்தையும், எல்.கருங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும், மேலசீத்தை ஸ்ரீ சேது மாணிக்கம் தொடக்கப்பள்ளி மூன்றாம் இடத்தையும் பிடித்தது.

உயர் தொடக்கநிலை அளவில் எக்ககுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முதல் இடத்தையும், எல்.கருங்குளம் பள்ளி இரண்டாம் இடத்தையும், ஸ்ரீ சேது மாணிக்கள் உயர்நிலைப்பள்ளி மூன்றாம் இடத்தையும் பிடித்தது, சிறந்த பள்ளிக்கான விருதை எக்ககுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெற்றது இதற்கான விருதை தலைமை ஆசிரியர் அமுதவள்ளி பெற்று கொண்டார்.

இதில் எக்ககுடி ஜமாஅத் நிர்வாகிகள் சிராஜூதீன், அஸ்கர்அலி, சகுபர் சாதிக் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்த கொண்டனர்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *