எக்ககுடியில் உள்ள சீமை கருவேலமரங்களை அகற்றி கண்மாயை தூர் வார கோரிக்கை.

ekkakudi9495எக்ககுடியில் உள்ள கண்மாயை தூர் வார கோரிக்கை.
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை எக்ககுடியில் உள்ள கண்மாயில் அடர்த்தியாக வளர்ந்துள்ள சீமை கருவேலமரங்களை அகற்றி விட்டு தூர் வார வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை எக்ககுடியில் உள்ள கண்மாய் இந்த வருடம் பருவமழை பொய்த்து போனதால் தற்போது வரண்ட நிலையில் சீமை கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து காணப்படுகிறது. ஆகவே தற்போது மழைகாலம் வரவிருப்பதால் து£ர்வாரமல் இருந்தால் தண்ணீர் தேங்குவதற்கு ஏதுவாக இருக்காது, மேலும் மழைவந்து தண்ணீர் தங்கினால் பொது மக்கள் உள்ளே சென்று குளிப்பதற்கு கட்டு கருலேமரங்களின் முட்கள் மிகவும் இடையூறை ஏற்படுத்தும் ஆகவே மழைகாலம் வருதற்குள் து£ர்வாரவேண்டும்.

இதுகுறித்து எக்ககுடி ஜமாத் நிர்வாகி முகமது சிராஜூதீன் கூறுகையில், இதுகுறித்து முதலமைச்சரின் தனிபிரிவிற்கு மனு செய்து அந்த மனுவை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வந்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை ஆகவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீமை கருவேல மரங்களை அகற்றி கண்மாயை து£ர்வர உத்தரவிட வேண்டும் என்றார்.

ளீவீறீணீளீணீக்ஷீணீவீ மீளீளீணீளீuபீவீ படம்விளக்கம். ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை எக்ககுடியில் உள்ள கண்மாய் பருவமழை பொய்த்து போனதால் தற்போது வரண்ட நிலையில் சீமை கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து காணப்படுகிறது.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *