தினைக்குளம் அரசு மேல்நிலைபள்ளியில் 1.20கோடி செலவில் கட்டடம் கட்டியும் மாணவர்கள் மரத்தடியில் படிக்கும் அவலம்.

kilakarai school 6kilakarai school 3
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் தினைக்குளம் ஊராட்சியில் ரூபாய் 1.20 கோடியில் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டப்பட்டது, இந்த கட்டடம் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மீண்டும் மரத்தடியில் மாணவர்கள் படித்து வருகின்றனர், ஆகவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து நேரில் ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் தினைக்குளம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது, இந்த பள்ளி கடந்த 18 மாதங்களுக்கு முன் பொதுப்பணித்துறை சார்பில் 1கோடியே 20லட்சம் செலவில் முன்று மாடி கட்டடம் கட்டப்பட்டது, இந்த கட்டடம் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளதால் இங்கு பயிலும் மாணவ, மாணவிகளை கட்டடத்தில் வைத்து படித்து கொடுக்க கூடாது என்று பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து அறிவிப்பு பலகை வைத்திருக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தினைக்குளம் ஊராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகின்றனர், மேலும் இந்த பள்ளியில் தினைக்குளம், களிமண்குண்டு, சேதுக்கரை உள்ளிட்ட 30 கிராமங்களை சேர்ந்த 700கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றனர், இப்பள்ளி மாணவர்கள் அரசு நடத்தும் திரனாய்வு தேர்வில் 100சதவிகிதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.

இவ்வளவு கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பள்ளி கட்டடத்திற்கு வந்தால் உயிர் பாதுகாப்பில்லாமல் இருப்பதால் பள்ளிக்கு மாணவர்களை அனுப்புவதற்கு பெற்றோர்கள் அச்சப்பட்டு இப்பகுதி அபாயகரமானது யாரும் உட்பிரவேசிக்க வேண்டாம் என்று பேனர் அடித்து பள்ளியின் சுவற்றில் கட்டி வைத்துள்ளனர்.

இதுகுறித்து தினைக்களம் ஜமாஅத் செயலாளர் ரபீக் கூறுகையில், பொதுப்பணித்துறை சார்பில் 1கோடியே 20 லட்சம் செலவில் கட்டப்பட்ட கட்டடம் கடந்த 18,07,2016ல்தான் திறப்பு விழாகண்டது, திறப்பு விழா கண்டு 18 மாதங்கள் ஆன இந்த கட்டடத்தில் சிறிது நாட்களுக்கு முன் பெய்த சிறு மழைக்கு கூட தாக்கு பிடிக்க முடியாமல் மழைநீர் ஒழுகி அந்த சுவர்கள் அரித்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது, அதை அறிந்த ஜமாத்தார்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த அப்துல் வஹாப் உள்ளிட்டவர்கள் கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினர், கல்வி அதிகாரி வந்து பார்த்து விட்டு சென்றதுடன் சரி, எந்த மராமத்து வேலையும் பார்க்கவில்லை, இதனால் பெற்றோர்கள் அனைவரும் ஒன்று திரண்றுடு கட்டடத்திற்குள் யாரும் பயிலுவதற்கு போக வேண்டாம் என்று அபாய போர்டு வைத்துள்ளனர்.

எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகி வஹாப் கூறுகையில், இந்த கட்டடம் கட்டியதில் அதிகபடியான முறைகேடுகள் நடந்துள்ளது, ஆகவே மாட்ட ஆட்சியர் நேரடியாக இந்த கட்டடத்தை ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பள்ளி கட்டடத்தை மராமத்து செய்ய உத்தரவிடவேண்டும் என்றார்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *