உலகின் மிகப்பெரிய சைபர் அட்டாக்….125 கோடி நபர்களுடைய மின் அஞ்சல் முகவரிகள் திருட்டு

cybercrime  6இணையதள கருப்புச் சந்தையில் ஹேக்கர்களால் மிகப் பெரிய அளவில் தனி நபர்களுடைய சுய விபரங்கள் விற்பனக்கு வந்துள்ளதாக இணையதள செக்கியூரிடி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இணையதள குற்றத்தில் மிகக் பெரியதாக கருதப்படும் இந்த திருட்டில், 10.5 கோடி தனி நபர்களுடைய விபரங்களை ஒரு ஹேக்கர் வெளியிடுள்ளார்.இத்துடன் 36 கோடி நபர்களுடைய அக்கவுண்ட்கள் திருடப்பட்டு சுமார் 125 கோடி பேருடைய மின் அஞ்சல் முகவரிகளும் திருடப்பட்டுள்ளன.

இந்த விபரத்தை “ஹோல்ட் செக்யூரிட்டி” என்ற இணையதள செக்கியூரிடி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த இணைய தள திருட்டு கம்பெனிகளில் இருந்து நேரடியாக திருடப்பட்டு இருக்கலாம் அல்லது கம்பெனியோ அல்லது அதன் ஊழியர்களோ தகவல்களை பாதுகாத்து வைத்திருக்கும் சர்வீஸ் கம்பெனியிலும் திருடப்பட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளது.cyber1

ஹோல்ட் செக்யூரிட்டி மேலும் கூறுகையில் கடந்த 2013 அக்டோபரில் அடோப் நிறுவனத்திலிருந்து 15கோடி தனி நபர் தகவல்களும் ஒரு மாதத்திற்கு பிறகு குப்பிட் மீடியா நிறுவனத்திலிருந்து 4 கோடி தனி நபர் தகவல்களும் திருடப்பட்டுள்ளன.கடந்த 3 வாரங்களாக சேகரித்த தகவலின் படி திருடப்பட்ட 30 கோடி பேருடைய தனிநபர் தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை ஆனால் ஆச்சரியப்படும் விதமாக கடந்த 3 வாரங்களில் 36 கோடி தனி நபர் விபரங்களும் 125 கோடி இ-மெயில் முகவரிகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

cyber2இந்த விபரங்கள் கூகுள், யாஹூ, மைக்ரோ சாப்ட் போன்ற நிறுவனங்களில் இருந்தும் உலகின் மிகப் பெரிய 500 கம்பெனிகளில் இருந்தும் மற்றும் பொதுச் சேவை நிருவனங்களில் இருந்தும் திருடப்பட்டுள்ளன. மிகத்திறமையாக 29 லட்சம் பேருடைய தகவல்களை அடோப் நிறுவனத்தில் இருந்து திருடிய சில மாதங்களுக்கு பிறகு இந்த திருட்டு நடந்துள்ளது.

இணையதள திருடர்கள் அடோப் வாடிக்கையாளர்களின் தனிநபர் அடையாள முகவரிக்குள் நுழைந்து அங்கு மறைவாக பதியப்பட்டிருந்த பாஸ்வேர்டை திருடி அங்கிருந்த வடிக்கையாளர்களுடைய கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு , அவற்றின் காலாவதி  தேதிகளையும் வாடிக்கையாளர் வாங்கிய பொருள்களின் விபரங்களையும் எடுத்துச் சென்றுள்ளதாக அடோப் நிறுவன செக்யூரிடி குழு தெரிவித்துள்ளது.

 

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *