கல்லூரி வாழ்வில் பயணிக்க இருக்கும் மாணவமணியினரின் பார்வைக்கு

எதிர்கால கனவுகளோடு பள்ளி பருவத்தின் வசந்த மிகு வாழ்க்கையை நிறைவு செய்யது விட்டு வாழ்க்கை பருவத்தின் பொற்காலமான கல்லூரி வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும் நாளை இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களே!
பள்ளி வாழ்க்கையை விட கல்லூரி வாழ்க்கை சிறப்பானதாக இருந்தாலும் நீங்கள் பல சவால்களை சந்திக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றீர்கள்.
இன்றைய கல்வி நிலையங்களில் நிலவும் போட்டிகள்,கட்டண விகிதங்கள் தேர்வின் முடிவுக்கு பின் சராசரி பெற்றோர்களின் கண்களில் நீர் கோர்க்க வைத்து இருக்கின்றது.

உங்கள் எதிர்காலத்தின் நன்மைகளையும்,தீமைகளையும் நிர்ணயம் செய்யக்கூடிய கால சக்கரத்தில் சுழன்று வருகின்றீர்கள்.இன்று நீங்கள் எடுக்கும் நல்ல முடிவுகள் உங்கள் எதிர்கால வாழ்வுக்கு அஸ்திவாரமாக அமையும்.

தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மணிகளுக்கு அரசு கூடுதல் அவகாசம் கொடுத்து உள்ளது.இதை பயன்படுத்தி நீங்கள் எந்த பாடத்தை எடுத்தீர்களோ,எந்தப் பாடத்தில் ஆர்வம் உள்ளதே அந்தப்பாடத்தை எடுத்து உங்களுக்கு ஏற்ற‌ சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்து படியுங்கள்.நண்பருக்காக அவர் எடுத்த பாடத்தை எடுத்து அவர் படிக்கும் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பதற்காக உங்களுக்கு பிடிக்காத பாடத்தை படித்து உங்கள் எதிர்கால வாழ்க்கையை கேள்வி குறி ஆக்கி விடாதீர்கள்.

நட்பு என்பது வேறு கல்வி என்பது வேறு என்பதை உணருங்கள் கல்வி சம்பந்தப்பட்ட ஆலோசனைகளை உங்கள் மேல் நல்ல அபிப்ராயம் உள்ள கல்வியாளர்களிடம் கேளுங்கள்.
இந்த கல்லூரி வாழ்க்கை தான் ஒரு மனிதனை மனித நேயம் நிறைந்தவனாகவும்,மனித நேயம் அற்றவனாக இந்த சமூகத்திற்கு அறிமுகம் செய்வதில் முக்கிய பங்களிப்பை செலுத்துகிறது.கல்லூரி வாழ்க்கையில் உயர்ந்த சிந்தனையுடன் சமூக சேவையில் ஆர்வம் காட்டுங்கள்.
உங்கள் திறமையும்,தன்னம்பிக்கையும் தான் உங்கள் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்க உதவும் என்பதை மனதில் வையுங்கள்.எதிர் கால சூழ்நிலையை உணர்ந்து படியுங்கள.

நீங்கள் அனைவரும் வாழ்க்கையில் வெற்றியின் பாதையில் வீறு நடை போட கீழக்கரை டைம்ஸ் இணைய தள பக்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.⁠⁠⁠⁠

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *