tntj888

மழையும் .. மனிதநேயமும்..

iuml intj99 pfitmmk 9tntj che88தமிழகத்தில் குறிப்பாக சென்னை, கடலூர், செங்கை, காஞ்சி போன்ற இடங்களில் மழை, தொடர்மழை, கனமழை, எங்குபார்த்தாலும்வெள்ளக்காடு. சென்னையில் கடுமையான பாதிப்பு பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் அடுத்து என்ன நிகழுமோஎன்றஅச்சஉணர்வு அனைவர்முகத்திலும்இழையோடிக்கொண்டிருக்கின்றவேளை . . மனிதநேயம்மலர்ந்தது,

அடுத்தவர் என்ன மதம், சாதி,இனம் என்ற கேள்வியெல்லாம் பார்க்காமல் ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டி தோளோடு தோள் கொடுத்து பரஸ்பரம் உதவி வருவது நெஞ்சை நெகிழ செய்கிறது .உதவி தொடர்பான ஆயிரக்கணக்கான அறிவிப்புகள்

சென்னையில் அனைத்து பள்ளிவாசல்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி கொள்ளலாம் என்ற அறிவிப்பு,தனி மனித மற்றும் சமுதாய அமைப்புகளின் சேவைகள்,

ஆயிரக்கணக்கில். . . . ஏழை, பணக்காரன் பாகுபாடின்றி ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டதும், அக்கறையோடு உள்ளவற்றை பகிர்ந்து கொண்டதும், “இன்னும் ஏதாவது தேவைப்பட்டால் கூப்பிடுங்கள்” என்று தேறுதல் வார்த்தைகளால் ஆறுதல் கூறிக்கொண்டதும் மனித நேயம் மறையவில்லை மலர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஓவ்வொரு படங்களுமே ஒவ்வொரு மனிதாபிமான கதைகளை சொல்லும் வெள்ளம் துயரத்தை தந்ததோடு துயரத்தில் உதவும் நெஞ்சங்களையும் அடையாளபடுத்தியுள்ளது என்பதே உண்மை

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *