ஐக்கிய நாடுகள் சபை (CHEMUN XI) மாநாட்டில் கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளி மாணவ,மாணவியர் பங்கேற்பு

lp0 lp034 lpp lopl
ஐக்கிய நாடுகள் சபை (CHEMUN XI) மாநாட்டில் கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளி மாணவ,மாணவியர் பங்கேற்பு

கீழக்கரை, கண்ணாடி வாப்பா இண்டர்நேஷனல் பள்ளி மாணவ மாணவிகள் சர்வதேச அளவில் சென்னை அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளியில் நவம்பர் 10 முதல் 12 வரை நடைபெற்ற மாதிரி ஐக்கிய நாடுகள் சபை (CHEMUN XI) மாநாட்டில் ஜமைக்கா நாட்டு பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர்.

மாநாட்டில், தனிமைப் படுத்தல் மற்றம் சர்வதேசியம் (Isolationism and Internationalism) எனும் தலைப்பில் ஹசன் நசீர், முஹம்மது ரிஹாப், முஹம்மது சாரிம் ஹுசைன், சதக் உஸ்ஸாம், சுமய்யா, ஃபாத்திமா ஷாஃபியா, அனஃபா ஃபாத்திமா, அனாக்கா ஃபாத்திமா ஆகியோர் பல்வேறு அமர்வுகளில், ஆயுதக்குறைப்பு மற்றும் சர்வதேசப் பாதுகாப்பு, மனித உரிமை, பொருளாதாரம் மற்றும் சமூகக் குழு, பொதுசபை, பொதுசபை சட்டம், சுற்றுச் சூழல், பாதுகாப்புக் குழு ஆகியவற்றில் உரை நிகழ்த்தியும் விவாதங்களிலும் பங்கேற்றனர்.

இதில் 7 நாடுகளைச் சேர்ந்த 500 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மொத்தம் 9 குழு அமர்வுகளில் 64 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிரிய அகதிகள் குறித்த சிறப்பு விவாதமும் நடைபெற்றது. சர்வதேச அளவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்த பள்ளி பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

பள்ளி முதல்வர் இராஜேஷ் குமார் கிருஷ்ணன் மாணவர்களை ஊக்குவித்து அவர்களின் திறன் வெளிப்பாட்டிற்கும், அவர்கள் புது அனுபவத்தை நுகர்வதற்கும் உறுதுணையாக நின்றார். மாணவ குழுவுடன் ஆசிரிய ஆலோசகராக திலக் பகதூர் கடல் மற்றும் பள்ளி மேலாளர் அபுல் ஹசன் ஆகியோர் உடன் சென்றனர்.

பங்கேற்ற மாணவர்கள் குழந்தைகள் தினத்தன்று தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து குழுமியிருந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிக்கையாளர்கள் ஆகிய அனைவரது பாராட்டினையும் பெற்றனர்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *