பயனுள்ள தகவல்கள்

வகுதைக் கரையினிலே….. கட்டுரையாளர். எழுத்தாளர் மஹ்மூத் நெய்னா

sn st

வகுதைக் கரையில்….. கட்டுரையாளர். எழுத்தாளர் மஹ்மூத் நெய்னா நடப்புக் காலம் துன்முகி தமிழ் ஆண்டு…. கோடை கடந்தும் வெயில் ஏன் இப்படி சுட்டெரிக்கிறது? கனல் காலம் தொடங்கிய நாளிலிருந்தே தன் உக்கிரம் கூட்டி நம் உச்சி மண்டையை கொதிக்க வைத்த வெயில் , ரமலான் தலைப்பிறையில் வேதாந்தமாய் திடுமென சாந்தி அடைந்து, அப்புனித மாதம் முழுதும், நம் உள்ளத்தையும், உடலையும் இறைவன் அருளால் குளிர்வித்தது எதேச்சையானதா?… இல்லை சீதோஷன நிலை சடுதியில் மாறிய இந்த விந்தையை குறித்து, , கடந்த வாரம் கிழக்குத்தெரு அப்பா …

Read More »

பாலை தேசத்து கீழைவாசிகள் வெளிநாடு வாழ் கீழைவாசிகளின் வாழ்வியல் ஆய்வு… கீழை ராஸா

spray

  பாலை தேசத்து கீழைவாசிகள் வெளிநாடு வாழ் கீழைவாசிகளின் வாழ்வியல் ஆய்வு… கீழை ராஸா (மறு பதிவு) தொடர் 1… இன்று நாம் வாழ்வது சொகுசான வெளிநாட்டு வாழ்க்கை, மனைவி, பிள்ளைகள் நம் அருகில், நினைத்த மறுநொடியே சொந்தஊருக்கு நம்மால் பறக்கமுடிகிறது. வயசான வாப்பா சிரிப்பதை அந்த நொடியே ஸ்கைப்பில் பார்க்க முடிகிறது…. மிளகு தண்ணி ஆனம் எப்படி செய்வதென்று அம்மாவிடம் வாட்ஸ் அப்பில் கேட்க முடிகிறது… என்ன மச்சான் இன்னும் தூங்கலையான்னு நடுநிசியில் நண்பனுடன் ஃபேஸ்புக்கில் கதைக்க முடிகிறது… இன்று உலகம் மிகவும் …

Read More »

கீழக்கரையில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முதலாக‌அமைக்கப்பட்ட 3 கல்லூரிகள்

sathak eng coll

கீழக்கரையில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முதலாக‌அமைக்கப்பட்ட 3 கல்லூரிகள் 1.மாவட்டத்தின் முதல் பாலிடெக்னிக் கல்லூரி (முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி . ஆண்டு 1980 ) சதக் டிரஸ்ட் நிர்வாகத்தின்கீழ் இக்கல்லூரி இயங்குகிறது நிர்வாகம் ALHAJ. S. M. YOUSUF CHAIRMAN HAJIYANI. S. M. H. SHARMILA SECRETARY JANAB.M.JAHUFAR BUHARI DIRECTOR PROF.DR.A.ALAUDEEN PRINCIPAL 2. மாவட்டத்தின் முதல் பொறியியல் கல்லூரி (முஹம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி ,ஆண்டு 1984) சதக் டிரஸ்ட் நிர்வாகத்தின்கீழ் இக்கல்லூரி இயங்குகிறது நிர்வாகம் Alhaj. …

Read More »

கீழக்கரை உட்கோட்டம் காவல் நிலைய அறிவிப்பு

police announ

கீழக்கரை உட்கோட்டம் காவல் நிலைய அறிவிப்பு ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி மணிவண்ணன்  உத்தரவோடு டிஎஸ்பி மஹேஸ்வரியின் ஆலோசனையின் படி கீழக்கரை காவல்நிலைய உட்கோட்டத்தில் காவல் நிலையங்களில் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

Read More »

கீழக்கரையில் அமைந்துள்ள பழம்பெரும் கிறிஸ்தவ ஆலயம்

klk chu

  கீழக்கரையில் அமைந்துள்ள  நூற்றாண்டுகள் கடந்த கிறிஸ்தவ ஆலயம் ராமநாதபுரம் மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்று கீழக்கரை பரதர் தெரு அந்தோனியர் ஆலயம். கடந்த 1715ம் ஆணடு கட்டப்பட்ட இந்த சர்ச்சின் புணரமைப்பு பணிகளை கடந்த 1910 துர்லேண்ட் என்ற பாதிரியார் மேற்கொண்டார்.1943 ல் கீழக்கரையில் வசித்த பெரும்பாலான கிறிஸ்தவர்கள் ராமநாதபுரத்திற்கு குடிபெயர்ந்து விட்டதால் 1944 முதல் லூயிஸ் லெவேல் என்ற பாதிரியார் இந்த சர்ச்சில் மீண்டும் இறைபணி செய்து வந்தார் 16ம் நூற்றாண்டு துவக்கத்தில் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த …

Read More »

நாகா .. ஆஹா.. யுஏஇ 89.4 எப் எம் தொகுப்பாளர் நாகா என்ற நாகப்பனுடன் சந்திப்பு

rj naga1001

ஆர் ஜே எனும் ரேடியோ ஜாக்கிகள் பண்பலை நேயர்களின் அன்றாட வாழ்வில் கலந்து விட்டார்கள்.தங்களுக்கு பிடித்த ரேடியோ தொகுப்பாளர் குரலை ஒருநாள் கேட்க முடியா விட்டாலும் வருந்துபவர்கள் பலர் உண்டு. குறிப்பாக தாய்நாட்டை விட்டு வேறொரு நாடுகளில் பணியாற்றுபவர்கள் வாகனங்களில் பயணிக்கும் போது அவர்களின் காதோரம்  தாய்மொழியில் நட்பையும்,நகைப்பையும் நடுவது ரேடியோ தொகுப்பாளர்கள்தான் என்றால் மிகையில்லை அமைதியான முகம் ,மெலிந்த தேகம்..தெளிவான குரல்.. துள்ளும் தமிழ்.. துவழாத இனிமை.. கனிவான பேச்சு.. கவலை பறந்து போச்சு என கேட்பவர்களின் மனதை மயக்கும் வசீகர குரல் படைத்த …

Read More »

கண்ணாடிகள் கவனம் …. M அப்துல் ரஹ்மான் EX M.P.

abdul rahman

சமுதாயம் சந்தித்து வருகின்ற பிரச்னைகளில் மிக முக்கியமானது வரம்பு மீறிய காதல் பிரச்னைதான். ஓடிப்போகும் சீரழிவுச் செய்தி எல்லாப் பகுதிகளிலிருந்தும் நீக்கமற வந்த வண்ணமிருக்கின்றன. இதற்கெல்லாம் இதுதான் காரணமென்று பொத்தம்பொதுவாய் ஒன்றைச் சொல்ல முடியாது. செல்போன், சின்னத்திரை, பெரிய திரை, கல்வி நிலையங்களில் கலந்து பழகுதல் எனப் பல காரணங்களைச் சொல்லலாம். காரணம் எதுவாயினும் சரி செய்யப்பட வேண்டிய தலையாய விசயம் இது. இந்தப் பொறுப்பும் கடமையும் பெற்றோர்களையே சாருகின்றது. பெற்றோர்களின் கவனக்குறைவினால்தானே அவர்கள் கீழிறங்கிப் போகின்றார்கள். செல்போன், தொலைக்காட்சி, இணையதளம் ஆகிய வசதிகளை …

Read More »

உலகம்..கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘தமிழுக்கு நிறம் உண்டு’ என்னும் தொகுப்பிலிருந்து )

niram undu

கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘தமிழுக்கு நிறம் உண்டு’ என்னும் தொகுப்பிலிருந்து ) உலகம் *********** உன்னைப் பார்த்து உலகம் குரைக்கும் தன்னம்பிக்கை தளர விடாதே இரட்டைப் பேச்சு பேசும் உலகம் மிரட்டும் தம்பி மிரண்டு விடாதே ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு உலகின் வாயில் இரட்டை நாக்கு எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லாம் உனக்குச் சொல்கிறேன் உள்ளத்தில் எழுது *********** இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன் இலக்கியம் இல்லை லேகியம் என்றது திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தேன் பரிமே லழகரை வரச்சொல் என்றது குறுந்தொகை கம்பன் கொட்டி முழக்கினேன் குண்டுச் சட்டியில் குதிரை …

Read More »

நிக்காஹ் எனும் திருமணத்தை பதிவு செய்வது எப்படி ? விளக்க கட்டுரை

nikkah

நம் ஊரில் தற்போது பல திருமணங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. ஆனால் பலர் அவர்களின் திருமணத்தை பதிவு செய்வது இல்லை. காரணம் விழிப்புணர்வு இல்லாமை. சிலர் அதான் பள்ளிவாசல் தப்தரில் பதிவு செய்து விட்டோமே, பிறகு எதற்கு மீண்டும் ஒரு பதிவு என்று வினவுவதும் உண்டு. . உச்ச நீதிமன்றம் சீமா -எதிர்-அஸ்வினி குமார் (2006 (2) SCC 578) என்ற தீர்ப்பில், திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்யப்படவேண்டும், அதன் பொருட்டு மாநில அரசாங்கங்கள் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கருத்து தெரிவித்தது. இந்த தீர்ப்பின் …

Read More »

டாக்டர் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் – ஒரு வரலாற்றுப் பார்வை (அரிய படங்கள்)

BSA evaluating stones in rathinapura

டாக்டர் பி.செய்யது அப்துல் ரஹ்மான் (பி.எஸ்.ஏ) இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முத்து வாணிகம் செய்த  குடும்பத்தில் செய்யது முகம்மது புஹாரி ஆலிம் அவர்களுக்கும் யூசுப் சுலைஹா உம்மா அவர்களுக்கும் மகனாக 1927ஆம் ஆண்டு பிறந்தார். டாக்டர் பி.எஸ்.ஏ அவர்களின் பிறந்த தேதி பள்ளி சான்றிதழ்களிலும் பாஸ்போர்டிலும் 15-10-1927 என்று பதிவாகி இருக்கிறது. பி.எஸ்.ஏ அவர்கள் சமூக சேவையிலும் , கல்வி மற்றும் வியாபாரத் துறையிலும் சிறந்து விளங்கினார். இது தவிர பிற்படுத்தப் பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் மேம்பாட்டிற்காக மிகக் …

Read More »