தமிழகம்

தேர்தல் செய்திகள் : தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 54 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல்

bjp c949

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 54 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் . டெல்லியில் நேற்று பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 54 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை மத்திய அமைச்சரும் தேர்தல் குழு செயலாளருமான ஜே.பி.நட்டா வெளியிட்டார். அதில், துணை தலைவர் வானதி சீனிவாசன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடும் தொகுதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Read More »

தேர்தல் செய்திகள் :திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள்

mmk9

 வரும் சட்டப் பேரவைத் தேர்தலில்  மனித நேய மக்கள் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.  இந்த நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினருடன் ஜவாஹிருல்லா தலைமையிலான குழுவினர் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு, மமகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை ஜவாஹிருல்லா சந்தித்தார். தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் ஜவாஹிருல்லா கூறியது: திமுக கூட்டணியில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. வரும் …

Read More »

தேர்தல் செய்திகள் : திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஐந்து தொகுதிகள்

iuml

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது இந்திய யூனியன் முஸ்லீம் லீக். இந்நிலையில் இன்று நடைபெற்ற தொகுதி பங்கீடு கூட்டத்தில், முஸ்லீம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. இதுகுறித்த ஒப்பந்தத்தில் திமுக தலைவர் கருணாநிதியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் காதர் மொய்தீனும் கையெழுத்திட்டனர். பிற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் முஸ்லீம் லீக் …

Read More »

வெளிநாட்டு வாழ் தமிழர் நலனுக்கு தனி அமைச்சகம் அமைக்க வலியுறுத்தல் !

shanawa777

வெளிநாட்டு வாழ் தமிழர் நலனுக்கு தனி அமைச்சகம் அமைக்க வலியுறுத்தல் ! கேரளாவில் இருப்பது போன்று தமிழகத்தில் வெளிநாட்டு வாழ் தமிழர் நலனுக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என யுஏஇ வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் ஆளூர் ஷாநாவஸ் தெரிவித்துள்ளார் முன்னதாக அவரை துபாயில் பட்டிணம் மணி, முத்தமிழ் வளவன், கீழக்கரையை சேர்ந்த எஸ்கேவி ஷேக் ,சஹீருதீன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.   மேலும் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது,   மக்கள் நல கூட்டணியில் உள்ள கட்சிகள் ,திமுக …

Read More »

தூத்துக்குடி அருகே இருவர் கொலையால் பதட்டம்: தலையை துண்டித்து கையில் எடுத்து சென்ற கும்பல்

murder3

தூத்துக்குடி மாவட்டம் பழைய காயலை சேர்ந்தவர் சுபாஷ் பண்ணையார். இவரது வீட்டின் அருகில் இவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் வழக்கம் போல அங்கு தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மர்ம கும்பல் அரிவாளுடன் புகுந்தது. அதனை பார்த்த தொழிலாளர்கள் நாலாபுறமும் தலைதெறிக்க சிதறி ஓடினர். அப்போது அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை அவர்கள் மீது சரமாரியாக வீசினர். இதில் வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து …

Read More »

‘மனிதநேய ஜனநாயக கட்சி’ என்ற புதிய கட்சி உதயம்

mjk9

‘மனிதநேய ஜனநாயக கட்சி’ என்ற புதிய கட்சி உதயம் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலராக இருந்த தமிமுன் அன்சாரி, கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் தற்போது இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம், ‘மனிதநேய ஜனநாயக கட்சி’ என்ற புதிய கட்சியை துவக்கினர். மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) அறிமுகப் பொதுக்கூட்டம் அய்யம்பேட்டையில் நடைபெற் றது புதிய கட்சியின் கொடியை, சென்னையில் நேற்று அறிமுகப்படுத்திய தமிமுன் அன்சாரி கூறியதாவது:நேர்மையான அரசியலையும், கண்ணியமான பொது வாழ்க்கையையும் காக்கும் வகையில் எங்கள் கட்சி விளங்கும். சமூகநீதி, சமூக …

Read More »

அப்துல்கலாமின் இலட்சிய இந்தியா கட்சி’ (வி.ஐ.பி.) என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி

vip4

மறைந்த ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகராக பணியாற்றி வந்தவர் பொன்ராஜ் கலாமுடன் சுமார் 20 ஆண்டுகள் பணியாற்றி வந்த பொன்ராஜ், கலாமின் எண்ணங்களை எழுத்தாக, பயிற்சியாக, பேச்சாக வெளிக்கொண்டு வந்தவர். கடந்த ஆண்டு கலாமின் மறைவுக்கு பின் அவரது பெயரில் ”அப்துல்கலாம் லட்சிய இந்தியா இயக்கம்” என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பில் கலாமுடன் பணியாற்றியவர்கள், நண்பர்கள், உறவினர்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் என பலரும் இணைந்திருந்தனர்.   இந்நிலையில் ராமேஸ்வரத்தில் ‘அப்துல்கலாமின் இலட்சிய இந்தியா கட்சி’ (வி.ஐ.பி.) …

Read More »

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றம்

tntj

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றம் திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் ஷிர்க்  ஒழிக்கும் மாநாடு திருச்சியில் உள்ள பிராட்டியூரில் நடைபெற்றது . பில்லி , சூனியம், ஜோதிடம் உள்ளிட்டவைகளை நம்ப வேண்டாம், இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் 12 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் …

Read More »

நிஜ ‘ஹீரோ’ யூனுசுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா விருது வழங்கினார்

yunus

வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்னை காப்பாற்றி உயிர் காத்த சிறந்த மனித நேயத்தை பாராட்டு வகையில் இன்று குடியரசு தின விழாவில், வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா யூனுஸ்சுக்கு வழங்கினார்.

Read More »

எழுத்தாளர் ஜெசிலா பானு எழுதிய ‘ நம் நாயகம்’ நூல் வெளியீடு சென்னையில் நடைபெற்றது

book

எழுத்தாளர் ஜெசிலா பானு எழுதிய ‘ நம் நாயகம்’ நூல் வெளியீடு சென்னையில் நடைபெற்றது எழுத்தாளர் ஜெசிலா பானு எழுதிய ‘ நம் நாயகம்’ நூல் வெளியீடு சென்னையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் முஹைதீன், மூத்த துணை தலைவர் அப்துர் ரஹ்மான், தொழிலதிபர் சலாஹுதீன்,நடிகர் பாண்டியராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர் .

Read More »