ராமநாதபுரம்

கீழக்கரை அருகே அரசு மேல் நிலை பள்ளி அருகே தேங்கிய‌ நீரை அகற்ற கோரிக்கை

vannagundu

கீழக்கரை அருகே அரசு மேல் நிலை பள்ளி அருகே தேங்கிய‌ நீரை அகற்ற கோரிக்கை கீழக்கரை மற்றும் வண்ணாங்குண்டு பகுதியில் பெய்த மழையால் வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானம் மழை நீரால் மூழ்கியது. . விளையாட்டு மைதானத்தில் தேங்கிய மழை நீரை ஊராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஓவ்வோரு ஆண்டும் இதே போன்ற நிலை நீடிப்பதாகவும் மழை சீராக வெளியேற தேவையான நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Read More »

இராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்க கட்டிடம் மராமத்து பணிகள் நிறைவு பெற்று திறப்பு

இராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்க கட்டிடம் மராமத்து பணிகள் நிறைவு பெற்று திறப்பு இராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கக் கட்டிடமான ஜனார்தனன் மாளிகை மராமத்து பணிகள் பார்க்கப்பட்டு தற்போது புது பொலிவுடன் திறக்கப்பட்டுள்ளது.இதனை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். மாவட்ட தலைவர் பழனிக்குமார் தலைமை உரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் தமீம் ராசா வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட வருவாய் அலுவலர் அலி அக்பர் கல்வெட்டை திறந்து வைத்தார். இநத நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் முக்கிய …

Read More »

திருப்புல்லாணி கோயிலில் நடைபெற்ற‌ நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

kovi-th959

திருப்புல்லாணி கோயிலில் நடைபெற்ற‌ நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர் திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு 9 நாட்களும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மூலவர்களுக்கு விசேச திருமஞ்சனம் ஆராதனைகள் நடைபெற்றது.கோயிலியில் அலங்கரிக்கப்பட்ட கொழுவின் முன்பாக பஜனை ,பிரபந்த பாடல்கள் பாடப்பட்டன. காலை பத்து மணியளவில் நான்கு ரத வீதிகளில் இரட்டை குடையுடன் ,குதிரை வாகனத்தில் கல்யாண ஜெகநாதபெருமாள் உலா வந்து நான்கு திசைகளை நோக்கி அம்பு எய்தார். ராமநாதபுரம் கீழக்கரை காஞ்சிரங்குடி மாயாகுளம் ராமேஸ்வரம் மண்டபம் பரமக்குடி மதுரை சிவகங்கை காரைக்குடி மற்றும் …

Read More »

ராமநாதபுரத்தில் நவராத்திரி திருவிழா

kov889

ராமநாதபுரத்தில் நவராத்திரி திருவிழா இராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற திருவிழாக்களில் ஒன்றான நவராத்திரி சிறப்பாக கொண்டாடப்பட்டது. மன்னர்கள் காலத்தில் இருந்து கொண்டாடப்படும் திருவிழா விஜயதசமி அன்று ஒவ்வொரு வருடமும் இராமநாதபுரம் நகரில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்து பின்பு இராஜராஜேஸ்வரி அம்மன் தங்கப்பல்லக்கில் வந்தவுடன் அனைத்து சுவாமிகளும் மகர்நோன்பு பொட்டலை சென்றடைந்தனர். பின்பு சுவாமிகளால் ஒவ்வொரு திசையை நோக்கியும் அம்பு ஏய்த பட்டது. அம்பினை எடுக்கவும் சுவாமி தரிசனம் காணவும் பெரும்பாலான மக்கள் திரண்டனர்.

Read More »

பெரியபட்டிணத்தில் நடைபெற்ற‌ சந்தனக்கூடு விழா

pp-kuudu

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் செய்யதலி ஒலியுல்லா தர்காவில்,115-வது ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு இன்று அதிகாலை மிக விமரிசையாக நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பெரியபட்டிணத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்கா உள்ளது.115-வது ஆண்டின் சந்தனக்கூடு விழா செப்-9ந்தேதி; கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று அதிகாலை நான்கு மணிக்கு பெரியபட்டணம் ஜலால், ஜமால் ஜூம்மா பள்ளிவாசலிருந்து தாரை, தப்பட்டை முழக்கத்துடன் ரதம் சகிதமாக,சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து அதிகாலை தர்கா வந்தடைந்தது. கூடியிருந்த பக்தர்கள் சந்தனக்கூடு மீது மலர் தூவி வரவேற்றனர்.அனைத்து …

Read More »

உள்ளாட்சி தேர்தலையோட்டி ராமநாதபுரம் மாவட்ட‌ வாக்களர் இறுதி பட்டியல் வெளியீடு

vakklar-patti

உள்ளாட்சி தேர்தலையோட்டி ராமநாதபுரம் மாவட்ட‌ வாக்களர் இறுதி பட்டியல் வெளியீடு நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ;தல் -2016 -யினை முன்னிட்டு இறுதி செய்யப்பட்ட வாக்காளா; பட்டியிலினை மாவட்ட கலெக்டர் நடராஜன் வெளியிட்டார் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (19.09.2016), எதிர் வரும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் -2016 -யினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர்; முனைவா;.ச.நடராஜன், இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியிலினை வெளியிட்டார் இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலினை வெளியிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்;.ச.நடராஜன், தெரிவித்ததாவது: தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து …

Read More »

கீழக்கரை அருகே குளபதம் கோவில் விழா

kovil kula9

கீழக்கரை அருகே குளபதம் கோவில் திருவிழா வருடம் தோறும் ஆடி மாததில் குளபதம் அம்மன் கோவிலில் களைகட்டும் கூழ் ஊத்தும் திருவிழா

Read More »

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

anjali

ராமேசுவரம் வரும் வெளிநாட்டினரும் உள்நாட்டு மாணவ-மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என பலரும் அப்துல்கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 2.11 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நினைவிடத்தில் அறிவுசார் மையம், அருங்காட்சியகம், மணிமண்டபம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக முதல்கட்டமாக ரூ.60 கோடி ஒதுக்கிய மத்திய அரசு, கட்டுமான பணிகளுக்கு தேவையான கூடுதல் இடத்தை ஒதுக்க தமிழக அரசை கேட்டுக்கொண்டது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் ஆய்வு செய்து, ஊராட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் …

Read More »

தங்கச்சிமடம் ஆலய திருவிழா

rames948

இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் தீவு பகுதியில் அமைந்துள்ள புனித சந்தியாகப்பர் ஆலயம் 400 ஆண்டுகள் பழமையானதாகும். மேலும் இது தீவுப்பகுதி மக்களின் காவல் தெய்வம் எனக் கருதப்படுகிறது. கொடியெற்றத்தில் தொடங்கி ஏழு நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வருவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டு 474 ஆம் ஆண்டு புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று சந்தியாகப்பரின் ஆசி பெற்றனர்.

Read More »

ராமநாபுரத்தில் மழை

rain rmd

வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் மழை பெய்தது. வெயில் சமயத்தில் வெயில் வாட்டி வதைக்காமல் மழைபெய்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திஉள்ளது. இவ்வாறு இன்று காலை ராமநாதபுரத்தில் சில மணி நேரம் கடும் மழை பொழிந்தது வெயில் இல்லாமல் குளுமை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த பல நாட்களாக வெயிலின் கொடுமையில் வாடிவதங்கிய மக்கள் இந்த சாரல்மழையால் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மீண்டு நிம்மதி பெருமூச்சு விட்டனர்

Read More »