ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் செப்டம்பர் 19 முதல் 28 வரை இரண்டாவது புத்தகத் திருவிழா!

PUTHAKAL

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முறையாக 2014 ஜனவரி 25-ந்தேதி முதல் பிப்ரவரி 2-ந்தேதி வரை புத்தக திருவிழா நடைபெற்றது. முதன் முறையாக நடந்த புத்தக திருவிழாவில், ஒன்றரை லட்சம் வாசகர்கள், 15 லட்சம் புத்தகங்களை வாங்கியதால், ஒன்றரை கோடி ரூபாய்க்கு விற்பனை எட்டியது. இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும், கலை இலக்கிய ஆர்வலர் சங்கமும் இணைந்து ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வரும் செப்டம்பர் 19 முதல் 28 வரை இரண்டாவது புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்தவுள்ளன. இதனை முன்னிட்டு ஆட்சியர் …

Read More »

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் படகு விவரங்களை ஆன்லைனில் பதிவுசெய்ய மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

klkboat1

ராமநாதபுரத்தில் மாவட்டத்தில்  இயங்கி வரும் அனைத்து படகுகளையும் ஆன்லைனில் பதிவு செய்திருக்க வேண்டும் என ஆட்சியர் க.நந்தகுமார் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் இயங்கி வரும் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் அனைத்தும் ஆன்லைனில் பதிவு செய்திருக்க வேண்டும்.விசைப்படகுகள் அனைத்தும் மீன்வளத்துறையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளபடி பதிவு எண் உரிய வண்ணம் மற்றும் உரிய அளவில் எழுதி இருக்க வேண்டியதுடன் வர்ணம் பூசியும் இருக்க வேண்டும். படகுகள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது, பதிவு சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையும் வைத்திருக்க வேண்டும். விசைப்படகுகள் …

Read More »

ராமநாதபுரத்தில் சீட்டு விளையாடிய சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு வேட்டு!

police-caps-250x250

ராமநாதபுரத்தில் சீட்டு விளையாடிய சிறப்பு எஸ்.ஐ மற்றும் எஸ்.பி அலுவலக பதிவறை எழுத்தர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ராமநாதபுரம் பாரதி நகர் 6வது குறுக்கு தெருவில் நேற்று முன்தினம் ஒரு கும்பல் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கேணிக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராஜேஸ்கண்ணா தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு சீட்டு விளையாடிக் கொண்டிருந்த சமூக நீதி, மனித உரிமை பாதுகாப்பு சிறப்பு எஸ்.ஐ ரவிச்சந்தின்(52), மாவட்ட காவல்துறை அலுவலக பதிவறை எழுத்தர் கார்த்திக் ராஜன்(53) உள்ளிட்ட 5 பேரை …

Read More »

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரம் பண்ணைக்குட்டைகள் அமைக்க நடவடிக்கை!

farmpond

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை, வைகை அணைத் தண்ணீர் ஆகியவற்றை நம்பியே இருக்கவேண்டிய நிலை உள்ளது. இதனால் விவசாயத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வரின் சிறப்பு அனுமதி பெறப்பட்டு வேளாண்மை வளர்ச்சிக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் பண்ணைக் குட்டைகள் வெட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது. ரூ. ஒரு லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் வெட்டப்படும் இப்பண்ணைக் குட்டைகளில் மொத்தம் 6 அடி ஆழத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஒன்றரை அடி ஆழம் …

Read More »

ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது!

cricket

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தால் நடத்தப்படும்மாவட்டங் களுக்கு இடையேயான 19 மற் றும் 25 வயதுக்கு உட் பட்டோ ருக்கான கிரிக்கெட் போட்டி யில் பங்கேற்க உள்ள வீரர்கள் தேர்வு வருகிற 15-ந்தேதி மாலை 3 மணிக்கு சீதக் காதி சேது பதி விளையாட்டு அரங் கில் நடைபெற உள்ளது. இதில் 1.9.95க்கு பின்னர் பிறந்தவர் கள் 19 வயதுக்கு உட்பட்டோ ருக்கான தேர்விலும், 1.9.89க்கு பின்னர் பிறந்தவர்கள் 25 வய துக்கு உட்பட்டோ ருக்கான தேர்விலும் வயது சான்றிதழு டன் கலந்து கொள்ளலாம். …

Read More »

துப்பாக்கிகளை காட்டி மிரட்டி தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு !படகும் சேதப்படுத்தப்பட்டது!

ராமேஸ்வரம்

நடுக்கடலில் ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் விரட்டியடித்தனர். இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் பாம்பன் மீனவர் படகு சேதமடைந்தது. தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தொடர்ந்து 3வது முறையாக இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் இருந்து நேற்றுமுன்தினம் ஏராளமான விசைப்படகு மீனவர்கள் பாக் ஜலசந்தி கடல் பகுதிக்கு சென்றனர். பிற்பகல் 2 மணியளவில் கச்சத்தீவு கடல் பகுதியில் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மறித்து, விரட்டியடித்தனர். மாலை வரை இலங்கை கடற்படையினர் தமிழக …

Read More »

இலங்கை அரசு விடுவித்த 33 மீனவர்களும் ராமேஸ்வரம் வந்தனர்!

rameshw

படம் மற்றும் செய்தி : தினகரன் இலங் கை அரசால் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 33 பேர் நேற்று மாலை ராமேஸ்வரம் வந்தடைந்தனர். இலங்கை மீனவர்கள் கூறியதால் மீன்பிடி படகுகள் சிறை பிடிக்கப்பட்டன என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர். எல்லை தாண்டியதாக ராமேஸ்வரத்தை சேர்ந்த பாண்டி, முத்து, முனிய சாமி, ரவிச்சந்திரன், லெட்சுமணன், செல்வம், ஆறுமுகம், அருள்தாஸ், கோரிபாஸ்உட்பட 29 மீனவர்களை மே 31ம் தேதி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். இவர்களது 6 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அனுராதபுரம் சிறை …

Read More »

ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசின் தொழில் கடன் உதவி!

Loan

படித்த வேலைவாய்ப்பு இல்லாத இளை ஞர் களுக்கு மானியத்துடன் கடன்உதவி வழங்கப் படுகிறது மானிய தொகை படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கும் திட் டம் தமிழக அரசால் செயல் படுத்தப்பட்டு வரு கிறது. ராமநாதபுரம் மாவட் டத்துக்கு 2014-15ம் ஆண்டுக்கு இத் திட்டத்தின் கீழ் பயன்பெற 73 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சம் மானியத்தொகை வழங்க இலக்கு நிர்ணயிக் கப்பட் டுள்ளது. இந்த திட்டத்தில் உற்பத்தி தொழில் தொடங்க அதிகபட்சம் ரூ.5 லட்சமும், சேவை தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.3 லட்சமும், வியாபாரத்துக்கு அதிகபட்சம் ரூ.1 …

Read More »

தடைகாலம் முடிவு: முதல் நாளில் 29 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!

06THRAMESWARAMBOATS_943387f

ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற மீனவர்களில் 29 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்ததால், 46 நாட்களுக்குப் பின்னர் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் நேற்று காலை புறப்பட்டுச் சென்றனர். நேற்று மாலை கச்சத் தீவுக்கும், தலை மன்னாருக்கும் இடையே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். பத்துக்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன் பிடி சாதனங்களை சேதப்படுத்தியதுடன், 6 படகுகளையும், அதில் இருந்த 29 மீனவர்களையும், இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் …

Read More »

ராஜபக்சே வருகையை கண்டித்து ராமநாதபுரத்தில் ரயில் மறியல் !34பேர் கைது!

arrest

ராஜபக்சே இந்தியாவிற்கு வருவதை  கண்டித்தும்,அவரை பதவியேற்பு விழாவிற்கு அழைத்த பாஜகவை கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் இராமநாதபுரத்தில் நேற்று ரயில் மறியல் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் சோமு தலைமை தாங்கினார்.மாவட்ட பொதுச்செயலாளர் பி.எஸ்.ஐ.கனி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம்,முதுகுளத்தூர் தொகுதி தலைவர் இஸ்ஹாக்,திருவாடானை தொகுதி தலைவர் ஜஹீருதீன்,தமிழர் தேசிய இயகம் மாவட்ட செயலாளர் பசுமலை,பெரியார் திராவிட இயக்கம் மாவட்ட தலைவர் நாகேஸ்வரன்,வைகை பாசன விவசாய சங்கம் மாவட்ட செயலாளர் மதுரை வீரன்,தமிழர் களம் மாவட்ட செயலாளர் தர்மேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இராஜபக்சே,மோடி மற்றும் பாஜக ஆகியோரை …

Read More »