இந்தியா

பெரும் பணக்காரர்கள் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 8வது இடம்!

currencies

பெரும்பணக்காரர்கள் அதிகம் பேரை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 8வது இடம் கிடைத்துள்ளது. நியூ வேர்ல்டு வெல்த் அமைப்பு உலகின் பெரும் பணக்காரர்கள் எத்தனை பேர் உள்ளார்கள் என்பதை கணக்கிட்டு பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ரூ. 60 கோடிக்கும் (10 மில்லியன் டாலர்) மேல் தனி நபர் சொத்து வைத்துள்ளவர்களை  அந்த அமைப்பு கணக்கிட்டுள்ளது. அந்த பட்டியலில் எந்தெந்த நாடுகள் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளன என்ற விவரம் வருமாறு. 1. அமெரிக்கா – 183,500 பெரும்பணக்காரர்கள் 2. சைனா – 26,600 3. ஜெர்மனி …

Read More »

இனி வாட்ஸ் அப்பிற்கு இன்டெர்நெட்தேவை இல்லை…

13-airtel-whatsapptieup

இன்றைக்கு ஸ்மார்ட் போன்கள் வைத்திருக்கும் பெரும்பாலானவர்களின் மொபைலில் இடம்பெறும் முதல் ஆப்ஸ் வாட்ஸ் அப் தாங்க. இந்த இலவச மெசேஜிங் ஆப்பை உலகம் முழுவதிலும் 50 கோடி யூஸர்ஸ் பயன்படுத்துகிறார்கள். மாதந்தோறும் 5 கோடி புதிய நபர்கள் உலகம் முழுவதிலும் இருந்து வாட்ஸ் ஆப்பில் இணைகிறார்கள். இப்போது ஏர்டெல் நிறுவனம் வாட்ல் ஆப்புடன் கைகோர்த்துள்ளது இதன் மூலம் வாட்ஸ் ஆப்பிற்கு தனியாக நெட் விட இருக்கின்றது ஏர்டெல். இந்த நெட்கார்டை பயன்படுத்தி வாட்ஸ் ஆப்பை மட்டுமே நமது மொபைலில் இயக்க முடியும் இந்த நெட் …

Read More »

இந்திய வான்பரப்பில் செல்போன் மற்றும் லேப்டாப்களைப் பிளைட் மோடில் பயன்படுத்தலாம் : சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி

flight

இந்திய வான்பரப்பில் விமானப் பயணத்தின்போது இனி செல்போன் மற்றும் லேப்டாப்களைப் பயன்படுத்துவதற்கு சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (டிஜிசிஏ) அனுமதி அளித்துள்ளது. ஆனால் இவைகளை `பிளைட் மோட்’ வைத்து செயல்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விமான பணியாளர்கள் பொதுவாக விமான பயணத்தின் போது செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது என்று கேட்டுக் கொள்வார்கள் . இது விமானத்துக்கு வரும் சிக்னல்களுக்கு இடையூறாக இருக்கக்கூடும் என்பதால் இத்தகைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தற்பொழுது சிக்னல்களை வெளியிடாத வகையில் லேப்டாப் மற்றும் செல்போன்களை பிளைட் மோடில் …

Read More »

உங்கள் வங்கி கணக்கில் மிகக் குறைந்த இருப்பு இருந்தால் இனி அபராதத் தொகை இல்லை.

RBI

உங்களுடைய சேமிப்பு வங்கி கணக்கில், வங்கி நிர்ணயித்து இருக்கும் குறைந்த இருப்பை விட கணக்கில் குறைவாக  பணம்  இருந்தால் தற்பொழுது வங்கிகள் அபராத தொகை விதிக்கிறது. இனிமேல் இந்த அபராதத் தொகை விதிக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி நாட்டிலுள்ள வங்கிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறது. அதற்கு பதிலாக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தனது சேவைகளை குறைத்துக் கொள்ளலாம் என்றும் கூறி இருக்கிறது. மாதம் இருமுறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் பாலிசி கூட்டத்தில் “மக்களுடைய இயலாமையை பயன்படுத்தி அவர்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது” என்றும் அதற்கு பதிலாக வங்கிகள் …

Read More »

ஒரு ரூபாயில் விமான பயணம்! ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு !!

FlySpiceJet 1 Rs nw

  இந்தியாவின் மலிவு விலை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவர உள்நாட்டு விமான பயனங்களுக்கு சில குறிப்பிட்ட வரிகள் இல்லாமல் 1 ரூபாயில் அடிப்படையில் சேவை அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த சலுகை ஏப்ரல் 1 முதல் 3 வரை மட்டும். இந்த டிக்கெட்களின் பயன காலம் 2014 ஆம் ஆண்டின் ஜூலை 1 முதல் 2015ஆம் ஆண்டின் மார்ச் 28 வரை விதிக்கப்பட்டுள்ளது. இச்சேவை குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் புதிய தலைமை வர்த்தக அதிகாரியை கேட்ட போது “விடுமுறை நாட்கள் அல்லது …

Read More »

“ஏர் ஆசியா இந்தியா” புதிய உள்நாட்டு விமான சேவை நிறுவனத்தின் முதல் விமானம் சென்னை வந்து சேர்ந்தது .

AirAsia

மலேசியாவை தலைமையகமாக கொண்ட குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஏர் ஆசியா குழுமம் இந்தியாவில் புதிய உள்நாட்டு சேவையை விரைவில் துவங்க இருக்கிறது. “ஏர் ஆசியா இந்தியா” என்ற இந்த விமான சேவை நிறுவனத்தின் முதல் விமானம் இன்று காலை பிரான்சிலிருந்து சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தது. 180 இருக்கைகள் கொண்ட இந்த ஏர் பஸ் A320 விமானம் அது தயாரிக்கப்படும் பிரான்ஸ் தொழிற்சாலையிலிருந்து சென்னைக்கு காலை 9:45 மணிக்கு வந்து சேர்ந்தது. இந்த விமானத்திற்கு சென்னை விமான நிலையத்தில் “வாட்டர் கேனன் …

Read More »

நடுவானில் ஆட்டம் பாட்டு ஸ்பைஸ் ஜெட்டுக்கு நோட்டீஸ்! இரண்டு விமானிகள் சஸ்பெண்ட்!!

spice

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நடுவானில் விமான ஊழியர்கள் ஆட்டம் பாட்டு நடத்தியதால் சிவில் விமான போக்குவரத்து பொது இயக்குநரகம் ஸ்பைஸ் ஜெட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியது இரண்டு விமானிகளும் தற்காலிக வேலை இடை நிறுத்தம் செய்யப்பட்டார்கள் சென்ற மார்ச் 17 திங்கள் கிழமை அன்று தனது எட்டு விமான சேவையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு நடுவானில் ஸ்பைஸ் ஜெட் விமான ஊழியர்கள் ஒரு சிறிய நடன நிகழ்ச்சி நடத்தினார்கள். அவர்களுடன் சில பயணிகளும் ஆட்டத்தில் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியின் வீடியோவை சில பயணிகள் யூ …

Read More »

அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் 7வது சீசன் முதல் கட்ட போட்டி அட்டவணை வெளியீடு

IPL-Season-7-Team-list

அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் 7வது சீசன் முதல் கட்ட போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது அபுதாபியில் ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கும் இப்போட்டிகள், ஏப்ரல் 30-ம் தேதி வரை அபுதாபியில் உள்ள ஷெய்க் ஜாயித் கிரிக்கெட் மைதானம் , துபாயில் உள்ள இன்டர்னேசனல் கிரிக்கெட் மைதானம்,  சார்ஜா கிரிக்கெட் அசோஷியேஷன் மைதானம்  ஆகிய 3 மைதானங்களில் மொத்தம் 20 போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் …

Read More »

விஞ்ஞானி ஐன்ஸ்டீனுக்கு இணையான IQ வில் அசத்தும் ஆறு வயது இந்திய சிறுவன்

kidIQ

விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் அறிவுத்திறனுக்கு சமமாக 150 அறிவுத் திறன் புள்ளிகளை கொண்டு ஹரியானாவில் உள்ள 6 வயது சிறுவன் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறான். இந்த சிறுவனின் அறிவுத்திறனும் செய்திகளை உள்வாங்கும் தன்மையும் அதை விரைவில் வெளிப்படுத்தும் சக்தியும் அறிஞர்களை வியக்க வைக்கிறது. கேள்விகளுக்கு சில நொடிகளில் பதிலளிக்கும் இந்த சிறுவனின் திறனைக் கண்டு “கூகுள் சிறுவன்” என்று பெயர் பெற்றுள்ளான். ஹரியானவின் கர்னல் மாவட்டத்தின் குஹந்த் என்ற கிராமத்தில் 2007 டிசம்பர் 24ல் பிறந்த “கெளடில்யா” என்ற இந்த சிறுவன் உள்நாட்டு மற்றும் சர்வதேச விவகாரங்கள், …

Read More »

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமாகலாம் !

aathar

கூடிய விரைவில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாகலாம் என்று டில்லியில் உள்ள உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது ஆதார் அடையாள அட்டை எடுக்க வேண்டும் என்று விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாங்கள் இந்தியா செல்லும் போது அதற்கான அரசாங்க அலுவலகங்களில் சென்று எடுக்கிறார்கள். ஜனவரியில் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாட்டில் அமீரத்தில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகங்களின் மூலம் ஆதார் அடையாள அட்டை பெறுவதற்கான வசதிகளை செய்யுமாறு கோரிக்கை விடப்பட்டது.இந்த கோரிக்கையை டெல்லியில் உள்ள அதற்கான அலுவலகங்களுக்கு …

Read More »