இந்தியா

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மாநில அரசுகள் தனித்துறை அல்லது நல வாரியம் அமைக்க அமீரக இந்திய தூதரகம் முயற்சி!

indianambassador

வெளிநாட்டில் வசிக்கும் இந்திய தொழிலாளர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் தனித்துறை அல்லது நல வாரியம் அமைக்க வேண்டி மாநில அரசுகளை கேட்டுக் கொண்டு அதற்கான பெரும் முயற்சிகளை அபுதாபியிலுள்ள இந்திய தூதரகம் எடுத்து வருகிறது. பல்வேறு மாநிலத்தை தேர்ந்த தொழிலாளர்கள் அமீரகத்திலும், மற்ற வளைகுடா நாடுகளிலும் வசித்து வந்தாலும் அந்தத்த மாநில அரசுகள் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க அல்லது அவர்களின் நலனுக்காக தனித்துறையோ அல்லது நல வாரியமோ அமைக்கவில்லை. கேரள அரசால் தொடங்கப்பட்டுள்ள “வெளிநாடு வாழ் கேரளீயர்கள் விவகாரத் துறை”யைப் (Non Resident …

Read More »

இந்தியாவிலிருந்து இந்த வருடம் 136,020 யாத்திரிகள் ஹஜ் செல்கிறார்கள், முதல் விமானம் மதினாவை அடைந்தது!

haj2

235 ஹஜ் யாத்திரிகர்களுடன் கொல்கத்தாவிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI5001 புதன்கிழமை புனித மதீனா நகரின் பிரின்ஸ் முஹம்மது ஏர்போர்ட்டை சென்றடைந்தது. அதே தினம் 275 ஹஜ் பயணிகளுடன் ஹஜ் விமானம் ஸ்ரீநகர் ஏர்போர்டிலிருந்து மதீனா சென்றடைந்தது, பயணிகளை ஜம்மு காஷ்மீரின் முதல்வர் உமர் அப்துல்லா வழி அனுப்பி வைத்தார். யாத்திரிகர்களை சவுதி அரேபியாவின் இந்திய தூதர் ஹமீது அலி ராவும், ஜெத்தாவில் உள்ள இந்திய துணைத்தூதர் பி.எஸ். முபாரக் பி.எஸ்.முபாரக்கும் மதீனா ஏர்போர்ட் சென்று வரவேற்றனர். சவுதி அரசாங்கத்தின் சார்பில் ஹஜ்  மினிஸ்டரி அதிகாரிகளும், விமானத்துறை …

Read More »

இந்தியாவில் அதிகமாக மது அருந்தும் மாநிலமான கேரளாவில் அதிரடி நடவடிக்கை! முதல் கட்ட மதுவிலக்கு அமல்!!

tasmac9

இந்தியாவில் அதிகமாக மது அருந்தும் மாநிலமான கேரளாவில் அடுத்த பத்து ஆண்டுகளில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்; இதன்படி முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்கு குறைவான ஓட்டல்களில் செயல்பட்ட 700 மது பார்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு முறைப்படி ஒப்புதல் அளிக்கப்படும் என்று முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் ஏற்கனவே மூடப்பட்ட 418 மது பார்கள் மீண்டும் திறக்கப்படாது. மீதமுள்ள 312 பார்கள் இந்த நிதியாண்டில் மூடப்படும். அதன்பின் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் …

Read More »

வெளிநாட்டில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் கயிற்றால் கட்டப்பட்டு அழைத்து வரப்பட்ட பயணி!

Air-India_52

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இருந்து டெல்லிக்கு கடந்த புதன்கிழமை வந்த  ஏர் இந்தியா  விமானத்தில் 27 வயதுடைய இந்திய வாலிபர் குடித்து விட்டு செய்த கலாட்டாவால் அவரை இருக்கையுடன் கயிற்றால் கட்டி வைத்து கொண்டு வரப்பட்டார். விமானத்தில் கொடுக்கப்பட்ட மதுவை நன்றாக குடித்துவிட்டு அளவுக்கு அதிகமான போதையில் விமான சிப்பந்திகளுடனும் மற்ற பயணிகளுடனும் சண்டையிட ஆரம்பித்தார். இரண்டு சிப்பந்திகளின் சட்டை கிழித்ததோடு மட்டுமல்லாமல் மற்ற பயணிகளை அடித்து கடிக்க ஆரம்பித்த விட்டார். இதைக் கண்ட விமானத்தின் கேப்டன் விமானத்தை சிங்கப்பூரை நோக்கி திருப்பி பயணியை …

Read More »

195 பயணிகளுடன் துபாய் சென்ற விமானம் என்ஜின் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்!

airindiaexpressflight

திருவனந்தபுரத்திலிருந்து துபாய் சென்ற ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ்  விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இன்ஜின் கோளாறு காரணமாக  அதே விமான நிலையத்தில் மீண்டும் அவசரமாக தரையிறங்கியது. இதனால் 195 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நேற்று மாலை 4.30 மணிக்கு கிளம்ப வேண்டிய இந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானம் புறப்பட தாமதமானது. கோளாறு சரிசெய்யப்பட்ட பின் மீண்டும் இரவு 7:43 மணியளவில் மீண்டும் துபாய்க்கு புறப்பட்டது . எனினும் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திற்குள் அதன் என்ஜினில் மறுபடியும் கோளாறு ஏற்பட்டது. …

Read More »

இந்தியர்களின் நம்பர் 1 வெளிநாட்டு  சுற்றுலாதளம் துபாய்!

dubai

இந்தியர்களின் விருப்பமான வெளிநாட்டு சுற்றுலா தளங்களில் முதலிடத்தை துபாய் நகரம் பிடித்துள்ளது. கடந்த 2 வருடங்களாக முதலிடத்தை பிடித்திருந்த பாங்காக்கை பின்னுக்கு தள்ளி துபாய் முதலிடத்துக்கு வந்துள்ளதாக ஹோட்டல்.காம் இணையதளம் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. சிங்கப்பூர், ஹாங்காங் , பட்டையா போன்ற தென்கிழக்கு ஆசிய நகரங்களும் இந்தியர்களின் முக்கிய வரிசையில் உள்ளது. நியூயார்க்கும் லண்டனும் இந்தியர்களின் 4ம் மற்றும் 5ம் இடத்தில் உள்ளன. சென்ற வருடம் 10 இடத்தில் இருந்த பாரிஸ் தற்பொழுது 8 ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. லாஸ்வேகஸ் 9ம் இடத்திலும் …

Read More »

ஏர் இந்தியா விமானம் திருவனந்தபுரத்தில் தரை இறங்கும் போது டயர் வெடித்தது!

Air-India-Airbus-A310-324

மாலத்தீவு தலைநகர் மாலேவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்தின் பின்புற டயர், விமானம் தரையில் இறங்கும் போது எதிர்பாராதவிதமாக வெடித்தது. விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட கோளாறு அல்லது டயரில் இருந்த அதிகப்படியான அழுத்தம் டயர் வெடித்ததற்கு காரணமாக இருந்திருக்கலாம் என்றும், தொழில்நுட்ப நிபுணர்களின் ஆய்வுக்குப் பிறகே காரணம் தெரிய வரும் என்றும் விமானப் போக்குவரத்துத் துறை பொது இயக்குநர் கூறியுள்ளார்.

Read More »

இந்தியாவில் சொகுசு வாழ்க்கை வாழும் வீட்டுப் பணிப்பெண்கள்! மாதம் ரூ30,000 வரை சம்பாதிக்கிறார்கள்!!

gurgaon-banner

டெல்லியை அடுத்து ஹரியானாவில் உள்ள குர்கவுன் பகுதி சொகுசு அபார்மெண்ட்களுக்கும் ஆடம்பர வில்லாக்களுக்கும் பிரசித்தி பெற்றது. தற்பொழுது அங்கு பணிபுரியும் வீட்டு பணிப் பெண்களும் மிக வசதியாக வாழ்கிறார்கள். 26 வயது வீட்டு பணிப்பெண் கோனிகா ராய் மாதம் ரூ30,000 சம்பாதிக்கிறார், அவருக்கு கோவா பிடித்தமான சுற்றுலா தளமாக இருந்தாலும் இந்த வருடம் ஊட்டிக்கு சென்று வந்திருக்கிறார். 18 வயது வீட்டு பணிப்பெண் நிம்மி மாதம் ரூ25,000 சம்பாதிக்கிறார். இவர் சர்வதேச பிராண்டான ஜரா வில் உடை வாங்கியுள்ளார், இதற்கு முந்தைய முதலாளி குடும்பத்தவர் அன்பளிப்பாக …

Read More »

முதன்மை விமானி உறக்கம்! துணை விமானி கணிணியில் கவனம்!! நடு வானில் 5000 அடி கீழே இறங்கிய ஜெட் ஏர்வேஸ் விமானம்!!!

jetairlines

மும்பையில் இருந்து பெல்ஜியம் தலைநகரான பிரஸல்ஸுக்கு கடந்த வெள்ளியன்று சென்று கொண்டிருந்த  ஜெட் ஏர்வேஸ் போயிங் 777 விமானம், துருக்கியின் தலைநகரான அங்காராவின் வான் எல்லையில் பறந்து கொண்டிருந்த போது 34000 அடி உயரத்தில் இருந்து திடீரென 5000 அடி கீழே இறங்கியது. அப்போது தலைமை விமானி உறங்கிக் கொண்டிருந்ததாகவும்,  துணை பெண் விமானி தனது கணிணி டேபில் கவனமாக இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. உறக்க நிலையில் விமானி இருந்த போது , விமானத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய துணை விமானி …

Read More »

தனது பிறந்த நாளுக்கு 1.33 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க சட்டை அணிந்த மகாராஷ்டிரா அரசியல்வாதி!

goldshirt2

  மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபரும், அரசியல்வாதியுமான பங்கஜ் பரேக், 4 கிலோ எடையில், தங்கச் சட்டை ஒன்றை தயாரித்து, அணிந்துள்ளார்; இதன் மதிப்பு 1.33 கோடி ரூபாய். மும்பையில் இருந்து 260 கி. மீட்டர் தொலைவில் உள்ள இயோலா மாநகராட்சியின் கவுன்சிலராக உள்ள சரத்பவாரின் தேசிய வாத காங்கிரசை சேர்ந்தவர் பங்கஜ் பரேக். 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர் சிறுவயதிலேயே ஜவுளித் தொழிலில் இறங்கி மிகக் குறுகிய காலத்தில் பெரும் தொழிலதிபராக உயர்ந்துள்ளார். இவர் நேற்று, தன்னுடைய 45வது பிறந்த …

Read More »