இந்தியா

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு எல்சிடி, எல்இடி, பிளாஸ்மா டிவி கொண்டு வர புதிய விதிமுறை

led

வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு இனி ரூ.25,000க்கு மேற்பட்ட ரொக்கம், எல்சிடி, எல்இடி, பிளாஸ்மா டிவிக்களை கொண்டு வந்தால், அவற்றை சுங்க உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட வேண்டுமென்று மத்திய அரசு சார்பில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதே போல, சுங்க வரியில்லா சிகரெட் அளவு 50 சதவீதம் வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதித்துறை அமைச்சகம் சுங்க சரக்கு அறிவிப்பு ஒழுங்கு விதிமுறையில் சில திருத்தங்கள் செய்து நேற்று வெளியிட்டது. அதன்படி, விமானத்தில் இந்தியாவுக்கு வரும் அனைத்து பயணிகளும் ரூ.25,000க்கு மேற்பட்ட கரன்சிகளையோ, எல்சிடி, எல்இடி, பிளாஸ்மா …

Read More »

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் உடல் நல்லடக்கம் ( முழு வீடியோ )

apjkalam

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் உடல் நல்லடக்கம்  ( முழு வீடியோ )  

Read More »

மறைந்த அப்துல் கலாம் உடல் நல்லடக்கம் !ராமேஸ்வரத்தில் திரண்ட மக்கள் வெள்ளம்

kalam44

மறைந்த அப்துல் கலாம் உடல் நல்லடக்கம் ! மக்கள் வெள்ளம் திரண்டது இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த கல்வியாளருமான அப்துல் கலாம் அவர்கள் மேகாலயாவின் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கிடையே பேசிக் கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக ஷில்லாங்கின் பெதானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கலாம், அங்கு சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார். இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கு மற்றும் நல்லடக்கம் கலாமின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களின் விருப்பத்திற்கேற்ப அரசு மரபுகளைத் தாண்டி அவரது சொந்த ஊரான …

Read More »

யாகூப்மேனன் தூக்கிலப்பட்டார்

yakoo99

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி 13 இடங்களில் தீவிரவாதிகள் தொடர் குண்டுவெடிப்புகளை அரங்கேற்றினர். இதில் 257 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 713 பேர் படுகாயமடைந்தனர்.  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யாகூப் மேமன், பாகிஸ்தானில் இருந்து வந்து இந்திய அதிகாரிகளிடம் சரணடைந்தவர். தம் மீது எந்த குற்றமும் இல்லை என்பதற்காக யாகூப் மேமன் சரணடைந்திருந்தார். அத்துடன் மும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் பல திருப்பங்கள் ஏற்படுவதற்கு காரணமாக பல்வேறு தகவல்களையும் வழங்கியிருந்தார். இருப்பினும் மும்பை தடா …

Read More »

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் காலமானார்

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் காலமானார் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்,83 , நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மேகாலயா மாநிலம் சென்றிருந்தார். அங்கு ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஷில்லாங் நகரில் உள்ள பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து ராணுவ டாக்டர்கள் விரைந்து …

Read More »

யாகூப் மேனன் தூக்கு ரத்து கோரி பல்வேறு கட்சியினர் மனு !

hanging

யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி பல்வேறு கட்சித்தலைவர்கள் நேற்று ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்தனர். 30–ந்தேதி தூக்கு மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனைக்கு எதிராக யாகூப் மேமன் மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து அவரை 30–ந்தேதி அதிகாலையில் தூக்கிலிட மும்பை தடா கோர்ட்டு வாரண்டு பிறப்பித்தது. அதன்படி யாகூப் மேமனை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளை நாக்பூர் மத்திய சிறை நிர்வாகம் முழுவீச்சில் செய்து வருகிறது. கருணை மனு …

Read More »

2050ல் உலக பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாம் இடம் பெறும்! ஆய்வில் தகவல்

great-india

  துபாய்.பொருளாதாரத்தில் உலகை ஆதிக்கம் செலுத்தி வந்த ஐரோப்பிய‌ நாடுகளை பின் தள்ளி 2050ல் ஆசியா நாடுகள் முன்னிலை வகிக்க உள்ளதுஹச் எஸ் பி சி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3ம் இடம் பெற்று சூப்பர் பவர் நாடுகளில் ஒன்றாக திகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2050க்கான ஆய்வறிக்கைபடி முப்பது நாடுகளின் தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது இதில் சீனா முதலிடம்,அமெரிக்க இரண்டாமிடமும் ,இந்தியா மூன்றாமிடமும் அதற்கடுத்த வரிசையில் ஜப்பான்,ஜெர்மனி,இங்கிலாந்து,பிரேசில் ,மெக்சிகோ,பிரான்ஸ், கனடா ,இத்தாலி,துருக்கி,தென் கொரியா, ஸ்பெயின்,ரஷியா,இந்தோனேசியா,ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா,எகிப்த்,மலேசியா,சவூதி அரேபியா,தாய்லாந்து, நெதர்லாந்து …

Read More »

ஒரிசாவில் தாக்குதலுக்குள்ளான போலீசார்! அடித்து சாக்கடையில் தள்ளினர் !

bhuvan9393

  ஒரிசாவில் போலீசார் மீது கடுமையான தாக்குதல்! குடிசை பகுதி மக்கள் அடித்து சாக்கடையில் தள்ளினர் ! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்ததாக கூறி ஒரிசா மாநிலம் புவேனேஸ்வர் க்ஷ்மி நகர் காவல் நிலையத்தை ச்சார்ந்த காவல்துறைஅதிகாரிகள் ஹல்டிபாடா குடிசை பகுதி மக்களால் தாக்கப்பட்டனர்.இதில் லக்ஷ்மிநகர் காவல்நிலையத்தைச்சார்ந்த பொறுப்புநிலை ஆய்வாளர் ரஜட்ராய், சப் இன்ஸ்பெக்டர் அஷோக்ஹன்ஸ்டா உள்ளிட்ட அதிகாரிகளும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர். ல‌க்ஷ்மி நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்ஜேனா (திருமணமானவர்), அதே பகுதியை ச்சார்ந்த ஒரு பெண்னை கர்ப்பமடைய செய்ததாக …

Read More »

முஸ்லிம் என்பதால் வேலை தர மறுத்த மும்பை நிறுவனம் மீது எப் ஐ ஆர் பதிவு

zeeshan

முஸ்லிம் என்பதால் வாலிபருக்கு வேலை தர மறுத்த மும்பை நிறுவனம் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 23 வயதான எம்.பி.ஏ. பட்டதாரி ஜேஷான் அலி கான். பன்னாட்டு நகை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றின் வேலைக்கு ஆள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து இணையம் மூலம் விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பித்த 15-வது நிமிடத்தில் அவருக்கு ஒரு பதில் வந்துள்ளது. ஆர்வமாக மின் அஞ்சலை திறந்து பார்த்தவருக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு வந்த ஒரு வரி பதிலில் ”நாங்கள் முஸ்லிம் அல்லாதவர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கிறோம்” என …

Read More »

உலகின் முதல் 7 நாடுகளின் தங்கம் கையிருப்பை விட இந்திய மக்களின் தங்கம் கையிருப்பு அதிகம்!

gold

நாட்டிலுள்ள பொதுமக்கள் வசம் 20 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான தங்கம் கையிருப்பில் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மக்களிடம் உள்ள தங்கத்தின் துல்லியமான விவரம் குறித்த தகவல் அரசின் வசம் இல்லை. ரிசர்வ் வங்கி வசம் 557.75 டன் தங்கம் கையிருப்பில் உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மாநிலங்களவையில் எழுத்து மூலமாக அளித்த பதிலில் தெரிவித்தார். இந்திய மக்களைடம் உள்ள இருப்பானது உலகில் தங்க இருப்பு அதிகம் உள்ள முதல் 7 நாடுகளைவிட அதிகம் உலகிலேயே அதிக அளவில் தங்கத்தை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா …

Read More »