வளைகுடா

பூங்கா மற்றும் கடற்கரையோரம் சோலார் சக்தியில் செயல்படும் இலவச இண்டெர்நெட் நிலையங்கள் !

free wifi  dubai

துபாய் கடற்கரையோரம் முதல்முறையாக இலவச வயர்லெஸ் இண்டெர் நெட் வசதி துபாய் முனிசிபாலிட்டி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பனைமரம் வடிவில் அமைக்கப்பட்டுள்ள 6 மீட்டர் உயரமுள்ள இந்த ஸ்மார்ட் பாம்\ நிலையங்களில் 53 மீட்டர் சுற்றளவில் 50 பயனாளிகளுக்கு உபயோகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி மூல ம் செய்லபடும் இந்த நிலையத்தின் மூலம்  கடற்கரை விதிகள், வழிகாட்டல்கள், குறிப்புகள், மற்றும் கடலின் சூழ்நிலை,பருவநிலை குறித்த அறிவிப்புகள் உள்ளிட்டவைகளை அறிந்து கொள்வதோடு மொபைன் போன் மற்றும் கணினிகளுக்கு சார்ஜ் செய்து கொள்ள முடியும் . உலக …

Read More »

ஷார்ஜாவில் பார்வையாளர்களை கவர்ந்த எந்திர‌ ‘டைனோசர்’

dino sha100

ஷார்ஜா புத்தக ஆணையம் சார்பில் குழந்தைகள் வாசிப்பு திருவிழா 7வது ஆண்டு கண்காட்சி மையத்தில் கடந்த 22ந்தேதி தொடங்கியது. 11 நாட்கள் நடைபெற்ற இவ்விழா நிறைவடைந்தது. வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கருத்தரங்கங்கள் நடைபெற்றது.  சர்வதேச எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். எகிப்து எழுத்தாளர்கள் இந்திய எழுத்தாளர் அஞ்சனா வஸ்வானி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். மேலும் குழந்தைகளுக்கான புத்தக கண்காட்சியும் மற்றும் பிரம்மாண்ட டைனோசர்கள் வடிவமைப்பில்  செயற்கையாக அசைவுகளோடு  உருவாக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான‌ பார்வையாளர்கள் வந்து சென்றனர்.

Read More »

‘ஸ்ட்ரீட்கான்’ கலை திருவிழா !

street con 100

    துபாயில் ஸ்ட்ரீட்கான் எனும் தெருவோர கலை திருவிழா  கடந்த மாதம் 23ல் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் அல் குரைர் சென்டர் சார்பில் நடைபெற்றது.இதற்காக ஷாப்பிங்க் மால் அமைந்திருந்த சாலைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கலைகளில் ஆர்வமுடையர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சுவர் ஓவிய போட்டி,சைக்கிள் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சாலையில்  தத்ரூபமான ஓவியம் வரையப்பட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான சிறு சிறு கடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. கலை நிகழ்ச்சிகளில் உள்ளூர் மற்றும் சர்வதேச கலைஞர்களும் ஏராளமான குழந்தைகள் உள்ளிட்ட  பொதுமக்களும் …

Read More »

துபாயில் நீருக்கடியில் டென்னிஸ் மைதானம் அமைக்க திட்டம்

Optimized by JPEGmini 3.11.5.0 0xcc55b933

துபாய். சர்வதேச அளவில் புகழ்பெற்ற தனியார் கட்டிட வடிவமைப்பாளர்களால் துபாயில் நீருக்குடியில் டென்னிஸ் மைதானம் அமைப்பதற்கான வரைபடத்துடன் கூடிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மிதக்கும் பாலம்,உயரமான கட்டிடம் என பல்வேறு பிரமிக்கதக்க கட்டிடங்களை கொண்டுள்ள துபாயில் இது போன்ற  மைதானம் அமைவது பொருத்தமானதாக இருக்கும் என இப்பணியில் ஈடுபட்டுள்ள புகழ்பெற்ற கட்டிட வரைபட வடிவமைப்பாளர்களில் ஒருவராக  கோட்லா தெரிவித்தார். மேலும் இப்பணியை தொடங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை ஆர்வமுள்ள‌ முதலீட்டாளர்கள் மற்றும்  வங்கிகள் மூலம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது  

Read More »

சவூதி அரேபியாவில் தமிழ்குடும்ப சங்கம நிகழ்ச்சி

saudi prog

சவூதி அரேபியா அல் ஜுபைல் கடற்கரை மண்டபத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் குடும்பங்கள் ஒன்றிணைந்த மெகா குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. கிழக்கு மாகாண இந்தியா ஃபிரட்டர்னிட்டி ஃபோரம்(IFF) தமிழ் பிரிவும்,யுனிவர்சல் இன்ஸ்பெக்சன்(UIC) கம்பெனியும் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் தமிழ் கலாச்சார விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன. காலை 10 மணிக்கு மாநாட்டு கண்காட்சியை இந்தியன் சோஷியல் ஃபோரம் தேசிய தலைவர் கர்நாடகாவை சேர்ந்த வசீம் துவக்கி வைத்தார்.முன்னதாக மௌலவி சபீர் பைஜி திருமறை ஓதினார். இந்தியா ஃபிரட்டர்னிட்டி ஃபோரம் பொதுசெயலாளர் சகோதரர் அஃப்ஸர் ஹுசைன் வரவேற்றார்.இந்தியன் …

Read More »

பாலைவன மண்ணில் காய்கறிகள் மற்றும் நெல் விளைவித்து கத்தார் வாழ் இந்தியர்கள் சாதனை

qatar

கத்தார் தலைநகர் தோஹாவிலிருந்து 25கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அல் தோசரி பூங்கா பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் பாலைவன மண் பகுதியை விவசாய நிலமாக மாற்றி பலவிதமான காய்கறிகளோடு அப்பகுதியிலேயே நெல் விளைவித்து சாதனை படைத்துள்ளார்கள் கேரளாவை சேர்ந்த ஒரு குழுவினர். கத்தாரில் வாழ் கேரளாவை சேர்ந்த‌ பெண்கள் உள்ளிட்ட இயற்கை ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து ‘நம்முடே அடுக்களதோட்டம்’ என்ற குழுவை உருவாக்கி பேஸ்புக்கிலும் இதற்கான உறுப்பினர்களை இணைத்தனர்.இக்குழுவில் முக்கிய பங்காற்றும் பினு மாத்திவ்,ஜிஷா கிருஸ்ணா, மீனா பிலிப் உள்ளிட்டோரோடு கத்தாரில் வசிக்கும் 600க்கும் …

Read More »

விரைவில் சவூதி அரேபியாவில் மக்கா – மதீனா இடையே அதிவேக ரயில்

mecca train

துபாய். சவூதி அரேபியாவில் ஹரமைன்” என அழைக்கப்படும் அதிவேக ரயில் திட்டத்தின் கீழ் ஜித்தா வழியாக மக்கா – மதீனா புனித நகர்களுக்கிடையிலான அதிவேக ரயில் சேவையின் பணிகள் ஏறத்தாழ இறுதிக்கட்டத்தை அடைந்து விரைவில் அதிவேக ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்க உள்ளதது. பொருளாதார நகரமான ரபிக், மன்னர் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள பகுதி ஆகிவையும் இத்திட்டத்தில் இணைந்துள்ளது . இத்திட்டத்தின் ரயில் பாதையின்  தூரம் 453 கிலோ மீட்டர்களாகும். மணிக்கு இந்த ரயில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் …

Read More »

வளைகுடாவில் வரவேற்பை பெற்ற இடியாப்பம்! தொழில் நிறுவனமாக உருவாக்கி சாதித்த தமிழர்

idiyappam

இடியாப்ப சிக்கல் என்ற கருத்து உண்டு அந்த சிக்கலில்தான் சுவை உண்டு என்பார்கள் இடியாப்ப பிரியர்கள். தென்னிந்திய உணவு வகையான இடியாப்பம் தமிழகத்தில் பிரபலம். மூலை முடுக்கிலும் சிறு தொழிலாக இருந்த இடியாப்ப தொழில்  தற்போது பெரும்  தொழிலாக வளர்ச்சியடைந்துள்ளது.  இந்நிலையில் தற்போது வளைகுடா பகுதிகளிலும் இடியாப்ப தொழில் நடைபெறுகிறது. முக்கிய வர்த்தக நகரமாக திகழக்கூடிய துபாயில் முதன் முதலில் இடியாப்ப வியாபாரத்தை  அறிமுகப்படுத்தி அதனையே தொழில் நிறுவனமாக  உருவாக்கி நடத்தி வருபவர் தமிழகத்தை சேர்ந்த குத்தாலம் லியாக்கத் அலி. இது பற்றி  குத்தாலம் …

Read More »

தினமும் 4 ஆயிரம் தொழிலாளிகளுக்கு வேன் மூலம் இலவச உணவு திட்டம் தொடக்கம்: துபாய் அரசு ஏற்பாடு

Unskilled-labours

துபாய். துபாயின் பல்வேறு பகுதிகள் கடும் உழைப்பை செலுத்தி பணியாற்றும் வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்களின் பசி, தாகத்தை தீர்க்கும் வகையில் ’மொபைல் ரெப்ரெஸ்மென்ட்’ என்ற திட்டத்தை துபாய் அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின்படி, வரும் கோடைகாலம் தொடங்கிய இம்மாதத்திலிருந்து நவம்பர் மாத இறுதி வரை துபாயின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வரும் வெளிநாட்டு தொழிலாளிகளில் 4 ஆயிரம் பேருக்கு ஆரோக்கியமான‌ உயர்தரமான சிறந்த உணவு, இயற்கை சாறு வகைகள் மற்றும் குளிரூட்டப்பட்ட குடிநீர் போன்றவை தினந்தோறும் இலவசமாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியது இதற்கான பணிகளை …

Read More »

துபாயில் சுற்றுலா பயணிகளை கவரும் பிரம்மாண்ட‌ மீன் தொட்டி மற்றும் கடல்வாழ் உயிரன பூங்கா

Dubai-Mall-5

துபாயில் சுற்றுலா பயணிகளை கவரும் பிரம்மாண்ட‌ மீன் தொட்டி மற்றும் கடல்வாழ் உயிரன பூங்கா துபாய். உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மால்களில் ஒன்றான துபாய் மால் சர்வதேச அளவில் அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் ஷாப்பிங்கிற்கு வந்து செல்லும் இடமாகும் இங்கு வருபவர்களை அதிகம் ஈர்ப்பது இங்கு அமைந்துள்ள மிகபெரிய மீன் தொட்டி மற்றும் நீருக்கடியில் உள்ல கடல்வாழ் உயிரின பூங்காவுமாகும் Aquarium & Underwater Zoo 10 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட இது உலகின் மிகப்பெரிய மீன் தொட்டிகளில் ஒன்றாகும். 51 மீட்டர் நீளமும், …

Read More »