முக்கிய பிரமுகர்கள்

வகுதைக் கரையினிலே….. கட்டுரையாளர். எழுத்தாளர் மஹ்மூத் நெய்னா

sn st

வகுதைக் கரையில்….. கட்டுரையாளர். எழுத்தாளர் மஹ்மூத் நெய்னா நடப்புக் காலம் துன்முகி தமிழ் ஆண்டு…. கோடை கடந்தும் வெயில் ஏன் இப்படி சுட்டெரிக்கிறது? கனல் காலம் தொடங்கிய நாளிலிருந்தே தன் உக்கிரம் கூட்டி நம் உச்சி மண்டையை கொதிக்க வைத்த வெயில் , ரமலான் தலைப்பிறையில் வேதாந்தமாய் திடுமென சாந்தி அடைந்து, அப்புனித மாதம் முழுதும், நம் உள்ளத்தையும், உடலையும் இறைவன் அருளால் குளிர்வித்தது எதேச்சையானதா?… இல்லை சீதோஷன நிலை சடுதியில் மாறிய இந்த விந்தையை குறித்து, , கடந்த வாரம் கிழக்குத்தெரு அப்பா …

Read More »

கீழக்கரையின் நீண்ட கால கவுன்சிலர்

anwar ali5

கீழக்கரையின் நீண்ட கால கவுன்சிலர் கீழக்கரையில் 22வயதில் தொடங்கி 5 முறை வெற்றி பெற்று பணியை தொடரும் 53வயது கவுன்சிலர் ! மக்கள் பிரதிநிதிகளாக நீண்ட காலம் தொடர்ச்சியாக தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மக்கள் மனதில் இடம் பெற வேண்டும் .இந்தியாவில் எம்பி தொடங்கி கவுன்சிலர் வரை குறைந்த எண்ணிக்கையிலேயே அவ்வாறு வெற்றி சாதனை புரிந்தவர்கள் உள்ளார்கள் அதில் ஒருவராக இடம்பெற்றவர் கீழக்கரை கவுன்சிலர் அன்வர் அலி கீழக்கரை நகராட்சி பெரிய அம்பலம் தெரு ,கச்சி மரைக்காயர் தெரு,தெற்கு வேளாளர் தெரு,பணியக்கார தெரு,தச்சர் தெரு …

Read More »

சர்வதேச அளவில் சாதிக்கும் கீழக்கரை பெண்மனி

fazila-azhad2 (1)

சர்வதேச அளவில் சாதனைகள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் ஒரு தமிழ்ப் பெண்மணி. அவர் ஃபஜிலா ஆசாத்!  பல நாடுகளுக்கும் சென்று இளைஞர்களுக்கு  தன்னம்பிக்கை வகுப்புகளை நடத்திக்கொண்டிருக்கிறார் அவர். மிருதுவான கவிஞராக, அழுத்தமான கட்டுரை யாளராக, தேர்ந்த நகை வடிவமைப்பாளராக, வசீகரிக்கும் பேச்சாளராக, அனுபவம்மிக்க மனநல ஆலோசகராக இப்படி பல்வேறு பரிணாமங்களுடன் திகழ்ந்துகொண்டிருக்கும் தன்னம்பிக்கைப் பெண்மணி ஃபஜிலா ஆசாத் பேட்டி . .. உலக அளவில் சாதனை செய்துவரும் உங்களின் வேர் எது? விலாசம் எது? ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரைதான் என் தாய்பூமி. இதுதான் நான் வேரூன்றி …

Read More »

விட்டு கொடுத்தல்… சகிப்புதன்மை .. கீழக்கரை முனைவர் ஃபஜிலா ஆசாத்

fazila-azhad2 (1)

Read More »

துபாயில் தொழிலாளியாக தொடங்கி பெரும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான கீழக்கரையை சேர்ந்த‌ தன்னம்பிக்கை தமிழர்

sahul hameed - Copy

துபாய் .வெளிநாடுகளுக்கு தொழிலாளியாக வேலைக்கு செல்பவர்கள் தாங்கள் பணியாற்றும் காலங்களில் உயர்ந்த பதவிகளுக்கு செல்ல முடியுமா வாழ்வில் உயரமுடியுமா என்று தன்னம்பிக்கை இழப்பவர்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் தரும் வகையில் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றும் நிறுவனத்தில் தொழிலாளியாக சேர்ந்து பணிபுரிந்து தற்போது நிர்வாக இயக்குநராக உயர்ந்து தன்னம்பிக்கை சிகரமாக ஒளிர்கிறார் ராமநாதரபுரம மாவட்டம் கீழக்கரை சின்னக்கடைதெருவை சேர்ந்த  சாஹுல் ஹமீது. பேட்டியின் போது அவர் கூறியதாவது 1978ல் துபாயில் தொழிலாளியாக இடிஏ நிறுவனத்தின் எம்பிஎம் கிளீனிங் பிரிவில் எனது பணியை மிககுறைந்த சம்பளத்தில் தொடங்கினேன்.பின்னர் இன்று பல்வேறு …

Read More »

டாக்டர் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் – ஒரு வரலாற்றுப் பார்வை (அரிய படங்கள்)

BSA evaluating stones in rathinapura

டாக்டர் பி.செய்யது அப்துல் ரஹ்மான் (பி.எஸ்.ஏ) இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முத்து வாணிகம் செய்த  குடும்பத்தில் செய்யது முகம்மது புஹாரி ஆலிம் அவர்களுக்கும் யூசுப் சுலைஹா உம்மா அவர்களுக்கும் மகனாக 1927ஆம் ஆண்டு பிறந்தார். டாக்டர் பி.எஸ்.ஏ அவர்களின் பிறந்த தேதி பள்ளி சான்றிதழ்களிலும் பாஸ்போர்டிலும் 15-10-1927 என்று பதிவாகி இருக்கிறது. பி.எஸ்.ஏ அவர்கள் சமூக சேவையிலும் , கல்வி மற்றும் வியாபாரத் துறையிலும் சிறந்து விளங்கினார். இது தவிர பிற்படுத்தப் பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் மேம்பாட்டிற்காக மிகக் …

Read More »

5000 கார்கள் 8000 ஊழியர்கள் ! யுஏஇல் கார் தொழிலில் முண்ணனியில் தமிழர்

habeebullah - Copy

யுஏஇ என்றழைக்கப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சில் அரேபியன் ஹோல்டிங் நிறுவனத்தின் அரேபியன் டாக்சி பிரிவு இந்நிறுவனத்திற்கு சொந்தமான 5000த்திற்கும் மேற்பட்ட வாடகை கார்கள் இயக்கப்பட்டு அமீரகத்தில் அதிக வாடகை கார்களை கொண்டுள்ள நிறுவனமாக முன்னிலை வகிக்கிறது. இதன் நிறுவனர்களில் ஒருவரும் துணை சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநருமாக திகழ்பவர் பிஎஸ்எம் ஹபீபுல்லாஹ் இவர் வறட்சி மாவட்டமாக கருதப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தின் கீழக்கரையை சேர்ந்தவர்.இந்நிறுவனத்தில் தென் இந்தியாவை சேர்ந்த குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என அவர் தெரிவித்தார் மேலும் அவர் கூறியதாவது, இறைவனின் …

Read More »

ராமநாதபுரம் மாவட்ட காஜி காதர் பக்ஸ் ஹுசைனுக்கு திருச்சி அய்மான் கல்லூரி வாழ்த்து!

Kazhi Kader Buksh _ Full page

Read More »

கீழக்கரைக்கு புகழ் சேர்த்த “வரலாற்றில் வாழும் வள்ளல் பெருமான் சீதக்காதி ” ( காலம்; கி.பி 1650 -1698)

seethakkathi

கீழக்கரைக்கு புகழ் சேர்த்த “வரலாற்றில்  வாழும் வள்ளல் பெருமான் சீதக்காதி ”  ( காலம்; கி.பி 1650 -1698) ஆக்கம் – எம்.எம்.எஸ்.செய்யது இபுறாகிம்  – ஸ்டேசன் மாஸ்டர் (ஓய்வு)- உதவி செயலர்- இஸ்லாமி பைத்துல் மால், கீழக்கரை செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி . வரையாது வழங்கிய பெருவள்ளல். ஈந்து சிவந்த கரங்களுக்கு சொந்தமானவர். கார் தட்டிய காலத்தே மார்தட்டி வழங்கிய மால் சீதக்காதி. சேது நாட்டு செந்தமிழ் வள்ளல் என்று இலக்கிய பெருமக்களாலும், புலவர்களாலும் ஒருங்கே புகழப்பட்டு , ஈந்து அறவாழ்வு வாழ்ந்து , …

Read More »

சோலார் மின்சார உற்பத்தி நிலையம் அமைக்க பரிசீலனை!கீழக்கரை தொழில் அதிபர் ஆபித் ஜீனைத் பேட்டி!

abid

 அமீரகத்தில் செயல்படும் ரேடியன்ட் ஸ்டார் நிறுவனத்தின் அதிபர் ஆபித் ஜீனைதை கீழக்கரையில் அவரது இல்லத்தில் கீழக்கரை டைம்ஸ் சார்பாக சந்தித்து பேசிய போது அவர் கூறியதாவது, ராமநாதபுரம் மாவட்டமான கீழக்கரை உள்ளிட்ட பகுதியில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கு ஆலோசித்து வருகிறோம்.இப்பகுதியில் மின் தட்டுப்பாடு காரணமாக முக்கிய தேவையாக மின்சாரம் திகழ்கிறது.முதல் முயற்சியாக இப்பகுதியில் சோலார் மின்சார உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு அலோசனை நடத்தி வருகிறோம்.இது குறித்து உரியவர்களிடம் பல்வேறு கட்ட ஆலோசனைகள் செய்யப்பட்டு முடிவெடுக்கப்படும். மேலும் 2014ல்  யுஏஇ துபாயில் கட்டிடத்துறைக்கான பணிகள் …

Read More »