கீழக்கரை செய்திகள்

கீழக்கரை கடற்கரை பகுதியை பார்வையிட்ட அமைச்சர் மணிகண்டன்

mini55

கீழக்கரை கடற்கரை பகுதியை பார்வையிட்ட அமைச்சர் மணிகண்டன் கீழக்கரை கடற்கரையில் புதியதாக நடைபாதை மற்றும் சிமெண்ட் இருக்கைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை கீழக்கரை வந்த அமைச்சர் மணிகண்டன் கடற்கரை வருகை தந்து அங்கு நடைபெற்றுள்ள பணிகளை பார்வையிட்டார். அவருடன் கட்சி பிரமுகர்கள் உடன் வந்தனர்

Read More »

மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் தடகள போட்டிகளில் இஸ்லாமியா பள்ளி சாதனை

islamiya1

ஆகிப் ரஹ்மான் மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் சீதக்காதி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை. வட்டு எறிதல் போட்டியில் ஆகிப் ரஹ்மான் முதலிடம், இன்சாப் தடை தாண்டி ஓடுதலில் முதலிடம், உயரம் தாண்டுதலில் இர்பான் இரண்டாம் இடமும் பிடித்தனர். இறகு பந்து ஒற்றையர் பிரிவில் பாத்திமா ஷப்னா முதலிடத்தில் வெற்றி பெற்றார். அதே போன்று வாலிபால் போட்டியிலும் இரு பிரிவிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்

Read More »

கீழக்கரையில் மழை பெய்தும் அதிகளவில் கடலில் கலக்கும் அவலம் ! நகராட்சி மழை நீர் சேகரிப்புக்கான திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்

kaddal

கீழக்கரையில் மழை பெய்தும் அதிகளவில் கடலில் கலக்கும் அவலம் ! நகராட்சி மழை நீர் சேகரிப்புக்கான திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல் சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில், 40% நிலத்தின் மேல் ஓடி கடலில் கலப்பதாகவும், 35% வெயிலில் ஆவியாகுவதாகவும், 14% பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10% மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் கீழக்கரையில் சராசரிக்கு அதிகமான அளவில் கடலில் கலந்து வீணாகிறது முன்பெல்லாம் வீட்டின் நடுப் பகுதியில் மழைநீர் தேங்கும்படி முற்றம் அமைத்ததிருப்பார்கள் நாட்டு ஓடுகளுக்கு நீரை உறிஞ்சாத தன்மை உள்ளதால் ஓடுகளில் விழும் …

Read More »

கீழக்கரை டூ சினிமா கனவுலகம் .. கட்டுரை (படங்கள்) . எழுத்தாளர். மஹ்மூத் நெய்னா

rajkiran

கட்டுரையாளர் . எழுத்தாளர் மஹ்மூத் நெய்னா கிங் ஆக இருப்பதை விட கிங் மேக்கராக இருப்பதைதான் கீழக்கரை வாசிகள் பெரிதும் விரும்புவதை கடந்த கால வரலாறுகள் மூலம் அறிய முடியும், திரை உலகிற்கும் கீழக்கரைக்குமான தொடர்புகள் நெடும் வரலாற்றுப்பிண்ணனியை கொண்டது, 1970 களில் ஆவனா. மூனா. யாஸீன் காக்கா தமிழக திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கியதை திரைத்துறையினர் இன்றும் நினை கூறுவது உண்டு, புரட்சித்தைலைவர் எம்.ஜி.ஆருக்கும் யாஸீன் காக்காவுக்கும் நெருக்கமான உறவு இருந்தது, எம்.ஜி.ஆர் சிவாஜி, பாலாஜி ஆகியோரின் திரைப்படங்களுக்கு நிதி உதவி …

Read More »

கீழக்கரையில் வாகன ஓட்டுநர் தற்கொலை

sucide

கீழக்கரையில் வாகன ஓட்டுநர் தற்கொலை   கீழக்கரை வெள்ளாளர் தெருவை சேர்ந்த தினகரன் 52 இவர் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார் இவரது மனைவி நளினி  44. இவர்களுக்கு 15 வயதுக்கு மேற்பட்ட  ஆண் பெண் என இரண்டு பிள்ளைகள் உள்ளன் இந்நிலையில் நேற்று தினகரன் வீட்டுக்குள் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  சம்பவதன்று இரவு கணவன் மனைவி இடையே தகாராறு ஏற்பட்டுள்ளது.  கணவர் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூற்ப்படுகிறது தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து கீழக்கரை சப் இன்ஸ்பெக்டர் வசந்த் …

Read More »

கடற்கரை தினத்தையோட்டி கீழக்கரையில் 17-08-17 அன்று கடற்கரையை சுத்தம் செய்யும் பணி

klk kadar

  கீழக்கரை நகராட்சியும் செய்யது ஹமீதா கல்லூரியும் இணைந்து வருகின்ற 16 ம் தேதி உலக கடற்கரை தினத்தையொட்டி,  கீழக்கரை கடற்கரை பகுதியை சுத்தம் செய்ய வேண்டி, வருகின்ற 17.08.2017 அன்று காலை 10.00 மணி அளவில் நகராட்சி முன் இருந்து நகராட்சி பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கடற்கரையை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளவிருக்கின்றனர். நகராட்சி ஆணையாளர் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் இருந்து மாணவர்கள் கடற்கரை வரை ஊர்வலமாய் சென்று சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்வர். இது …

Read More »

ததஜ சார்பில் 12-08-17 அன்று நடைபெற இருந்த மழை தொழுகை ரத்து

pra

கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில்  12-08-17 அன்று நடைபெற இருந்த மழை தொழுகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

கீழக்கரை பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரிய,ஆசிரியைகளுக்கு விருது

sathak uma

கீழக்கரை ரோட்டரி மற்றும் ரோட்டராக்ட் இணைந்து  சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் ரோட்டராக்ட் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு மற்றும் இந்த ஆண்டு சிறந்த ஆசிரியர்களுக்கு துரோணாச்சாரியார் விருது வழங்கு விழா நடைபெற்றது கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை வகித்தார் சிறப்பு விருந்தினராக‌ ராமநாதபுரம் ரோட்டரி சங்க தலைவர் வீரபூபதி பங்கேற்று .புதிய ரோட்டரி சங்க உறுப்பினர்களுக்கு பதவி பிராமணம் செய்து வைத்தார். கல்லூரி மாணவர் முஹம்மது முஸ்தபா ரோட்டராக்ட் சங்க தலைவராகவும் சேகு சகாப்தீன் சைபுல்லா சங்க …

Read More »

கீழக்கரையில் இன்று 10-08-17 மழை பொழிந்தது

rain 99999

கீழக்கரையில் இன்று 10-08-17 மழை பொழிந்தது  சில காலமாக கீழக்கரையில்  மழை  பெய்யாமல் இருந்ததால் இப்பகுதியில் நீர் நிலைகள் வற்றி கடும் வறட்சி நிலவியது.  இப்பகுதியில் அனைத்து தரப்பு மக்களும் மழை வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று மழை பொழிய தொடங்கியது இதனையோட்டி பொதுமக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Read More »

கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியில் தீவிபத்து !

fire322

கீழக்கரையை அடுத்த காஞ்சிரங்குடியில் யாதவர் தெருவில் கூரை வீடுகள் தீபற்றியதால் அங்கு இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆனது. உடனடியாக தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு பொதுமக்களுக்கு எவ்வித‌ பாதிப்பு இல்லாமல் தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டு விட்டது தீ விபத்து குறித்து கீழக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்

Read More »