கீழக்கரை செய்திகள்

கீழக்கரையில் பிடிபட்ட இருதலைமணியன் பாம்பு!வனத்துறையிடம் ஒப்படைப்பு!

mannuli

old (file picture) கீழக்கரை தொலைபேசி நிலைய வாசல் பகுதியில் இருந்து துணை போலீஸ் சூப்பி ரண்டு அலுவலக பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு சுமார் 3 அடி நீளமுள்ள இருதலை மணியன் பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதனை கண்டவர்கள்  ஏர்வாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

Read More »

உலக இஸ்லாமியர்களில் செல்வாக்குமிக்க 500பேரில் ஒருவராக கீழக்கரை பி.எஸ்.அப்துர் ரஹ்மான் தேர்வு

BSA-

உலகில் செல்வாக்குள்ள 500 முஸ்லிம்கள் என்ற தரப்படுத்தலில் கல்வி,மதம், அரசியல், நிர்வாகம், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளை அடிப்படையாக கொண்டு இத்தரப்படுத்தல் இடம்பெற்றுள்ளது.ஜோர்தான் நாட்டின் Royal Islamic Strategic Studies Center இந்தப் பதிப்பை வெளியிட்டுள்ளது. இதில் துறைவாரியாக  தேர்வு உலகில்  முக்கிய தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொழித்துறை பிரிவில் உலகில்  செல்வாக்குள்ள இஸ்லாமியர்கள் என்று 24 நபர்கள்(2013/2014) தேர்வு செய்யப்பட்டு அதில் இந்தியாவிலிருந்து ஒருவராக தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த பி.எஸ்.அப்துர் ரஹமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  http://themuslim500.com/ http://themuslim500.com/profile/abdur-rahman-b-s என்ற …

Read More »

தொடரும் சாலை விபத்துகள்! வேதனை தவிர்க்க தேவை வேக மதிப்பீடு கருவி!

vannandurai-road223

ராமநாதபுரம் மாவட்டம் ஒரு பக்கம் வறட்சி  மாவட்டமாக இருந்தாலும் மறு பககம்  ஆன்மீக தலங்களும் சுற்றுலா தலங்களும் ஏராளமாக உள்ளன. இவற்றுக்கு தினமும் நூற்றுக்கணக்கான  சுற்றுலாபயணிகள் வெளியூர்களிலுருந்தும், வெளி மாநிலங்களிலுருந்தும் பஸ்,வேன்,கார் போன்ற வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

Read More »

கீழக்கரையில் பட்டமரம் அகற்ற நடவடிக்கை!

patamaram_kilakarai

தினகரன் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி கீழக்கரை முஸ்லிம்பஜார் பகுதியில் நீண்ட காலமாக பட்ட மரம்  முறிந்து விழும் நிலையில் இருந்தது.சில மாதங்கள் முன் இதன் கிளை விழுந்து தொழிலாளி ஒருவர் காயமடைந்தார்.

Read More »

தனி தாலுகா உள்ளிட்ட கிடப்பில் உள்ள கீழக்கரை நகருக்கான திட்டங்களை செயல்படுத்த கோரிக்கை!

kilakarai

கீழக்கரை நகருக்கு அரசால் அறிவிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கிடப்பில் உள்ளது, இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்து மூன்றாம் ஆண்டை நெருங்கும் சூழ்நிலையில்தி, மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட, கீழக்கரை தனித்தாலுகா திட்டம், தொடர்ந்து கிடப்பில் உள்ளதால் மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். கீழக்கரை நகராட்சியில் 50 ஆயிரத்திற்கும், அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். தாலுகா அலுவலகம் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு, 17 கி.மீ.,தூரத்தில் உள்ள ராமநாதபுரம் சென்று வருகின்றனர். பணம், நேர விரையத்துடன், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். …

Read More »

பள்ளி அருகில் ஆபத்தான நிலையில் பயணிகள் நிழற்குடை!

nilalkudai_kilakarai

கீழக்கரை அருகே வேன் மோதியதில் பழுதடைந்துள்ள பயணிகள் நிழற்குடையை புதுப்பிக்க வேண்டுமாறு பொது மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முள்ளுவாடி ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இசிஆர் சாலையில் உள்ளது. அங்கு பயணிகள் நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீது 6 மாதங்களுக்கு முன்பு வேன் மற்றும்ஆட்டோ மோதியதில் நிழற்குடையின் சுவர் இடிந்து விழுந்துவிட்டது. மீதமுள்ள இரண்டு சுவர்கள் மட்டும் நிழற்குடை தாங்கி நிற்கிறது. இதுவும் எப்போது விழும் என்று கூற முடியாத நிலையில் உள்ளது. இந்த நிழற்குடையின் …

Read More »

கீழக்கரையில் புதிய கடை திறப்பு நிகழ்ச்சி!

அஜ்மல்

கீழக்கரை வடக்குதெரு பகுதியில் முன்னாள் சேர்மன் பசீர் அலுவலகம் அருகில் அஜ்மல் ரபான் என்ற பெயரில் புதிய ஹார்ட்வேர் கடை திறக்கப்பட்டது.இக்கடை திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். கடையின் உரிமையாளர் ஜாஹிர் ஹிசைன் கூறுகையில் கட்டுமான பணிக்கு தேவையான ஹார்டுவேர் பொருள்கள்,அரசு சான்றிதழ் பெற்று இரும்ப் முறுக்கு கம்பிகள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Read More »

கீழக்கரையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் பிணம்!

DSC_0291

கீழக்கரை மறவர் தெருவை சேர்ந்த தியாகராஜன் மகன் ராஜா ஜெகதீஷன்(30) இவர் கீழக்கரை சுடுகாட்டில் மரத்தில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார் என கூறப்படுகிறது. இது குறித்து அவரது அண்ணன் ஞான முருகன்(36) காவல்துறையில் புகார் மனு அளித்துள்ளார் இறந்து போன தியாகராஜன் மகன் ராஜா ஜெகதீஷன் பரமக்குடி பொன்னையாபுரத்தை சேர்ந்த ரேவதி என்பவரை திருமணம் செய்து அதே ஊரில் தொழில் செய்து வந்தார்.இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன் கீழக்கரைக்கு வந்தவர் மீண்டும் திரும்பி செல்லவில்லை .இந்நிலையில் அவரது மாமியார் நேற்று மருமகனிடம் சமாதனம் …

Read More »

கீழக்கரையில் எரியாத தெரு மின்விளக்குகளை சீர் செய்ய கோரிக்கை!

e_b_bool_kilakarai

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட சொக்கநாதர் கோயில் பகுதியில் 15க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் மாதக்கணக்கில் எரியாமல் உள்ளன. இதனால் இப்பகுதி இருளில் மூழ்கி விடுவதால், பெண்கள் வெளியில் நடமாட முடியாத நிலை இருப்பதாக சீர்செய்து தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சொக்கநாதர் கோயில் பின்புறம் உள்ள மையானத்தில் இருந்து வெள்ளை மாளிகை செல்லும் வழி, புது தெருவிற்கு செல்லும் வழி ஆகியவற்றில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சுமார் 15 தெரு விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் இப்பகுதி இரவு நேரங்களில் இருளில் மூழ்கிவிடுகிறது. …

Read More »

பள்ளிகள் பங்கேற்ற மாவட்ட அளவிலான போட்டி !கீழக்கரை இஸ்லாமியா பள்ளி 3 இடத்தை கைப்பற்றியது!

islamiya1

ராமநாதபுரத்தில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான வினாடி வினா போட்டி நடைபெற்றது. இப்போட்டிகளில் மாவட்டத்திலிருந்து ஏராளமான பள்ளிகளின் மாணவ மாணவியர் பங்கேற்றனர். இப்போட்டிகளின் இறுதியில் முதல் இடத்தை ராமநாதபுரம் இன்பேன்ட் ஜீஸஸ் பள்ளியும்,இரண்டாம் இடத்தை நேஷனல் அகாடமி பள்ளியும் மூன்றாம் இடத்தை கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியும் கைப்பற்றியது. இஸ்லாமியா பள்ளிகள் சார்பில்  மாணவிகள் ஹஸ்மத் தவ்ஹா(9ம் வகுப்பு),ஹைருன் ஹபீலா(9ம் வகுப்பு),சுமையா அல் சஹீதா(8ம்வகுப்பு) ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்றனர். இஸ்லாமியா பள்ளிகளில் இருந்து முதல் முறையாக மாவட்ட அளவில் பங்கேற்றது குறிப்பிடதக்கது.

Read More »