கீழக்கரை செய்திகள்

கீழக்கரை பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம்

msec1

கீழக்கரை முகமதுசதக் பொறியி யல் கல்லூரியில் கணினி பொறியியல்துறை மற்றும் இந்திய தொழில் நுட்ப மா ணவர் கூட்டமைப்பு இணைந்து நடத்திய ஒருநாள் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கம் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் முக மது ஜகாபர் தலைமை வகி த்தார். இயக்குநர் ஹபீப் முகமது சதக்கத்துல்லா, முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவு தீன் ஜெராக் டெக்னாலஜி முதன்மை செயல் அலுவலர் தரணிவாசன் முன்னிலை வகித்தனர். துறைத்தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். இதில் சென்னை ஜெராக் டெக்னாலஜி முதன்மை செயல் அலுவலர் …

Read More »

கீழக்கரை – ராமநாதபுரம் சாலையில் ஆவணமின்றி எடுத்து சென்ற ஆயிரக்கணக்கான ரூபாய் பறிமுதல்!

sothanai_3

போலீஸ் தரப்பு செய்தியில்,ராமநாதபுரம் – கீழக்கரை செல்லும் வழியில் திருப்புல்லாணி விளக்கு ரோட்டில் பறக்கும்படையை சேர்ந்த அதிகாரி விஜயகுமார் மற்றும் எஸ்.ஐ சுப்பையா தலைமையில் வாகன சோதனை செய்தனர் அப்போது டூவீலரில் அவ்வழியே வந்த வடக்குத்தெரு ப்ரோஸ்கான் வாகனத்தை சோதனை செய்து உரிய ஆவணம் இல்லாமல் வைத்திருந்த இந்திய ரூபாய் ரூ 93 ஆயிரம் ரூபாய் மற்றும் சிங்கப்பூர் டாலர் 14 மற்றும் 200 மதிப்புள்ள யூரோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதே போல் நேற்று முன் தினம் காலை   ராமநாதபுரத்தில் …

Read More »

கீழக்கரையில் விளையாட்டு பாட திட்டம் பற்றி நேரடி செயல் விளக்கம்!

kannadivappa

கீழக்கரையில் கண்ணாடிவாப்பா இண்டெர்நேஷனல் பள்ளி சார்பில் விளையாட்டு குறித்து சிறப்பு பாடம் பற்றிய நேரடி செயல் விளக்கம் நேற்று மாலை கண்ணாடி வாப்பா மஹாலில்(லைட் ஹவுஸ் அருகில்) அன்று நடைபெற்றது. ஏராளமான பெற்றோர்களும் சின்னஞ்சிறு மாணவ மாணவிகளும் இதில் பங்கேற்றனர்      

Read More »

கீழக்கரை கல்லூரி 14வது ஆண்டு விழா !

msac

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 14வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அபுல் ஹசன் சாதலி தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற் றார். நேஷனல் பொறியியல் கல்லூரி மக்கள் தொடர்பு இயக்குநர் அப்துல் ரஹ் மான் முன்னிலை வகித்தார். அவர் பேசுகையில், `பெண்கள் அனைவரும் கசடற கற்க வேண்டும். ஒரு பெண் கல்வி கற்று மேம்பட்டால், அவரது சந்ததி மட்டுமல்லாமல், ஒரு சமூகமே கல்வி அறிவை பெற முடியும்’ என்றார். …

Read More »

கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ செயல்வீரர்கள் கூட்டம்!

sdpi4

  கீழக்கரை நகர் எஸ்.டி.பி.ஐ கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நகர் தலைவர் இஸ்ஸாக் தலைமையில் நடைபெற்றது இதில் நகர், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதில் பாப்புலர் ஃப்ரண்ட்ஆஃப் இந்திய மற்றும் S.D.T.U. நகர் நிர்வாகிகள்  உள்ளிட்டோரும் பங்கேற்றனர். கூட்டத்தில் அனைத்து சமுதாய மக்களிடம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டும் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் நூர் ஜியாவுதீன வெற்றி பாடுபாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. படம் மற்றும் செய்தி : முஜீப்  

Read More »

புதுபிக்கப்பட்ட கீழக்கரை ஓடக்கரை பள்ளியை அமைச்சர் பார்வையிட்டார்.

anwarrajavisit4

ராமநாதபுரம் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் அன்வர் ராஜா கீழக்ககரையில் வாக்கு சேகரிக்க சென்றபொழுது புதுபிக்கப்பட்ட 200 வருடங்ககளுக்கு மேல் பழமையான கீழக்கரை ஓடக்கரை பள்ளியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தர்ராஜுடன் சென்று பார்வையிட்டார். ஒடக்கரைப்பள்ளி ஜமாத்தை சேர்ந்த க.கு.அப்துல் ஜப்பார் மற்றும் மேலத்தெரு அரபி சபியுத்தீன் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. அது சமயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கீழக்கரை ஹாமிது இபுறாகீம், நகராட்சி துணைத்தலைவர் ஹாஜா முகைதீன் ஒடக்கரைப்பள்ளி ஜமாத்தை சேர்ந்த சுல்தான் , சீனி , அஹமது …

Read More »

கீழக்கரையில் ஜமாத் பிரமுகர்களுடன் வேட்பாளர் அன்வர் ராஜா சந்திப்பு!

anwar2

கீழக்கரையில் அதிமுக வேட்பாளர்  நடைபயணமாக பல்வேறு இடங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார்.கீழக்கரையின் ஜமாத் பிரமுகர்களையும் சந்தித்து ஆதரவு கோரினார். கீழக்கரையில் தேர்தல் பிரசாரத்தில் ராமநாதபுரம் லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அன்வர் ராஜா பேசியதாவது: சுதந்திர போராட்டத்தை போல தேர்தலை சந்திக்கிறோம். நம்பிக்கைக்குரிய அரசியல் தலைவரை முடிவு செய்ய வேண்டும். தமிழர்களுக்கு பாதகமான முடிவுகளை எடுக்கக்கூடிய எல்லா காலங்களிலும் கருணாநிதி தான் முதல்வராக இருந்துள்ளார். 2011ம் ஆண்டில் கீழக்கரைக்கு தனித்தலூகா திட்டம் அறிவித்தனர். அறிவிப்புடன் திட்டம் முடிந்து விட்டது. இதே போல் ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி …

Read More »

கீழக்கரையில் நாளை(14/03) விளையாட்டு பற்றி தனியார் பள்ளி சார்பில் செயல் விளக்கம்! பெற்றோர்கள் பங்கேற்க அழைப்பு!

kannadi vaappa school

கீழக்கரையில் கண்ணாடிவாப்பா இண்டெர்நேஷனல் பள்ளி சார்பில் விளையாட்டு குறித்து சிறப்பு பாடம் பற்றிய நேரடி செயல் விளக்கம் நாளை (வெள்ளி 14/3)  மாலை 4 மணியளவில் கண்ணாடி வாப்பா மஹாலில்(லைட் ஹவுஸ் அருகில்) அன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் பெற்றோர்கள்  809810 8922 என்ற மொபைல் எண்ணில் அழைத்து பதிவி செய்து கொள்ளலாம்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்க கட்டணமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

துபாய் – மதுரை – துபாய் ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்படும் நேரத்தில் மாற்றம்!

spice

2014 மார்ச் 30ம்தேதி ஞாயிற்றுக் கிழமை முதல் ஸ்பைஸ் ஜெட்  விமானம் SG24 , மதியம் 12:30 மணிக்கு துபாயிலிருந்து புறப்பட்டு மாலை 18:25 மணிக்கு மதுரை சென்றடையும்.  இரவு 19:20 மணிக்கு SG23 விமானம்  மதுரையிலிருந்து  புறப்பட்டு இரவு 22:05மணிக்கு துபாய் வந்து சேரும். இந்த தகவலை ஸ்பைஸ் ஜெட்டின் இணையதளம் வெளியிட்டுள்ளது. தற்மொழுது இரவு 11:35க்கு மதுரையிலிருந்தும் அதிகாலை 3:50க்கு துபாயிலிருந்தும் இந்த விமானம் புறப்படுகிறது.  

Read More »

கீழக்கரையில் அதிமுக வேட்பாளர் அன்வர் ராஜா !

admk vetpaalar

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அன்வர் ராஜா ஏராளமான அதிமுகவினருடன் கீழக்கரையில் பொதுமக்களிடம் நடைபயணமாக சென்று ஓட்டு கேட்டார். கீழக்கரை நகர் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் சென்றனர்

Read More »