கீழக்கரை செய்திகள்

கீழக்கரை அருகே தீவு பகுதியில் ஒதுங்கிய ஆண் பிணம்! போலீசார் விசாரணை!

theevu

கீழக்கரை வனசரகர் ஜெயராமன் தலைமையில் வனத்துறையினர் கடலில் ரோந்து சென்ற போது முல்லை தீவு கரையோரத்தில் ஆண் பிணம் கிடப்பதை கண்டனர்.உடனடியாக தேவிபட்டிணம் மரைன் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து மரைன் எஸ்.ஐ ராஜேந்திரன் தலைமையில் போலீசார் தீவுக்கு சென்று சிதைந்த நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத நிலையில் அழுகி இருந்து ஆண் பிணத்தை கைப்பற்றி  போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read More »

மஹ்தூமியா பள்ளி கூடுதல் வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டு விழா!ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ பங்கேற்பு

mla adikkal

  கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த மஹ்தூமியா உயர் நிலை பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு ஜவாஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ  சட்டமன்ற உறுப்பினர்  நிதியிலிருந்து ரூ15 லட்சம் ஒதுக்கி முறையாக டெண்டர் விடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த நிலையில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஜமாத் தலைவர் டாக்டர் ஹாஜா முஹைதீன் தலைமை வகித்தார்.துணை தலைவர் கிதுர் முஹம்மது பொருளாளர் ஹக்கீம் மற்றும் தமுமுக நகர் தலைவர் முஹம்மது சிராஜீதீன் ஒன்றிய செயலாளர் சித்திக் வரவேற்றார். இதில் ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ …

Read More »

திருப்புல்லாணி ஒன்றியத்தில் விலையில்லா மிக்சி கிரைண்டர் வழங்கும் விழா !

mine

திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துப்பேட்டை ஊராட்சியில் தமிழக அர சின் இலவச மிக்சி, கிரைன் டர், பேன் வழங்கும் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் மார்செலின் தலைமை வகி த்தார். துணைத்தலைவர் கண்ணன், அதிமுக ஒன்றிய செயலாளர் முனியாண்டி, ஒன்றியத் தலைவர் ராஜேஸ்வரி, மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் கருப்பையா, ஜெயலலிதா பேரவை செயலாளர் பாலசிங்கம் முன்னி லை வகித்தனர். மாவட்ட ஆய்வு குழு அலுவலர் கும ரேஸ்வரன் வரவேற்றார். 714 பயனாளிகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், பேன்களை கைத்தறி துறை அமைச்சர் …

Read More »

கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்!

cousana

முத்துபேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் உயிர் வேதியியல் துறை சார்பில் இன்றைய கால இயற்கை மருத்துவம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடந்தது.

Read More »

கீழக்கரை நகரில் மதுபான கடைகளை அகற்ற கோரி எஸ்டிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்!

sdpi44

கீழக்கரை நகருக்குள் மூன்று மதுபான கடைகள் உள்ளது. இவை பேருந்து நிலையம் ,மருத்துவமனை பள்ளி உள்ள பகுதிக்கு அருகிலேயே அமைந்துள்ளது.இக்கடைகளால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு இருந்து வருகிறது.இது குறித்து பல்வேறு தரப்பினரும் இக்கடைகளை இடம் மாற்ற கோரி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ சார்பில் பேருந்து நிலையம் அருகில் இப்பகுதியில் உள்ள மதுபான கடைகளை ஊருக்கு வெளியே மாற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மதுபான கடைகளுக்கு எதிராக குரல் எழுப்பி ஏராளமானோர் பங்கேற்றனர். படங்கள்: முஜீப்

Read More »

கீழக்கரை முக்கிய சாலையில் குப்பை தொட்டியில் தீ !உடனே அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு!

mujibe

கீழக்கரையில் பல்வேறு இடங்களில் நகராட்சி சார்பில் குப்பைதொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.நேற்று இரவு நகரின் முக்கிய சாலை வள்ளல் சீதக்காதி சாலையில் வைக்கப்பட்டியிருந்த குப்பை தொட்டியில் உள்ள குப்பை தீபிடித்து எரிந்தது. உடனே அருகில் உள்ளவர்கள் தீயை அணைத்ததால் தீ அணைந்து பெரும் புகை மூட்டமாக காட்சியளித்தது.அருகே உள்ள மின் கம்பியில் தீ பரவி இருந்தால் பெரும் விபத்து நேர்ந்திருக்கும் என அருகில் உள்ளவர்கள் தெரிவித்தனர். யாரோ சமூக விரோதிகள் தீயை வைத்திருக்க வேண்டும் அல்லது புகை பிடிப்பவர்கள் புகைத்து விட்டு குப்பையிலி பீடி,சிக்ரெட் துண்டை வீசியதால் …

Read More »

கீழக்கரையில் சுகாதாரம் குறித்த கணக்கெடுப்புக்கு பயிற்சி!வீட்டுக்கு வீடு கணக்கெடுக்க வருபவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டுகோள்!

nagarathi22

கீழக்கரையில் சுகாதாரம் குறித்த கணக்கெடுப்புக்கு பயிற்சி!வீட்டுக்கு வீடு கணக்கெடுக்க வருபவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டுகோள்! கீழக்கரை நகராட்சியில் சுமார் 15 ஆயிரம் வீடுகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் மனித கழிவுகளை அகற்றுவோர் மற்றும் சுகாதாரமற்ற கழிப்பிடங்களை பயன்படுத்துவோர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணிக்கு தொண்டு நிறுவனங்களை சேர்ந்த் 50 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி பொதுமக்களிடம் எவ்வாறு அணுகுவது புள்ளி விபரங்களை எவ்வாறு கேட்டு அறிவது என்பது குறித்து பயிற்சி அளித்தார். இது …

Read More »

கீழக்கரை டைம்ஸ் இணையதள அப்ளிகேஷன் ஆப்பிள் ஐபோன் (iOS), ஆண்ட்ராய்டு போன்களில் அறிமுகம்!

Sites

இறைவனின் உதவியால் உங்கள் அனைவரின் அன்பான ஆதரவுடன் கீழக்கரைடைம்ஸ் Keelakaraitimes.com இணையதளம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.தற்போது அனைவரும் பயன் பெரும் வகையில் காலத்துக்கேற்ப தொழில்நுட்பங்களை உள்வாங்கி செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில் Keelakarai Times அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

Read More »

கீழக்கரை பகுதியில் தொடரும் திருட்டு சம்பவங்கள்!நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

noor mohamed

    கீழக்கரை பகுதியில் பல்வேறு இடங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சில நாட்களுக்கு முன் வடக்கு தெருவில் நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்றனர்.அதே போன்று சென்ற மாதம் சொர்க்கநாதர் கோவில் தெரு பகுதியில் பூட்டியிருந்த ஆசிரியர் நூர் முஹமம்மது  வீட்டை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளனர்.காலி வீடாக இருந்ததால் கொள்ளை நடைபெறவில்லை.அதே போன்று டிசம்பர் மாதம்  அதே பகுதியை சேர்ந்த சம்சுதீன் என்பவரின் வீட்டின்  பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ஒரு பவுன் …

Read More »

கீழக்கரை அருகே மல்லல்&ராமநாதபுரம் இடையே புதிய பஸ் போக்குவரத்து!

minister

கீழக்கரையை அடுத்துள்ள மல்லலில் இருந்து உத்தரகோசமங்கை வழியாக ராமநாதபுரத்திற்கு புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்தை அமைச்சர் சுந்தரராஜ் துவக்கி வைத்தார்.

Read More »