கீழக்கரை செய்திகள்

கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா மாணவ,மாணவியர்கள் உள்ளூர் சுற்றுலா

manavi5

கீழக்கரை கிழக்குத் தெரு ஹைரத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளியில் 2ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியரை களப் பணியாக, ஆசிரியர்கள் வெளியில் அழைத்து சென்றனர். கடற்கரை, மற்றும் கலங்கரை விளக்கம் போன்ற இடங்களை பார்வையிட்டனர். மாணவ மாணவியரும் உற்சாகத்துடன் சென்றது சந்தோசமாக இருந்தது.

Read More »

ஏர்வாடி தர்ஹாவில் கொடி இறக்க நிகழ்ச்சி

kodi ia855

ஏர்வாடி தர்ஹாவில் கொடி இறக்க நிகழ்ச்சி கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடியில் அடங்கப்பட்டிருக்கு மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் 843ஆம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா ஜூலை24ல் தொடங்கியதை தொடர்ந்து கொடி ஏற்றம் மற்றும் சந்தன கூடு திருவிழா நடைபெற்றது தொடர்ந்து . தர்ஹா ஆணையாளர் தேவதாஸ் தலைமையில் ஆணைய உதவியாளர் தமிழரசு, முன்னாள் தர்ஹா ஹக்தார் நிர்வாகசபை தலைவர் அம்ஜத் ஹூசைன், முன்னாள் செயலாளர் செய்யது பாருக் ஆலிம் அருஸி, முன்னாள் துணைத்தலைவர் …

Read More »

வகுதை கரையினிலே.. பாகம்.7 .. எழுத்தாளர் மஹ்மூத் நெய்னா

sm hameed

மாயாகுளம் என்றால் புத்தர் அல்லது மாணிக்கவாசகர், தென்னந்தோப்புகள், பாட்டப்பனம், பதனீர், ஏர்வாடி, பள்ளுவா ஊரனி என எத்தனையோ நம் என்னத்தில் ஓடலாம் , இந்த ஊரை இன்புட்டாக காதில் கேட்ட மாத்திரத்தில், அவுட் புட்டாக என் மனதில் விரிவது, நீல இந்தோனோஷிய தொப்பியும், வெண்ணிற ஆடையும், தோளில் துண்டும் என கம்பீரமாக வரும், சமூக செம்மலும், புரவலருமான டாக்டர் செ.மு. ஹமீது அப்துல் காதர். டாக்டர் செ.மு. ஹமீது அப்துல் காதர் இன்றைய மாயாகுளத்தை நாடறிந்த கல்வி கேந்திரமாக உருவாக்கிய செ.மு. ஹமீது அப்துல் …

Read More »

கீழக்கரையில் ததஜ சார்பில் ‘புளு வேல் எனும் ஆன்லைன் விளையாட்டின் ஆபத்து குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்…

tntj543

கீழக்கரையில் தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்குக் கிளையின் சார்பில் ‘புளு வேல் எனும் ஆன்லைன் விளையாட்டின் ஆபத்து குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நீல திமிங்கலம் எனு புளூ வேல் விளையாட்டை ஆன்லைனில் விளையாடி பல குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் போக்கைத் தொடர்ந்து ஆபத்து நிறைந்த கேமினை நீக்க உலகம் முழுவதும் குரல் எழுந்துள்ளது இந்நிலையில் கீழக்கரை நகரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நீல திமிங்கிலம் கேம் (plue whale game)யினால் அழிவின் பக்கம் செல்லும் இளைய சமுதாயம் என்ற தலைப்பில் பிரச்சாரம் செய்தார்கள்.இந்த …

Read More »

கீழக்கரை கல்லூரியில் மகளிர்க்கு தீ தடுப்பு மற்றும் மீட்பு செயல் முறை பயிற்சி

????????????????????????????????????

கீழக்கரையில் தீ தடுப்பு மற்றும் மீட்பு செயல் முறை பயிற்சி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பாக 22.08.2017 அன்று கீழ்க்கரை தாசிம் பீவீ அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் காலை 10.00 மணிக்கு யூத் ரெட் கிராஸ், என்.எஸ்.எஸ். மற்றும் ரெட் ரிப்பன் கிளப் மாணவியர்களுக்கு தீ தடுப்பு மற்றும் மீட்பு குறித்த கருத்தரங்கம் மற்றும் செயல்முறைப் விளக்க பயிற்சியினைராமநாதபுரம் தீ அணைப்பு மற்றும் மீட்பு சேவை துறையினர்வழங்கினர். கல்லூரியின் முதல்வர் முனைவர் சுமையா தலைமையில் வணிகவியல் துறை தலைவர் …

Read More »

கீழக்கரை பகுதியில் இருசக்கர வாகனம் எரிப்பு.! போலீசார் விசாரணை

bike566

கீழக்கரை அளவாக்கார பகுதியில் இன்று இரவு நேரத்தில் வெங்கடேசன் என்பவர் தனது வீட்டு வாசலில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து இருந்தார். இரவு நடுநிசி நேரத்தில் அவருடைய இரு சக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் எரித்து உள்ளனர். இது சம்பந்தமாக வெங்கடேஷ் என்பவர் கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்து இருக்கின்றார்.காவல் துறையினர் புகாரை பெற்றுக்கொண்டு விசாரித்து வருகின்றார்கள்.

Read More »

வபாத் அறிவிப்பு( காலமானார்)

????????????????????????????????????

வபாத் அறிவிப்பு( காலமானார்) கீழக்கரை மேலத்தெருவை சேர்ந்த சேர்ந்த ஜனாப். SMB சித்திக் அவர்கள் மகனும் சதக் அறக்கட்டளை தலைவர் S.M. யூசுப் ஷாஹிப் அவர்கள் மருமகனுமாகியா ஜனாப் புகாரி அவர்கள் வபாத் ஆனார் (காலமானார்) . www.keelakaraitimes.com

Read More »

கீழக்கரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் வாகன விளம்பரம் செய்ய காவல் நிலையத்தில் அனுமதி பெறுவது அவசியம்

si-vas

கீழக்கரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் வாகன விளம்பரம் செய்ய காவல் நிலையத்தில் அனுமதி பெறுவது அவசியம் கீழக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வஸந்த் குமார் கூறியதாவது கீழக்கரை மற்றும் கீழக்கரை காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளை ஆட்டோ,மற்றும் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்யும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஒரு வாரத்திற்கு முன் காவல் நிலையத்தில் அனுமதி கடிதம் கொடுக்க வேண்டும்.ஓட்டுநரின் டிரைவிங் லைசன்ஸ் நகல்,ஆர்.சி.புத்தகம் நகல் மற்றும் இன்சூரன்ஸ் நகல் அனுமதி கடிதத்துடன் வழங்க வேண்டும்.இந்த ஆவணங்கள் இல்லை …

Read More »

கீழக்கரையில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்பாட்டம்.

aarpa9566

கீழக்கரையில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்பாட்டம். கீழக்கரையில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள், ஆசிரியர்கள், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து தாலுகா அலுவலக வாசலில் ஆர்பாட்டம் நடத்தினர். சி.பி.எஸ்.ஐ ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்திட வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைந்து 8வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்திட வேண்டும். அதுவரை 1.1.2016 முதல் 20 சதவிகிதம் இடைகால நிவாரணம் வழங்கிட வேண்டும். சிறப்பு காலமுறை, தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட …

Read More »

பள்ளி மாணவர்களின் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி!

uch66655

பள்ளி மாணவர்களின் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி! உச்சிப்புள்ளி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தாமரைக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் இரட்டையூரணி அரசு மேல் நிலைப்பள்ளி இணைந்து நடத்திய டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி இன்று மிக சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட சுகாதார துணை இயக்குனர் டாக்டர். குமரகுருபரன் அவர்கள் தலைமை தாங்கினார். மண்டபம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். முத்துக்குமார் மற்றும் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.சிதம்பர நாதன் அவர்கள் முன்னிலை வகித்தனர்.மாவட்ட மலேரியா அலுவலர் திரு.உதயக்குமார் மற்றும் மாவட்ட …

Read More »