கீழக்கரை செய்திகள்

கீழக்கரை சத்யா பல் மருத்துவமனை இடமாற்றம்

hos55

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் Dr. ராஜ கோபால் காம்ப்ளக்ஸில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக இயங்கி வந்த ” சத்யா பல் மருத்துவமனை ” இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வண்ணார் தெருவில் ( அரசு மருத்துவமனை எதிர்புற சந்து ) புதுப் பொழிவுடன் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து பல் மருத்துவர் டாக்டர் பிரசன்னா தனது மருத்துவமனையை பற்றி கூறியதாவது ” இங்கு அனைத்து விதமான பல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. . பல் வேர் வைத்தியம் (Root Canel Treatment.) . பல் சீரமைக்கும் …

Read More »

கீழக்கரையில் உள்ளூர் ஆமிர் நிறுவன தயாரிப்பில் முறுக்கு உள்ளிட்ட பலகார விற்பனை தொடக்கம்

chips

கீழக்கரையில் உள்ளூர் ஆமிர் நிறுவன தயாரிப்பில் முறுக்கு உள்ளிட்ட பலகார விற்பனை தொடக்கம் கீழக்கரையில் சிறு தொழில் முறையில் முறுக்கு,பக்கோடா போன்ற பலகாரங்கள் ஆமிர் தயாரிப்புகள் என்ற பெயரில் விற்பனைக்கு வந்துள்ளது. இது குறித்து ஆமீர்  நிறுவன விற்பனையாளர்கள் வெளியிட்டுள்ள செய்தியில்… ஆமிர் தயாரிப்புகள் விற்ப்பனைக்கு தயாராக உள்ளன. இப்போது முறுக்கு, ரிப்பன் பக்கோடா காரச்சேவ் வகைகள் மற்றும் குளோப் ஜாமுன் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும், உங்கள் வீட்டு விசேசங்களுக்கு நீங்கள் நினைக்கும் டிசைனில், அளவில் தயாரித்து தரப்படும் தயவுசெய்து தொடர்பு கொள்ளவும் 994451466 …

Read More »

தமிழக அரசின் ‘இருசக்கர வாகன திட்டம்’ விண்ணப்பிக்க தகுதியுள்ள பெண்கள் யார்?-

two wheel

 மகளிருக்கான இருசக்கர வாகனம் மானியம் வழங்கும் திட்டத்தில் நகர்புறத்திற்கு நகராட்சி ஆணையாளர் தான் அனுமதியளிக்கும் அதிகாரி ஆவார் . வேலை பார்க்கும் மகளிருக்கு அவர்கள் பார்க்கும் பணிச்சுமையை எளிதாக்கும் வகையில் தமிழக அரசால் இந்த இரண்டு சக்கரவாகனம் வழங்கப்படுகிறது.இந்த இருசக்கர வாகனத்தை மூன்று ஆண்டுகளுக்கு விற்பனை செய்ய இயலாது.125cc க்குள் இன்ஜின் திறன் இருக்க வேண்டும் ஹியர்லெஸ் வாகனத்திற்கு மட்டுமே அனுமதி. விண்ணப்பிக்கும் போது ஓட்டுநர் உரிமம் அவசியம் வைத்திருக்க வேண்டும். இது தவிர விண்ணப்பதாரரின் விண்ணப்பத்தின் உண்மைதன்மை கண்டறிய நகராட்சி பணியாளர்களான வருவாய் …

Read More »

வபாத் அறிவிப்பு காலமானார்.. ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி..

teacher

கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல் நிலை பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த  ஜனாப் O.S.அப்துர்ரகுமான் மாஸ்டர் அவர்கள் நேற்று(19.01.2018) சென்னையில்  விபத்தில் மரணமடைந்து விட்டார்கள்.   “இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்” நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும். அவரது மகன் ஷேக்பரீது தற்போது சென்னையில் உள்ளார் தொடர்பு கொள்ளவும். +917010941223 மணிலா ஹாஜாஷாம் தகவல்:பிரபுக்கள்தெரு: ஜலால்

Read More »

துபாய் ஈமான் அமைப்பின் புதிய அலுவலக திறப்பு நிகழ்ச்சி

aima9556

துபாய் ஈமான் கல்ச்சார மையத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா அஸ்கான் ஹவுஸ் கட்டிடத்தில் நடைபெற்றது ஈமான் அமைப்பின் தலைவர் பி எஸ் எம் ஹபீபுல்லா தலைமை வகித்தார். அதிராமபட்டினம் சேக் தாவூத் கிராத் ஓதினார் ஈமான் அமைப்பின் பொது செயலாளர் ஹமீது யாசின் வரவேற்புரை நிகழ்த்தினார் துணை தலைவர் மஹ்ரூப் முன்னிலை வகித்தார். அய்மான் சங்கத்தின் தலைவர் களமருதூர் சம்சுதீன் ஹாஜியார் ,பொதுசெயலாளர் எஸ் ஏ சி ஹமீது, அபுதாபி தமிழ் சங்கதலைவர் ரெஜினால்டு, ஈமான் கல்வி குழு செயலாளர் பைசுர் ரஹ்மான், …

Read More »

கீழக்கரை செய்யது முஹம்மது அப்பா தர்ஹா கொடி ஏற்ற நிகழ்ச்சி

kodi9555

கீழக்கரை செய்யது முஹம்மது அப்பா தர்ஹாவில் கந்தூரி விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. விழாவுக்கு தர்ஹாவின் டிரஸ்டி சதக்கத்துல்லா ஆலிம்ஷா தலைமை வகித்தார்.   தக்பீர் முழக்கத்துடன் கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Read More »

ஆபத்தில் மின் கம்பம்.. அச்சத்தில் பொதுமக்கள்

post645

கீழக்கரை தெற்கு தெரு பகுதியில் அமைந்துள்ள மின் கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. உடைந்த நிலையில் உள்ள இந்த மின் கம்பத்தினால் ஆபத்து ஏற்படலாம் என அப்பகுதியினர் அச்சம் தெரிவித்துள்ளனர்   இது குறித்து அப்பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஆனா மூனா என்ற  காதர் சாஹிப் கூறியதாவது உடனடியாக  மின் வாரியம் நடவடிக்கை எடுத்து இதனை சீர் செய்ய வேண்டும்ம் என்றார்

Read More »

கீழக்கரையில் எம் ஜி ஆர் பிறந்த நாள் விழா

mgr

கீழக்கரையில் எம் ஜி ஆர் பிறந்த நாள் விழா முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர் பிறந்த நாள் விழா கீழக்கரையில் கொண்டாடப்பட்டது தினகரன் அணியின் கீழக்கரை நகர் செயலாளர் சுரேஷ் தலைமையில் கட்சினர் பங்கேற்றனர் அ இ அதிமுக சார்பில் அதிமுக நகர் செயலாளர் ராஜேந்திரன், பாசறை செயலாளர் செல்வம், பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் அதிமுகவினர் பங்கேற்றனர்

Read More »

தமிழகத்தில் 100 சிறந்த இளைஞர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்ட கீழக்கரை இளைஞருக்கு பாராட்டு

yyy

தமிழகத்தில் சிறந்த 100 இளைஞர்களில் ஒருவராக கீழக்கரை கிளாசிபைட் எஸ் கேவி சேக் புதிய தலைமை தொலைகாட்சி மற்றும் தொண்டு நிறுவனத்தால் தேர்ந்து எடுக்கப்பட்டார் . இவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர் இவருக்கும் வாழ்த்து தெரிவித்து கீழக்கரை நகரில் பல்வேறு இடங்களில் சுவொரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது.

Read More »

கீழக்கரையில் பொங்கலையோட்டி விளையாட்டு போட்டிகள்

ur566

கீழக்கரை லெட்சுமிபுரத்தில் 21ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகள் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளான கபடி போட்டி, உரி அடித்தல், சாக்கு ஓட்டம் ஆகியவை நடந்தன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. போட்டியை விளையாட்டு குழு ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து நடத்தினர்.

Read More »