அரசுதுறை அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் படகு விவரங்களை ஆன்லைனில் பதிவுசெய்ய மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

klkboat1

ராமநாதபுரத்தில் மாவட்டத்தில்  இயங்கி வரும் அனைத்து படகுகளையும் ஆன்லைனில் பதிவு செய்திருக்க வேண்டும் என ஆட்சியர் க.நந்தகுமார் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் இயங்கி வரும் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் அனைத்தும் ஆன்லைனில் பதிவு செய்திருக்க வேண்டும்.விசைப்படகுகள் அனைத்தும் மீன்வளத்துறையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளபடி பதிவு எண் உரிய வண்ணம் மற்றும் உரிய அளவில் எழுதி இருக்க வேண்டியதுடன் வர்ணம் பூசியும் இருக்க வேண்டும். படகுகள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது, பதிவு சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையும் வைத்திருக்க வேண்டும். விசைப்படகுகள் …

Read More »

சிறுபாண்மையின மாணவ,மாணவியருக்கு கல்வி உதவி தொகை தொடர்பான அறிவிப்பு!

minority

சிறுபாண்மை மாணவர்கள் இவ்வருடத்திற்கான கல்வி தொகை பெற விண்ணபிக்கலாம் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி தொகை தொடர்பான அறிவிப்பை  http://momascholarship.gov.in/index.html      http://www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற முகவரியில் பார்த்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணபிக்க கடைசி நாள் : 15/09/2014    ஏற்கெனவே  உதவித்தொகை பெற்றுவரும்  மாணவர்கள் புதுபிக்க கடைசி நாள்: 10/10/2014    

Read More »

ஆதார் அட்டை தொடர்பாக கீழக்கரை நகராட்சியின் அறிவிப்பு!

நகராட்சி அறிவிப்பு

  தேசிய அடையாள அட்டை(ஆதார் அட்டை) இது நாள் வரை கணினியில் பெயர் பதிவு செய்ய தவறியவர்கள் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று பதிவு செய்து கொள்ளும் படி நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய கடைசி நாள் 11/06/2014 (புதன்கிழ

Read More »

இஞ்சினியரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப படிவம் விநியோகம் ஆரம்பம்!

anna

இஞ்சினியரிங் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் விநியோகம் இன்று (03/05/2014) முதல் தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 59 மையங் களில் விண்ணப்பங்கள் வழங்கப் படுகின்றன. தமிழகம் முழுவதும் 570-க்கும் மேற்பட்ட இஞ்சினியரிங் கல்லூரிகளில் 2 லட்சம் இடங்கள் உள்ளன. அரசு இஞ்சினியரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள பி.இ., பி.டெக். இடங்களும், தனியார் கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு வரும் இடங்களும் ஒற்றைச் சாளர முறையில் (சிங்கிள் விண்டோ சிஸ்டம்) பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். அதன்படி, இஞ்சினியரிங் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்கள் இன்று (சனிக்கிழமை) முதல் …

Read More »

பாலிடெக்னிக்கில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர விண்ணப்பப் படிவம் விநியோகம்

MSPCcollegephoto

“லேட்ரல் என்ட்ரி” என்ற முறையில் பிளஸ்-2 முடிக்கும் மாணவர்களும், 10-ம் வகுப்புடன் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களும் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர்ந்துவிடலாம். தமிழகத்தில் உள்ள 484  பாலிடெக்னிக்கில்  முதலாம் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள  இடங்களில் 20 சதவிதம் இடங்கள்  பிளஸ்-2 முடிக்கும் மாணவர்களும், 10-ம் வகுப்புடன் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களும் சேரும்  “லேட்ரல் என்ட்ரி” முறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 2014-15-ம் கல்வி ஆண்டில் லேட்ரல் முறையில் பாலிடெக்னிக்கில் சேருவதற்கான விண்ணப்பப் படிவம் மே 5-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.அனைத்து  பாலிடெக்னிக் …

Read More »

புனித ஹஜ்ஜுப் பயணம் விண்ணப்பித்தவர்களுக்கு வரும் ஏப்ரல் 21ம் தேதி குலுக்கல்

hajj-tour-

2014ம் ஆண்டு புனித ஹஜ்ஜுப் பயணம் மேற்கொள்ள தமிழகத்தில் இருந்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யுமாறு, இந்திய ஹஜ் குழு, தமிழக ஹஜ் குழுவைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்தவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான குலுக்கல் நிகழ்வு, சென்னை ராயப்பேட்டையில்  புதுக் கல்லூரியில் உள்ள ஆனைக்கார் அப்துல் சுக்கூர் அரங்கத்தில் வரும் 21-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் …

Read More »

உங்கள் வங்கி கணக்கில் மிகக் குறைந்த இருப்பு இருந்தால் இனி அபராதத் தொகை இல்லை.

RBI

உங்களுடைய சேமிப்பு வங்கி கணக்கில், வங்கி நிர்ணயித்து இருக்கும் குறைந்த இருப்பை விட கணக்கில் குறைவாக  பணம்  இருந்தால் தற்பொழுது வங்கிகள் அபராத தொகை விதிக்கிறது. இனிமேல் இந்த அபராதத் தொகை விதிக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி நாட்டிலுள்ள வங்கிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறது. அதற்கு பதிலாக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தனது சேவைகளை குறைத்துக் கொள்ளலாம் என்றும் கூறி இருக்கிறது. மாதம் இருமுறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் பாலிசி கூட்டத்தில் “மக்களுடைய இயலாமையை பயன்படுத்தி அவர்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது” என்றும் அதற்கு பதிலாக வங்கிகள் …

Read More »

தகுதியானவர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 25 கடைசி நாள்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ramnad collector office

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார்   வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு : மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தகுதிபடைத்த அனைவரும் வாக்களித்து வலுவான ஜனநாயகத்தை ஏற்படுத்திட வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 1.1.2014க்கு முன்பாக 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று தேர்தல் நாளன்று வாக்களிக்க விண்ணப்பிக்கலாம். இம்மாதம் 25 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது …

Read More »

விவசாயிகள் பயனடையும் வகையில் தென்னை மரங்களுக்கு இன்சூரன்ஸ் திட்டம்

Coconut-640x300

வெள்ளம், புயல், வறட்சி, பூச்சிநோய் தாக்குதல், தீ விபத்து மற்றும் இயற்கை சீற் றங்களால் தென்னை மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டாலோ அல்லது முற்றிலும் பலன் கொடுக்காத நிலை ஏற்பட்டாலோ தென்னை மர காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு வழங்கப்படும். காப்பீட்டு திட்டத்தில் சேர தென்னை சாகுபடி விவசாயிகள் தனிப் பயிராகவோ, ஊடு பயிராகவோ வரப்பில் வரிசையாகவோ, வீட்டு தோட்டத்திலோ குறைந்தபட்சம் பலன் தரக்கூடிய 5 மரங்களையாவது சாகுபடி செய்திருக்க வேண்டும். ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய மரங்களை இத்திட்டத்தில் சேர்க்கலாம். குட்டை மற்றும் …

Read More »

2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்டரூபாய் நோட்டுகளை மாற்ற கால அவகாசம் நீட்டிப்பு!

indian rupees

2005ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் மற்றும் ஆண்டு அச்சிடப்படாத ரூபாய் நோட்டுக்களை மார்ச் 31ம் தேதிக்கு பிறகு திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து ஜூன் மாதத்துக்குள் இந்த நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறியிருந்தது. தற்பொழுது ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டுக்கு முந்தைய நோட்டுக்கள் மற்றும் ஆண்டு குறிப்பிடப்படாத நோட்டுக்களை மாற்றுவதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுவதாக ரிசர்வ் …

Read More »