அரசுதுறை அறிவிப்பு

ராமநாதபுரத்தில் இன்று (8/8/2015) தொழில் முதலீட்டாளர்கள் கூட்டம் : பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

ramnad collector office

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், ஆட்சியர் க. நந்தகுமார் தலைமையில் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு தொழில் முதலீட்டாளர்களின் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து, ஆட்சியர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி அறிக்கை :   தமிழக முதல்வர் தலைமையில் வரும் செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரையிலான தொழில் சார்ந்த முதலீடுகள் தமிழகத்தில் ஏற்படுத்திட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. …

Read More »

ஏப்ரல்24,25ம்தேதி ராமநாதபுரத்தில் பாஸ்போர்ட் சிறப்பு முகாம்!

Indian-Passport-Renewal-or-Re-issue-Documents-list

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் வருகிற 24. 25ம் தேதிகளில் பாஸ்போர்ட் சிறப்பு முகாமை ராமநாதபுரத்தில் நடத்தவுள்ளது. இதுகுறித்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மணிஸ்வர ராஜா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு நாட்கள் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் 300 பேர் பயனடையும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் பயனடைய விரும்புபவர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது பாஸ்போர்ட்டுக்கான கட்டணத்தை செலுத்தி பாஸ்போர்ட் விண்ணப்பத்தி்ல் செலுத்தி …

Read More »

வாக்காளர் அடையாள அட்டைக்கான சிறப்பு முகாம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 12–ந்தேதி நடக்கிறது!

voterlist

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1291 வாக்கு சாவடிகளில் வாக்காளர் அடையாள அட்டைக்கான சிறப்பு முகாம் 12–ந்தேதி நடைபெறுகிறது என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் அமைந்துள்ள 1291 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் 25.3.2015 முதல் அவரவர் பகுதிகளுக்குட்பட்ட வாக்காளர் பட்டியலுடன் வீடு, வீடாக சென்று ஆதார் எண்., தொலைபேசி, கைபேசி எண், மின் அஞ்சல் முகவரி போன்ற விபரங்களைச் சேகரித்து வருகின்றனர். மேற்படி விபரங்களை இதுநாள் வரை அளிக்காதவர்களின் …

Read More »

அப்பரன்டீஸ் வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை! ராமநாதபுர மாவட்ட கலெக்டரின் புதிய முயற்சி!!

ramnad collector office

ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் கிடைக்காததால், தொழிற் பழகுனர் இடங்களை நிரப்ப முடியவில்லை. மேலும், தற்போது தொழிற் பழகுனர் பயிற்சி பெறுபவர்களுக்கு உதவித்தொகை ரூ.6500 முதல் 7500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் பயன் பயிற்சியாளர்களுக்கு சேரவும், அவர்கள் அரசு வேலை பெறவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் “அப்பரன்டீஸ் மேளா’ தொழில் நிறுவனங்கள் மூலம் நடத்தப்படவுள்ளது. இதன் தொடர்பாக பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஏப்., 6 ல் காலை 10.30 மணிக்கு இந்த “அப்பரன்டீஸ் மேளா’ நடக்கிறது. தொழிற் பயற்சி பெற்ற பயிற்சியாளர்கள் இதில் பங்கேற்று …

Read More »

ராமநாதபுரம் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் நீச்சல் குளத்தில் கோடை கால சிறப்பு நீச்சல் பயிற்சி!

RAMNAD-SWIMMING pool

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள பி.எஸ்.அப்துல் ரஹ்மான் நீச்சல் குளத்தில் கோடை கால நீச்சல் சிறப்பு பயிற்சி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற உள்ளது. பயிற்சி ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 15 வரை, ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 29 வரை, மே 2 முதல் மே 15 வரை, மே 16 முதல் மே 28 வரை, மே 30 முதல் ஜூன் 12 வரை அரசு விடுமுறை தினங்கள் மற்றும் திங்கட்கிழமை தவிர்த்து நடைபெற உள்ளது. …

Read More »

கீழக்கரை தாலுகா தொடர்பாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

taluk94

புதியதாக உருவாக்கப்பட்டுள்ள கீழக்கரை தாலுகாவில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் வழக்கம் போல் எதிர்வரும் 31 / 03 /15 வரை தங்களது மனுக்களை ராமநாதபுரம் வட்டாட்ட்சியர் அலுவலகத்தில் சமர்பித்து கொள்ளலாம் 01/04/15 முதல் கீழக்கரை தாலுகா அலுவலகத்திலிருந்து செயல்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Read More »

2015ஆம் ஆண்டு புனித ஹஜ்ஜுப் பயண விண்ணப்பங்கள் ஜனவரி 19 முதல் வினியோகம்!

Muslim pilgrims pray around the holy Kaaba at the Grand Mosque in Mecca

இந்த ஆண்டு  ஹஜ் புனிதப் பயணம் செல்ல விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: 2015ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம் பெருமக்களிடமிருந்து, சில விதி முறைகள் மற்றும் வரையறைகளுக்குட்பட்டு,  மும்பை இந்திய ஹஜ் குழு சார்பில் ஹஜ் விண்ணப்பங்களை மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலரிடமிருந்து ஹஜ் 2015க்கான விண்ணப்பப் படிவங்களை ஜனவரி 19ந் தேதியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை www.hajcommittee.com  என்ற …

Read More »

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு!ராமநாதபுர மாவட்டத்தில் செப் 19ல் அரசு உள்ளூர் விடுமுறை

Announce

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு செப்டம்பர் 19ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா ஏர்வாடி கிராமத்தில் உள்ள மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகிம் ஷஹீது ஒலியுல்லாக் ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு செப்டம்பர் 19இல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு செப்டம்பர் 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ராமநாதபுரம் மாவட்டத்துக்கு ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை ஈடுசெய்யும் பொருட்டு இம்மாதம் 27 ஆம் தேதி சனிக்கிழமை பணிநாளாக கருதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்பட …

Read More »

விபத்துக்களை குறைக்க நடவடிக்கை!வாகனங்களுக்கு “ரெட்ரோ ஸ்டிக்கர்” அவசியமாகிறது!

before_after_utility_truck

விபத்துகளை தவிர்க்கும் நடவடிக்கையாக வாகனங்களில் அதிக ஒளிரும் ரெட்ரோ ரிப்ளெக்ட்டிங் ஸ்டிக்கர்’ ஒட்டும் மத்திய அரசின் உத்தரவை கட்டாயமாக அமல்படுத்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உலகளவில் தினசரி நடக்கும் விபத்துகளில் 15 சதவீதம் இந்தியாவில் நடக்கிறது. இரவு நேரம் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களில் மோதி நடக்கும் விபத்துகள் தான் அதிகம். சாலை விபத்துகளை தவிர்க்க வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர், பாதுகாப்பு மிரர், ஹாரன் உள்ளிட்ட 20 வகை பாதுகாப்பு சாதனங்கள் இருக்கவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை …

Read More »

கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம் புனித பயணம் செல்ல அரசு நிதி உதவி! விண்ணப்பம் விபரம் அறிவிப்பு!!

Jerusalem-ISR-Christian-Quarter1

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்கு ரூ.20 ஆயிரம் அரசு நிதி வழங்கும் திட்டத்துக்கு கிறிஸ்தவர்கள் வருகிற 31–ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று  அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20,000 நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்புனித பயணம் பெத்லகேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இப்புனித பயணம் செப்டம்பர் …

Read More »