உலகம்

ஆப்கானிஸ்தானின் முதல் பெண் விமானி

afghan pilot55

ஆப்கானிஸ்தான் விமான படையில் முதல் பெண் விமானியாக தேர்வு பெற்று பணியாற்றுகிறார் 23 வயது நிரம்பிய இளம் பெண் நிலோபர் ரஹ்மானி.பெண்கள் கல்வி விகிதம் குறைவாக உள்ள ஆப்கானிஸ்தானில் பெண் ஒருவர் விமானியாக தேர்வு பெற்று உலக அரங்கின் கவனத்தை ஈர்த்துள்ளார். பைலட் நிலோபர் ரஹ்மானி கூறியதாவது, பயிற்சியை நிறுத்த வேண்டும் என நானும் என் குடும்பத்தாரும் அடையாளம் தெரியாதவர்களால மிரட்டப்பட்டோம்.ஆனால் மன உறுதியுடன் பல சோதனைகளையும் கடந்து இந்த இலக்கை அடைந்துள்ளேன். என்னை போன்று சாதிக்கும் ஆர்வத்துடன் பல பெண்கள் இங்கு உள்ளனர் …

Read More »

53 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஆற்றில் விழுந்தது! 12 பயணிகள் பலி!!

transasia1

தைவானில் 53 பேருடன் சென்ற பயணிகள் விமானம் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பயணிகள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. மீட்புப் பணி துரிதமாக நடத்தப்பட்டு வருகிறது. தைவானில் தலைநகர் தைபே விமான நிலையத்திலிருந்து இன்று காலை 53 பேருடன் புறப்பட்ட டிரான்ஸ் ஏசியா பயணிகள் விமானம், கின்மென் தீவைத் தாண்டி செல்லும்போது பாலம் மீது மோதி விபத்துக்குள்ளாகி கீலுங் என்ற ஆற்றில் விழுந்தது. சரியாக 10.55 மணிக்கு விமானத்துடன் தகவல் தொடர்பு இல்லாமல் சென்றதை அடுத்து விமானம் விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டது. கண்காணிப்பு …

Read More »

ஒற்றை கண் குழந்தை பிறந்து 15 நிமிடத்தில் உயிரழப்பு

oneeye

எகிப்து மருத்துவமனையில் பெண் ஒருவர் சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பெற்றார். அக்குழந்தைக்கு ஒரு கண் மட்டும் இருந்தது ஆனால் பிறந்து 15 நிமிடத்தில் உயிரழந்த‌து. இது போன்ற நிகழ்வுகள் மருத்துவ உலகில் மிகவும் அரிது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Read More »

298 பேருடன் விழுந்து நொறுங்கியது மலேசிய விமானம்!

malaysian-airlines-wreckage-rebels-jpeg

கடந்த மார்ச் 8-ம் தேதி  239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து சீனாவிற்கு புறப்பட்ட  எம்.எச்.370 மலேசிய விமானம் காணாமல் போய், இன்று வரை அதன் விபரம் தெரியாமல் மலேசியா அரசாங்கமும் பயணிகளின் குடும்பங்களும் தவித்திருக்கும் நிலைமையில் வியாழன் அன்று ஹாலந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு 298 பேருடன் புறப்பட்ட மலேசிய விமானம், ரஷ்ய எல்லையில் உள்ள கிழக்கு உக்ரைன் பகுதியில் விழுந்து நொறுங்கியது.இது, ஏவுகணைத் தாக்குதல் என்று உக்ரைனின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் ஆன்டன் கேராஷென்கோ தெரிவித்துள்ளார். விமானம் விழுந்து நொறுங்கியதை உறுதி செய்யும் …

Read More »

துபாய் ஈமான் அமைப்பு நடத்திய ரத்ததான முகாமில் தமிழர்கள் அதிகளவில் பங்கேற்பு !

iman ascon

   துபாய் ஈமான் அமைப்பு, துபை ஹெல்த் அத்தாரிட்டியுடன் இணைந்து ரத்ததான முகாமினை 11.04.2014 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை அஸ்கான் ஹவுஸில் மிகச் சிறப்புற நடத்தியது. ரத்ததான முகாமினை துபாய் ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன், துணைத்தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா, ஈடிஏ ஹெச்.ஆர்.எம். எக்ஸிகியூடிவ் டைரக்டர் எம். அக்பர் கான், பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, துபை அரசின் கம்யூனிட்டி அத்தாரிட்டியின் அதிகாரிகள் முஹம்மது, பழனி பாபு உள்ளிட்டோர் துவக்கி …

Read More »

காணாமல் போன மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது – மலேசிய பிரதமர் அறிவிப்பு

MAL

16 நாட்களுக்கு முன்பு காணாமல் போன மலேசிய விமானம் MH 370  இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விழுந்திருக்கும் என்று மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர். விமானத்தின் உடைந்த பாகங்கள் இந்திய பெருங்கடலில் இருப்பதாக செயற்கை கோள் புகைப்படத்தில் பதிவாகியுள்ளது என்றும், எனவே கடலில் விமானம் விழுந்திருக்கும் என்று பிரிட்டிஷ் செயற்கை கோள் நிறுவனம் மற்றும் பிரிட்டனின் விமான விபத்தை கண்டுபிடிக்கும் நிறுவனத்தின் நிபுணர்கள் முடிவுக்கு வந்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். கோலாலம்பூரில் இருந்து  பீஜிங் நோக்கி, 239 …

Read More »