கீழக்கரை ஸ்பெஷல்

கீழக்கரையின் ஸ்பெசல் இனிப்பு பதார்த்தங்களில் ஒன்றான ‘ஓட்டுமா’

ottumaa

இது அரசியல்வாதிகளுக்கு மட்டும் பிடித்த வாசகம் என நினைக்க வேண்டாம் இனிப்பு பிரியர்களுக்கும்தான்.. கீழக்கரையின் ஸ்பெசல் இனிப்பு பதார்த்தங்களில் ஒன்றான ‘ஓட்டுமா’ பலர் பசியை ஓட்டுமா, நாவில் இன்னொரு ஸ்பூன் போடட்டுமா, என்றெல்லாம அடுக்கு மொழியில் பேசவைக்குக்கும் ஓட்டுமா சாப்பிட்ட‌ பலரின் மனதோடு ஒட்டி கொண்டு விட்டது என்பது உண்மைதான் கீழக்கரையில் வீடுகளில் செய்யப்படும் தொதல், ஓட்டுமா, வட்டலப்பம், சீப்பனியம், கலகலா போன்ற‌ ஸ்பெசல் பலகாரங்கள் மிக பிரபலம்.இவை கடைகளில் கிடைக்காது வீடுகளில் பிரத்யோகமாக‌ செய்யப்படும் . குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிலர் இவற்றை பல்லாண்டு …

Read More »

கீழக்கரையில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முதலாக‌அமைக்கப்பட்ட 3 கல்லூரிகள்

sathak eng coll

கீழக்கரையில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முதலாக‌அமைக்கப்பட்ட 3 கல்லூரிகள் 1.மாவட்டத்தின் முதல் பாலிடெக்னிக் கல்லூரி (முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி . ஆண்டு 1980 ) சதக் டிரஸ்ட் நிர்வாகத்தின்கீழ் இக்கல்லூரி இயங்குகிறது நிர்வாகம் ALHAJ. S. M. YOUSUF CHAIRMAN HAJIYANI. S. M. H. SHARMILA SECRETARY JANAB.M.JAHUFAR BUHARI DIRECTOR PROF.DR.A.ALAUDEEN PRINCIPAL 2. மாவட்டத்தின் முதல் பொறியியல் கல்லூரி (முஹம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி ,ஆண்டு 1984) சதக் டிரஸ்ட் நிர்வாகத்தின்கீழ் இக்கல்லூரி இயங்குகிறது நிர்வாகம் Alhaj. …

Read More »

எங்கே செல்லும் இந்த பாதை ! அழும் மரங்களும்.. மனங்களும்…..

IMG-20150205-WA0031

எங்கே செல்லும் இந்த பாதை கீழைராஸா உலகில் எந்த மூலைக்கு சென்றாலும், நம் மக்களுக்கு, சாயாக்கடைகளில் ஒன்று கூடும் பழக்கம் மட்டும் போகாது என்பதற்கு வெள்ளிக்கிழமை தோறும் துபாயில் முத்தீனா ஈகில் ரெஸ்டாரண்ட் அருகில் கூடும் கீழக்கரை இளைஞர்களே சாட்சி…! மாதத்தின் முதல் வாரம் என்பதால், இந்த       வெள்ளிக்கிழமை மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான் அங்கே சென்றேன்…எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகம் தான்…காக்கா, தம்பி, மாமா, மச்சான், என்று நலம் விசாரிப்பில் நனைந்தபடி, நண்பர்களின் குழுவுடன் …

Read More »

5000 கார்கள் 8000 ஊழியர்கள் ! யுஏஇல் கார் தொழிலில் முண்ணனியில் தமிழர்

habeebullah - Copy

யுஏஇ என்றழைக்கப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சில் அரேபியன் ஹோல்டிங் நிறுவனத்தின் அரேபியன் டாக்சி பிரிவு இந்நிறுவனத்திற்கு சொந்தமான 5000த்திற்கும் மேற்பட்ட வாடகை கார்கள் இயக்கப்பட்டு அமீரகத்தில் அதிக வாடகை கார்களை கொண்டுள்ள நிறுவனமாக முன்னிலை வகிக்கிறது. இதன் நிறுவனர்களில் ஒருவரும் துணை சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநருமாக திகழ்பவர் பிஎஸ்எம் ஹபீபுல்லாஹ் இவர் வறட்சி மாவட்டமாக கருதப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தின் கீழக்கரையை சேர்ந்தவர்.இந்நிறுவனத்தில் தென் இந்தியாவை சேர்ந்த குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என அவர் தெரிவித்தார் மேலும் அவர் கூறியதாவது, இறைவனின் …

Read More »

கீழக்கரை கடல் பகுதியில் கடற்பாறைகளால் அமைந்த இயற்கை கடல்பாலம்!

பாலம்

கீழக்கரை  பல்லாக்கு ஒலியுல்லா தர்ஹா அருகேயுள்ள கடல் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு இயற்கை கடல் பாலம் போன்று பாறைகள் அமைந்துள்ளது. இந்த பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் பலர் இந்த பகுதி கடலின் ஆழம் குறைவாக உள்ளதால் பாறைகளால் ஆன பாலத்தின் அருகே சென்று மீன் பிடித்து வருகின்றனர். இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த காசிம் என்பவர் கூறியதாவது,  இந்த பாறைகள் ஒரே சீராக இருப்பதால் பாலம் போல் காட்சியளிக்கிறது. இது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. பாறைகள் மேல் உள்ள பாசிகளை உண்ண மீன்கள் அதிக அளவில் வருகின்றன. இதனால் மீன் பிடிப்பவர்களுக்கு இப்பாலத்தின் மேல் …

Read More »

கணவா தொக்கு

kanava thokku

தேவையானப்பொருட்கள்: சுத்தம் செய்த கணவா – 250 கிராம் பெரிய தக்காளி – 1/2 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2டீஸ்பூன் மிளகாய்ப்பொடி – 1 டீஸ்பூன் சீரகப்பொடி – 1டீஸ்பூன் மிளகுத்தூள் – 3/4 டீஸ்பூன் மல்லி இலை – சிறிது உப்பு – சுவைக்கு எண்ணெய் -2டேபிள்ஸ்பூன் செய்முறை: சுத்தம் செய்த கணவாவை சிறியதாக நறுக்கிக்கொள்ளவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை நாண்ஸ்டிக் கடாயில் போட்டு எண்ணெய் விட்டு வதக்கவும். பொடியாக அறிந்த தக்காளி சேர்க்கவும் கூடவே கீறிய பச்சைமிளகாய் சேர்க்கவும். மசாலாப்பொருட்கள் …

Read More »

“நண்டுக்கால் போண்டா” நிச்சயம் நம்புங்கள்! இது நான்வெஜ் அல்ல !!

nandukaalponda

நண்டுக்கால் போண்டா நண்டுக்கால் போண்டா என்றதும் நண்டின் காலை தேடக்கூடாது. இது பியூர் வெஜிடேரியன் டிஷ் .கீழக்கரையில் இதனை நண்டுக்கால் போண்டா என்றுதான் கூறுவார்கள்.அரிந்த நீளமான வெங்காயம் எண்ணெயில் மொறுமொறுப்பாகி போண்டாவுக்கு வெளிப்பாகம் துருத்திக் கொண்டிருப்பதைப்பார்த்தால் நண்டின் கால் போல் தோற்றம் அளிப்பதாலோ என்னவோ இது நண்டுக்கால் போண்டாவாகி இருக்கும் என்பது என் அனுமானம். இந்த போண்டாவின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் வெளியூரில் இருந்து கீழக்கரைக்கு பஸ்,ரெயில் வழித்தடத்தில் வருவதென்றால் காலை வேளையில் ஊருக்குள் நுழைந்ததுமே முதலில் நாசியை வருடிச்சென்று வரவேற்பது வழிநெடுக கடைகளில் சூடாக …

Read More »

மஞ்ச சோறும் முருங்கை கீரை பொரியலும்

manjasoru

மஞ்ச சோறு தேவையான பொருட்கள்: தரமான வெள்ளைப்பொன்னி புழுங்கல் அரிசி – 2 கப் தேங்காய் – 1 தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன் பூண்டு – 4 பற்கள் வெந்தயம் – 1 டீஸ்பூன் சோம்பு – 1 டீஸ்பூன் நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன் மஞ்சள்பொடி – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது ரம்பை இலை – 1 பட்டை – சிறுதுண்டு கிராம்பு – 4 ஏலம் – 3 செய்முறை: தேங்காயைத்துருவிக்கொள்ளவும். 1/4 கப் …

Read More »

மாப்பிள்ளைக்கு மஞ்சள் அடை!

manjal adai

மஞ்சள் அடை தேவையான பொருட்கள்: அரிசி மாவு – 2 கப் முட்டை – 1 தேங்காய் ப்பால் – 3 கப் தேங்காய்த்துருவல – :2 டேபிள் ஸ்பூன் சோம்பு – 1டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம் – சிறிது பச்சை மிளகாய் – 2 கருவேப்பிலை – சிறிது மல்லி இலை – சிறிது மஞ்சள் பொடி – சிறிது உப்பு – சுவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை: தேங்காய்த்துருவலுடன் மஞ்சள் தூள் உப்பு சோம்பு சேர்த்து சன்னமாக …

Read More »

திக்கெட்டும் விரும்பும் தித்திக்கும் தொதல்- செய்முறை

தொதல்

  தென்மாவட்டங்களில் குறிப்பாக கீழக்கரை, மரைக்காயர் பட்டிணம், காயல்பட்டிணம், அதிராமப்பட்டிணம் ஆகிய ஊர்களில் வாழும் இஸ்லாமியர்கள் வர்த்தக ரீதியாக இலங்கைக்குச் சென்று வந்ததன் வழியாக அங்கு இருந்த பலவகையான உணவு வகைகள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது. அதில் தொதல் முக்கியமான பண்டமாகும்.கீழக்கரையில் முக்கிய இனிப்பு பண்டமாக தொதல் விளங்குகிறது. இன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சுற்றி தென்னந்தோப்புகள் அதிகம். இதனால் கீழக்கரையில் பலர் வீடுகளில் குடிசைத் தொழிலாகத் தொதலை செய்து சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகளுக்கும் அனுப்புகிறார்கள். இங்குச் செய்யப்படும் தொதல் ஒரு மாதம் ஆனாலும் …

Read More »