கட்டுரைகள்

நாகா .. ஆஹா.. யுஏஇ 89.4 எப் எம் தொகுப்பாளர் நாகா என்ற நாகப்பனுடன் சந்திப்பு

rj naga1001

ஆர் ஜே எனும் ரேடியோ ஜாக்கிகள் பண்பலை நேயர்களின் அன்றாட வாழ்வில் கலந்து விட்டார்கள்.தங்களுக்கு பிடித்த ரேடியோ தொகுப்பாளர் குரலை ஒருநாள் கேட்க முடியா விட்டாலும் வருந்துபவர்கள் பலர் உண்டு. குறிப்பாக தாய்நாட்டை விட்டு வேறொரு நாடுகளில் பணியாற்றுபவர்கள் வாகனங்களில் பயணிக்கும் போது அவர்களின் காதோரம்  தாய்மொழியில் நட்பையும்,நகைப்பையும் நடுவது ரேடியோ தொகுப்பாளர்கள்தான் என்றால் மிகையில்லை அமைதியான முகம் ,மெலிந்த தேகம்..தெளிவான குரல்.. துள்ளும் தமிழ்.. துவழாத இனிமை.. கனிவான பேச்சு.. கவலை பறந்து போச்சு என கேட்பவர்களின் மனதை மயக்கும் வசீகர குரல் படைத்த …

Read More »

சுவரில் பவர் பாயின்ட் பிரசண்டேஷன் விருது பெற்ற அரசு ஆசிரியர்

teacher karunaidass02

அனைவருக்கும் ஆசிரிய தின வாழ்த்துக்கள் சிவகாசி: கம்ப்யூட்டர் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதில் சிறந்த ஆசிரியர் என்ற மத்திய, மாநில அரசுகளின் விருதை சிவகாசி அரசு பள்ளி ஆசிரியர் கருணைதாஸ் பெற்றுள்ளார். மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் ‘இன்பர்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி அகாடமி ஆப் தமிழ்நாடு’ என்ற அமைப்பு, கடந்த 5 ஆண்டுளாக தமிழக அளவில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மூலம் சிறந்த கற்பித்தலை வழங்கும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கான போட்டியில், சென்னையை சேர்ந்த டி.ஏ.வி., வேலம்மாள் உள்பட …

Read More »

சமூக ஒற்றுமை காப்போம் …. கட்டுரையாளர் . எம் எம் கே முஹைதீன் இப்ராஹிம்

mmk

இறைவனின் கட்டளைக்கு பணிந்து நாம் அனைவரும் ஒரு மாத காலத்தில் நோன்பு இருந்து நமது கடைமையை நிறைவேற்றி வருகிறோம். மனிதர்கள் பயனடைவதற்க்காகவே இறைவன் நமக்கு நோன்பை கடைமையாக்கியுள்ளான், நாம் பசித்து இருந்ததால் அந்த ஏக இறைவனுக்கு எந்த பயனும் இல்லை, மாறாக மனிதனை சீர்படுத்துவதற்க்காகவும், வாழ்க்கையை நெறிபடுத்திக் கொள்வதற்க்காகவும், மனிதன் தீய பழக்கங்களில் இருந்து விடுபட்டும், நேர்மையான முறையில் வியாபாரம் செய்து, தான தர்மங்கள் அதிகம் செய்து, அவதூறு மற்றும் ஆபாச செயல்களில் ஈடுபடாமலும், சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமலும், மக்களிடையே சகோதரத்துவத்தை பேணி காப்பதற்கும், …

Read More »

கண்ணாடிகள் கவனம் …. M அப்துல் ரஹ்மான் EX M.P.

abdul rahman

சமுதாயம் சந்தித்து வருகின்ற பிரச்னைகளில் மிக முக்கியமானது வரம்பு மீறிய காதல் பிரச்னைதான். ஓடிப்போகும் சீரழிவுச் செய்தி எல்லாப் பகுதிகளிலிருந்தும் நீக்கமற வந்த வண்ணமிருக்கின்றன. இதற்கெல்லாம் இதுதான் காரணமென்று பொத்தம்பொதுவாய் ஒன்றைச் சொல்ல முடியாது. செல்போன், சின்னத்திரை, பெரிய திரை, கல்வி நிலையங்களில் கலந்து பழகுதல் எனப் பல காரணங்களைச் சொல்லலாம். காரணம் எதுவாயினும் சரி செய்யப்பட வேண்டிய தலையாய விசயம் இது. இந்தப் பொறுப்பும் கடமையும் பெற்றோர்களையே சாருகின்றது. பெற்றோர்களின் கவனக்குறைவினால்தானே அவர்கள் கீழிறங்கிப் போகின்றார்கள். செல்போன், தொலைக்காட்சி, இணையதளம் ஆகிய வசதிகளை …

Read More »

10 யூனிட் மின்சாரத்தை குறைத்தால் ரூ.866 சேமிக்கலாம்!

CURRENTMETER

மின் பயன்பாட்டில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு 10 யூனிட்டை சேமித்தால் ரூ.866 மிச்சப்படுத்தலாம் எனக்கூறி மின்கட்டண கணக்கீட்டு அட்டவணையை ஜனதா தொழிலாளர் சங்கத்தினர் வீடு,வீடாக விநியோகித்து வருகின்றனர். தமிழ்நாடு மின்சார வாரியம் 2014 டிச. 12-ம் தேதி மின்கட்டணத்தை திருத்தியமைத்தது. இதன்படி 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கப் படுகிறது. 100 யூனிட்வரை பயன்படுத்தினால் ஒரு யூனிட்டுக்கு ரூ.1,200 யூனிட்வரை ரூ1.50, 500 யூனிட்வரை பயன்படுத்தினால் முதல் 200 யூனிட்களுக்கு ரூ.2, மீதியுள்ள 300 யூனிட்களுக்கு ரூ.3 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 500 யூனிட்டுக்கும் …

Read More »

நிக்காஹ் எனும் திருமணத்தை பதிவு செய்வது எப்படி ? விளக்க கட்டுரை

nikkah

நம் ஊரில் தற்போது பல திருமணங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. ஆனால் பலர் அவர்களின் திருமணத்தை பதிவு செய்வது இல்லை. காரணம் விழிப்புணர்வு இல்லாமை. சிலர் அதான் பள்ளிவாசல் தப்தரில் பதிவு செய்து விட்டோமே, பிறகு எதற்கு மீண்டும் ஒரு பதிவு என்று வினவுவதும் உண்டு. . உச்ச நீதிமன்றம் சீமா -எதிர்-அஸ்வினி குமார் (2006 (2) SCC 578) என்ற தீர்ப்பில், திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்யப்படவேண்டும், அதன் பொருட்டு மாநில அரசாங்கங்கள் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கருத்து தெரிவித்தது. இந்த தீர்ப்பின் …

Read More »

எங்கே செல்லும் இந்த பாதை ! அழும் மரங்களும்.. மனங்களும்…..

IMG-20150205-WA0031

எங்கே செல்லும் இந்த பாதை கீழைராஸா உலகில் எந்த மூலைக்கு சென்றாலும், நம் மக்களுக்கு, சாயாக்கடைகளில் ஒன்று கூடும் பழக்கம் மட்டும் போகாது என்பதற்கு வெள்ளிக்கிழமை தோறும் துபாயில் முத்தீனா ஈகில் ரெஸ்டாரண்ட் அருகில் கூடும் கீழக்கரை இளைஞர்களே சாட்சி…! மாதத்தின் முதல் வாரம் என்பதால், இந்த       வெள்ளிக்கிழமை மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான் அங்கே சென்றேன்…எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகம் தான்…காக்கா, தம்பி, மாமா, மச்சான், என்று நலம் விசாரிப்பில் நனைந்தபடி, நண்பர்களின் குழுவுடன் …

Read More »

இனி ஆயிஷா ஸ்கூலுக்கு வராது வாப்பா…’பெரிய மனுசி’ சிறுகதை- ராஜாக்கான்

PM_1

இஸ்லாமிய சமுதாயத்தில் சிலரால் “பெண் வயசுக்கு வருதல்” எனும் இயற்கை நிகழ்வை காரணம் காட்டி சமூகத்தில் நசுக்கப்படும், பெண்கல்வி, பெண் முன்னேற்றம், போன்ற செயல்களைச் சாடும் சிறுகதை இது. இலக்கிய உலகில் பரவலாக பாராட்டப்பட்ட இச்சிறுகதை,”அமீரக தமிழர் மன்றம் “பத்தாவது ஆண்டு விழா மலர், மற்றும் இலங்கையைச் சார்ந்த “இருக்கிறம்” இதழ் போன்றவற்றில் பிரசுரமானது என்பது குறிப்பிடத்தக்கது. நமதூர் வட்டார மொழியில் கதை பின்னப்பட்டுள்ளதால் இதை வாசிக்கும் மற்றவர்களுக்காக, அதற்கான அருஞ்சொற்பொருளை கதையின் அடியில் கொடுக்கப்பட்டுள்ளது. பெரிய மனுசி         …

Read More »

மன்னராட்சிக்கு பின் மீண்டும் தலைநகராகும் கீழை மாநகரம்.(தாலுகாதெரிந்ததும்,தெரியாததும்..ஒரு விலாவரிவிளக்கம்)  – கீழைராஸா (எ) முகம்மதுராஜாக்கான்

TAULUK-MAP-KILAI

”குஞ்சாலி  காக்கா, நம்ம ஊரு தாலுகாவா மாறிடிச்சாமே..?” (மீன்கடைஅருகே) ”தமிழக முதல்வர்அறிவிச்ச புதிய 15 தாலுகாவுலே கீழக்கரையும் ஒன்றாமே..?” (மெயின்ரோட்டில்) “ஆமா வரப்போறது வட்டாட்சி அலுவலகமா..? தாலுகாஆபிஸா..?” (புதுபஸ்டாண்ட்) “நாங்க இல்லைன்னா கீழக்கரை தாலுகா ஆக,வாய்ப்பேஇல்லை” (முஸ்லிம்பஜார்) “ஆலிம்சா இவங்களோட நீங்க மல்லுகட்டுனது போதும் புதுசா வர்ற தாலுகா ஆபிஸ் முன்னாலே டைப்பிங்செண்டர், டீக்கடைன்னுஒருகடையைபோடுங்கஅப்புறமாபாருங்கஉங்கவளர்ச்சியை..!” (புதுபள்ளிவாசல்அருகில்) “ஆமாதாலுகாஆபிஸ்வந்துட்டா, இனிராம்நாடுபோகத்தேவையேஇல்லையா..?” (முக்குரோடு) ”ஏம்வாப்பா, எதோதாலுகாவருது, தாலுகாவருதுன்னுசொல்லுறாங்களேஅப்படின்னாஎன்ன..?..”( ரேசன்கடைவரிசையில்) கடந்தரெண்டுவாரமா, கீழக்கரையை சுற்றி இதே பேச்சுதாங்க .தாலுகா தாலுகான்னு ஊரெங்கும் ஒரே பேச்சாக இருந்தாலும் தாலூகான்னா என்ன?என்று …

Read More »

செத்தும் கொடுத்த சீதக்காதி

seethakkathi

வடக்கிந்தியாவில் இஸ்லாம் பரவியதற்கும் தமிழ்நாட்டில் இஸ்லாம் வேர் பிடித்ததற்கும் பெருத்த வேறுபாடுகள் உண்டு. தமிழகத்தோடு அரபு வணிகர்கள் தொன்றுதொட்டு வாணிபம் செய்துவந்திருக்கிறார்கள். ஏழாம் நூற்றாண்டில் அரபு மண்ணில் இஸ்லாம் தோன்றிவிட்டதையொட்டி இஸ்லாமியர்களாகிவிட்ட அரபு வணிகர்கள் காலப்போக்கில் தமிழகத்தில் குடியேறி வாழத் தொடங்கிவிட்டனர். வடக்கிந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி பல நூறு வருடங்கள் நடைபெற்றதைப் போல, தமிழகத்தில் முஸ்லிம்களின் ஆட்சி இருக்கவில்லை. மதுரை சுல்தான்களின் ஆட்சி 1333-1378 வரை இடைப்பட்ட ஆண்டுகளில்தான் நடை பெற்றிருக்கிறது. பதினான்காம் நூற்றாண்டிற்கு முன்பாகவே திருச்சியிலும், இராமநாதபுரம் ஏர்வாடி பகுதியிலும், இஸ்லாத்தைப் பரப்புவதற்காக …

Read More »