வபாத் அறிவிப்பு (காலமானார்). பி.எஸ்.ஏ

BSA-கீழக்கரை மேலத்தெருவை சேர்ந்த  தொழிலதிபரும்,கல்வியாளரும்,சிறந்த மனிதாபிமானியுமான  பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்கள் இன்று வபாத்தாகிவிட்டார்கள் (காலமானார்). இன்னா லில்லாஹி வ இன்னா இஅலைஹி ராஜிஹூன்.. அன்னாரின் மஹ்பிரத்திற்கு வல்ல நாயனிடத்தில் துஆ செய்யும்படி  கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

 

வாழ்க்கை குறிப்பு .
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த இந்திய தொழிற்துறையின் முன்னோடியும், தமிழகத்தில்பெரும்செல்வாக்குகொண்டவரும், தயாளகுண சீலருமான சேனா ஆனா என்று அழைக்கப்படும் வள்ளல் பி. எஸ். அப்துர்ரஹ்மான் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் துபாயை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும், ரியல் எஸ்டேட், கட்டுமாணம் மற்றும் வர்த்தக துறைகளில் மிகவும் சக்தி வாய்ந்த ஈ.டி.ஏ அஸ்கான் மற்றும் ஸ்டார் குழும நிறுவனங்களின் நிறுவன பங்குதாரரும், துணை தலைவரும் ஆவார்.

பி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தராகவும், தமிழகம் முழுவதும் உள்ள எண்ணற்ற பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் நிறுவனராகவும், காப்பாளராகவும் இருந்து வருகிறார். கல்வி, தொழில், சுகாதாரம், சமூக சேவைகள் மற்றும் சமூக நல்லிணக்கம் சார்ந்த துறைகளில் இவர் ஆற்றிய சேவைகளை அங்கீகரித்து கடந்த 2005 ஆம் ஆண்டு சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகம்,இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி,ராஜீவ் காந்தி,
முன்னாள் தமிழக முதல்வர்கள் எம்ஜிஆர் ,கலைஞர் கருணாநிதி ,ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களுடன் நல்ல நட்புடன் திகழ்ந்தவர்.
இவர் வறட்சியான மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளார்.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பொதுநலன்களுக்காக இலவசமாக வழங்கியுள்ளார்.இவரின் சேவைகளுக்கு அளவில்லை.

Comments

comments

5 comments

 1. Inna lillahi Wa Inna ilaihi raajioon

 2. To Allah we belong and to Allah we return
  May Allah forgive his sins and grant him Jennah Al Firdows

 3. Ismail Sheik Abdulla

  The great vision dr Abdula rahman, innalilahi wa innaalika rajuwoon.

 4. May god forgive him &enter him into paradise.

 5. எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்’ எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது. ஆமீன்!

  உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

  குவைத்தில் வரும் வெள்ளிக்கிழமை (09.01.2015) அன்று K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு அன்னார் அவர்களின் சேவைகள் நினைவு கூறப்பட்டு, மறுமை வாழ்வின் வெற்றிக்காக சிறப்பு துஆ செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்.

  நன்றி! வஸ்ஸலாம்.

  அன்புடன்….
  மவ்லவீ அல்ஹாஜ் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ – தலைவர்
  மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., – பொதுச் செயலாளர்
  மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்.
  குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
  குவைத்.

  துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் அலைபேசி: (+965) 97 87 24 82
  மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
  இணையதளம்: http://www.k-tic.com
  யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
  முகநூல் (Facebook) பக்கம் : https://www.facebook.com/q8tic
  முகநூல் (Facebook) குழுமம் : https://www.facebook.com/groups/q8tic
  நேரலை (Ustream): http://www.ustream.tv/channel/ktic-live

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *