பா.ஜனதா பிரமுகர் தந்தையுடன் வெட்டப்பட்ட சம்பவம்:

ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மலைமேகம் என்பவருடைய மகன் அஸ்வின்குமார் (வயது 30). அப்பகுதியில் பா.ஜ.க. செயலாளராக உள்ளார். செல்போன் கடையும் வைத்து நடத்தி வருகிறார்.

இவர் காட்டுப்பிள்ளையார் கோவில் தெருவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பெண்கள் மதரசா பள்ளி தொடர்பாக எதிர்மறையான கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அஸ்வின்குமாரை முகநூலில் விமர்சனம் செய்த சிலர் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

இதுபற்றி அஸ்வின்குமார் கொடுத்த புகாரின்பேரில் ராமநாதபுரத்தை சேர்ந்த சாகுல்ஹமீது மகன் ஜாபர்சாதிக் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அரிவாள் வெட்டு

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 6 பேர் கொண்ட கும்பல் அஸ்வின்குமாரின் கடையை சேதப்படுத்தியதோடு, அவரையும், அவரது தந்தையையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதிக்கப்பட்டார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் source. Daily thanthi

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *