baraath

இன்று (02/06/15) கீழக்கரையில் புனித பராஅத் இரவு!

இன்று (02/06/15) புனித பராஅத் இரவு கீழக்கரை பள்ளிவாசல்களில் சிறப்பாக நடைபெற இருக்கிறது. இதன் தொடர்பாக அனைத்து பள்ளிவாசல்களிலும்  மஃரிப் தொழுகைக்கு பிறகு 3 யாசீன் சூறா ஓதி பிரார்த்தனை செய்யப்படும். இஷா தொழுகைக்குப் பிறகு சிறப்பு பயான் மற்றும் தஸ்பீஹ் தொழுகை நடைபெறும்.

கீழக்கரை ஓடக்கரைப் பள்ளியில் மஃரிப் தொழுகைக்கு பிறகு 3 யாசீன் சூறா ஓதி பிரார்த்தனை செய்யப்பட இருக்கிறது, இஷா தொழுகைக்குப் பிறகு நாகை மாவட்டம் நீடுர் மிஷ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி பேராசிரியர் மெளலவி ஹாபிழ் புஹாரி மெளலானா அன்வாரி எம்.ஏ., எம்.ஃபில் சிறப்புரை ஆற்றுகிறார்கள். இரவு 11:30 மணி அளவில் தஸ்பீஹ் தொழுகை நடை பெற இருக்கிறது அனைவரும் கலந்து பயன் பெறுமாறு ஜமாஅத் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *