vaalaippoovadai

வாழைப்பூவின் மருத்துவ குணங்களும் வாழைப்பூ வடையும்!

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்!

bannanaflowerவெட்ட வெட்ட மீண்டும் துளிர்­விடும் வாழை மரத்தின் பயன்­பா­டுகள் எண்­ணி­ல­டங்­கா­தவை. இதில் வாழைப்­பூவும் முக்­கிய அங்கம் வகிக்­கின்­றது. வாழைப்­பூவை உண­வாக இரு­வாரம் உட்­கொண்டால் இரத்­தத்தில் கொழுப்­புத்­தன்மை, பசைத்­தன்­மைகள் குறைந்து இரத்த ஓட்டம் சீர­டையும். இரத்த ஓட்டம் சீர­டையும் பட்­சத்தில் ஆக்­ஸிஜன், இரும்­புச்­சத்து அதி­கப்­ப­டி­யாக உட்­கி­ர­கிக்­கப்­ப­டு­வதால் இரத்தச் சோகை என்­பது தலை தூக்­காது. துவர்ப்பு தன்­மையை தன்­ன­கத்தே அடக்­கி­யுள்ள வாழைப்பூ இரத்­தத்தில் கலக்கும் அதிக அளவு சர்க்­க­ரையை கூட மட்­டுப்­ப­டுத்தும்.
இன்­றைய மாறு­பா­டான உணவு முறை பழக்கம், மன உளைச்­சலால் ஏற்­படும் செரி­யாமை இவை­களால் வாயு சீற்றம் அதி­க­மாகி வயிற்றில் புண்கள் ஏற்­பட வாய்ப்புண்டு. இப்­புண்கள் ஆற வாழைப்­பூவை குறைந்­தது மாதத்­துக்கு 5 நாட்கள் சமைத்து உண்­ணலாம். மூல நோய்கள், இரத்தம் வெளி­யே­றுதல், உள் மூல – வெளி மூல புண்கள், கடுப்பு, மலச்­சிக்கல், சீத­பேதி, வாய்ப்புண், வாய்­துர்­நாற்றம் போன்­ற­வை­க­ளை நிவா­ர­ண­மாக்கும் தன்­மையை தன்­ன­கத்தே கொண்­டது வாழைப்பூ. பெண்­க­ளுக்கு ஏற்­படும் கர்ப்­பப்பை கோளாறு, மாத­விடாய் பிரச்சி­னை­களை களைந்­தெ­றியும் தன்மை கொண்­டது.மொந்தன், பாளை­யங்­கோட்டை வகை­களின் வாழைப்பூ உண்­பது சால சிறந்­த­தாகும்.

 

வாழைப்பூ வடை
vaalaippoovadai

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ – 1
கடலைப்பருப்பு ௱ கிராம்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
மஞ்சள் தூள் -ஒரு சிட்டிகை
உப்பு -தேவையான அளவு
சோம்பு- 1/4 தேக்கரண்டி
எண்ணை-தேவையான அளவு

செய்முறை
* வாழைப்பூவை நடு நரம்பு நீக்கி சுத்தம் செய்து கொதி நீரில் சிறிது நேரம் போட்டு வைத்து விட்டு நீரை பிழிந்து விட்டு பூவை ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளவும்.

* கடலைப்பருப்பை 1/4 மணி நேரம் ஊற வைத்து கரகரப்பாக அரைக்கவும்.

* வெங்காயத்தை அரிந்து வைக்கவும். சோம்பை பொடித்து வைக்கவும்.

* பின் அரைத்த வாழைப்பூவுடன் கடலைப்பருப்பு,வெங்காயம்,உப்பு,மஞ்சள் தூள், பொடித்த சோம்பு,கலந்து வடைகளாக தட்டி எண்ணையை மிதமான சூட்டில் காயவைத்து போட்டு எடுக்கவும்.

* சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.இதைசாதத்திற்கும் சாப்பிடலாம்,மாலை நேர சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம்.

Comments

comments

One comment

  1. K.S.A.ஜமாலுதீன்

    வாழைப்பூ வடை என்பதை விட, வாழைப்பூ கூட்டு என்பது சிறந்ததாகத் தெரிகிறது. காரணம் எண்ணையில் பொரித்த வகைகள் கொழுப்பை இன்னும் கூட்டும்.

    சீனாவில் விற்கக்கூடிய காய்ந்த திராட்சைப் பழங்கள் சாப்பாட்டிற்கு முன்பும்/பின்பும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் “மூல நோய்களை” விரட்டியடிக்கலாம், அந்த நேரத்தில் உணவில் உரைப்பைக் [chilly items] குறைத்துக்கொள்ளனும் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *