கீழக்கரை இஸ்லாமி பைத்துல் மாலின் வெள்ளி விழா

baithulmalசீர்மிகு கீழக்கரையின் சிறப்பிற்கும்,சேவைக்கும் தனது பங்கினை கால் நூற்றாண்டைக் கடந்து, தொடர்ந்து சேவையாற்றி வரும்  கீழக்கரை இஸ்லாமி  பைத்துல் மாலின் வெள்ளி விழா வரும் 27-12-2013 வெள்ளிக் கிழமை மாலை 4 மணியளவில் வள்ளல் சீதக்காதி சாலை கண்ணாடி வாப்பா கல்யாண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. அதில் கீழக்கரையின் அனைத்து ஜமாஅத்தைச் சார்ந்தவர்களும் கலந்து கொள்ளும்படி   அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

25 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் கீழக்கரை இஸ்லாமி  பைத்துல் மாலின் சேவையின் பயனாக ஆயிரக்கணக்கானவர்கள்  பலன் அடைந்துள்ளார்கள், பல கோடி ரூபாய்கள் செல்வந்தர்களிடம் இருந்து பெறப்பட்டு அதை பெற தகுதியானவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சீரிய விழாவில் கீழக்கரையின் அனைத்து ஜமாஅத் முக்கிய பிரமுகர்களும் உலமா பெருமக்களும்  உரையாற்ற உள்ளார்கள் மேல் விபரங்களை இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் காணலாம்.

baithlmal1baithumal2baithumal3

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *